ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தமிழ் நடிகர் சங்கம்...பயந்து போன ரஜினியும் கமலும் முறையே தமிழ்நாடு நடிகர்...இந்திய நடிகர்..Blah Blah Blah....

தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை எங்கே தமிழ் நடிகர் சங்கம்  என பெர்யர் மாற்றி விடுவார்களோ என்று ரஜினி பயந்து அவசரம் அவசரமாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிறார், இதே பயத்தில் கமலஹாசனோ ஒரு படி மேலே போயி இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிறார். மகளின் மார்கெட் வடக்கில் கொடிகட்டி பறக்கிறது பின்னே...சினிமா ரசிகன் மட்டும் தமிழனாக இருக்கட்டும் மிச்சம் மீதி எல்லாம்..... தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே வாக்குச்சாவடிக்கு நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை கௌதமியுடன் வாக்களிக்க வந்த நடிகர் கமல்ஹாசன், தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பிய சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம். அதே ஆசையுடன் அதனை மீண்டும் உருவாக்க வேண்டும். அது கூடிய விரைவில் நடக்கும். என்னைப் பொறுத்தவரையில் தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு பின்னர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார். முன்னதாக, வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதை முதலில் செய்யுங்கள் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக