செவ்வாய், 20 அக்டோபர், 2015

பிரியங்கா காந்தியை அரசியல் வாரிசாக்க விரும்பிய இந்திரா காந்தி- மூத்த காங். தலைவர் பொடேதார்

எம்.எல். பொடேதார் "Chinar Leaves" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் வரும் 30-ந் தேதியன்று டெல்லியில் வெளியிடப்பட உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் விவரம்: 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்தியில் இந்திரா காந்தி காஷ்மீரத்துக்கு சென்றிருந்தார். இந்து கோவில் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தனக்கு மரணம் நெருங்குவதை குறிப்பிட்டு அவர் பேசினார். அப்போது பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும்.. அவர் நீண்டகாலம் சக்திவாய்ந்த தலைவராக வலம் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இந்திரா. Indira preferred Priyanka as her political successor, says ML Fotedar சோனியாவை அரசியல் வாரிசாக்க இந்திரா விரும்பவில்லை. இது தொடர்பாக 1991ஆம் ஆண்டு ராஜிவ் படுகொலைக்குப் பின்னர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் இதை சோனியா ஏற்கவில்லை. 1990ஆம் ஆண்டு வி.பி.சிங் அரசு கவிழ்ந்த போது ராஜிவ் காந்தி பிரதமராவதற்கு ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பிரணாப் முகர்ஜியை பிரதமராக்கிவிடலாம் என விரும்பினார். 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு ஓட்டில் தோற்றபோது மன்மோகன்சிங்கை பிரதமராக்க சோனியா முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் மாதராவ்சிந்தியாவோ, அமர்சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மூலமாக மன்மோகன்சிங் பிரதமராவதைத் தடுக்கும் லாபிகளை மேற்கொண்டார். ராஜிவ் காந்தி பிரதமரானபோது உறவினரான அருண்நேருதான் அவருக்கு பக்கபலமாக இருந்தார். ஆனால் சோனியாவும் சதீஷ் சர்மாவும் அருண்நேருவுக்கும் ராஜிவ் காந்திக்கும் இடையே விரிசலை திட்டமிட்டு ஏற்படுத்தியவர்கள். இவ்வாறு பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக