செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஸ்டாலின்:எம் எல் ஏக்களை மக்களே பதவிநீக்கம் செய்யும் சட்டம் கொண்டுவருவோம்!

விருத்தாசலம்:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மக்களை சந்திக்காத மக்கள் பிரதிநிதிகளை, மக்களே பதவி நீக்கம் செய்யலாம் என, சட்டம் கொண்டு வர உறுதியாக உள்ளோம்'' என, ஸ்டாலின் கூறினார்.
'நமக்கு நாமே' சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில், மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் பேசியதாவது: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய, பெண்களுக்கு, 25 சதவீத மானியத்துடன், 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் என்ன ஆனது.


ஜெ., அரை மணி நேர முதல்வராக உள்ளார். 10 நாட்களுக்கு ஒருமுறை கோட்டைக்கு வரும் அவர், 40 நிமிடங்களில் திட்டங்களைத் துவக்கி வைத்து, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க் கள் என யாரும் மக்களை சந்திப்பதில்லை. எங்கள் ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செய்துள்ளதால் தான், நான் தைரியமாக, திறமையாக, திமிராக உங்களை சந்திக்க வருகிறேன்.

தி.மு.க., ஆட்சிக்கு வந் தால், கவுன்சிலர் முதல் முதல்வர் வரை, மக்களை சந்திக்காதவர்களை, மக்களே பதவி நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கொண்டுவர, நாங்கள் உறுதியாக உள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக