புதன், 21 அக்டோபர், 2015

டப்பிங் தலைவர் ராதாரவி இனி விஷால் அணிக்கு குடைச்சல் கொடுப்பார்...பிரச்சனை இன்னும் ஓயவில்லை.

அதிகபட்சம் 3000 ஓட்டுகள்தான் என்றாலும் ஒரு மாதத்திற்கும் மேலான பிரச்சாரம், அதிரடி குற்றச்சாட்டுகள், மேடை சீறல்கள், பணபலம், புஜபலம், மொத்த தமிழகத்தையும் கட்டி இழுத்துப் போட்ட மீடியாக்களின் லைவ் கவரேஜ் என அரசியல் தேர்தல் களத்துக்கு கொஞ்சமும் குறையாமல், சில நேரங்களில் அரசியலையும் மிஞ்சும் வகையில் நடந்து முடிந்துள்ளது நடிகர் சங்கத் தேர்தல்>தொடரும் சிக்கல்கள்>டைரக்டர்கள் சங்கத் தலைவர் விக்ரமனும், செயலாளர் ஆர்.கே.செல்வமணியும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் பேசினார்கள்.""சரத் டீமும், விஷால் டீமும் பேசுற பேச்சுல பப்ளிக் மத்தியில சினிமா பில்டப் பத்தியே அவர்ஷன் வந்துருச்சு. ரெண்டு டீமையும் சமாதானப்படுத்த நாமெல்லாம் சேர்ந்து நடவடிக்கை எடுக்கணும்'' என கேட்டுக் கொண்டனர்.

ஃபெப்சியும் சமாதான நடவடிக்கையை விரும்பியதால் தயாரிப்பாளர் சங்கம் சமாதான அறிக்கை விட்டது. "ரெண்டு அணியும் வாங்க பேசிக்கலாம்' என்றது."நீங்க எதுக்கு சமாதானம் பேசுறீங்க?' என தாணுவிடம் தொலைபேசியில் டென்ஷனான விஷால்... தன் அணி சார்பில் ஒரு கடிதம் அனுப்பினார்."சமாதானத்துக்கு வரமாட்டோம். ஜன நாயக ரீதியில் தேர்தலை சந்திப்போம்' என விபரம் பேசிய அந்த கடிதத்தில் பெறுநர் முகவரியில் "மிஸ்டர் தாணு-சென்னை' என்று மட்டும் இருந்தது. "தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவரா இருக்கிறவரை... அந்தச் சங்கத்துக்கு எழுதும்  கடிதத்தில் இப்படித்தான் குறிப்பிடு வதா?' என அங்கே உடைந்தது முதல் சமாதான முயற்சி.இதனால் சரத் அணியை தயாரிப்பாளர் சங்கம் ஆதரிக்க நடிகர் சங்கப் பிளவு... இண்டஸ்ட்ரியின் பிளவாக மாறியது.சமாதான முயற்சிக்கு முதல் முயற்சியை எடுத்த டைரக்டர் சங்கம்... அது முடியாமல் போனதால் "எந்த அணிக்கும் ஆதரவில்லை. நடுநிலை!' என ஒதுங்கிக் கொண்டது. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் விடாப்பிடியாக  இருந்தது."இப்பவே விஷால் போக்கு இப்படி இருந்தா... ஜெயிச்சபின்னாடி அவர் தயாரிப் பாளர் சங்கத்துக்கு ஒத்துழைக்க மாட்டார்' என்று பிரச்சாரம் செய்தது தயாரிப்பாளர் சங்கம்.விஷால் அணி வென்று விட்டது. இனி தயாரிப்பாளர் சங்க மூவ் எப்படி இருக்கும்?இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்கள் பிரச்சினை இல்லாமல் வருவதில்லை. அப்படி விஷால் அணி ஹீரோக்களின் படங் களுக்கு பிரச்சினை வரும்போது தயாரிப்பாளர் சங்கம் வேடிக்கை தான் பார்க்கும்.
டப்பிங் குரலின் பலம்!

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகம் மீது அதிருப்தியில் இருக்கும் விஷால்... இனி தயாரிப்பாளர் சங்கத்தில் குழப்பம் விளைவிப்பார்.இது ஒரு புறமிருக்க... ராதாரவியின் கட்டுப்பாட்டிலோ... இல்லையென்றால் அவருக்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டிலோதான் "தென்னிந்திய திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம் இதுவரை இருக்கிறது.இந்த சங்க உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஏற்கனவே நிர்வாகத்திற்கு எதிராக... அதாவது தலைவராக இருக்கும் செல்வராஜுக்கு எதிராக வழக்கெல்லாம் போட்டுள்ளனர்.சொந்தக் குரலில் பேசும் ஹீரோக்களாக இருந்தாலும் இந்தச் சங்கத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என கடுமை காட்டி வருகிறார் ராதாரவி.சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலில் ஆதரவு கேட்டு விஷால் அணியினர் கமலைச் சந்தித்த போது, ""நான் நடிக்கிறேன், அதற்கேற்ப பேசுறதும் நடிப்புதான். ஆனா என்னை டப்பிங் யூனியன்ல சேரணும்னு டார்ச்சர் பண்றாங்க. "நீங்கள்லாம் எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில எனக்கு கீழ தான்டா இருக்கணும்' என்பது போல் இருக்கு ராதாவியோட நடவடிக்கை' என பொருமி யிருந்தார்.அப்போதே தனது அணியினருடன் ஆலோசித்த விஷால்... "நடிகர் சங்கத் தேர்தல் முடிஞ்சதும் அடுத்து டப்பிங் யூனியன்  தேர்தல்ல புகுந்து கலக்குறோம்' எனச் சொல்லியிருக்கிறார்.கடந்த 30 வருடங்களாக நடிகர் சங்கத்தில் தலைவராகவும், செயலாளராகவும் ஜெயித்தே பழக்கப்பட்ட ராதாரவி இந்த முறை... முதன்முறையாக தோல்வியை சந்தித்திருக்கிறார் விஷால் மூலம்.அடுத்து டப்பிங் யூனியனையும் விஷால் குறிவைப்பது ராதாரவிக்கு தெரியும். அப்படி செக் வைக்கும் போது... விஷால் அணியின் நடிகர் சங்க செயல்பாடுகளுக்கு ராதாரவி             செக் வைப்பார்.ஆக சண்டை இன்னும் முடியவில்லை... என்கிறார்கள் விஷயமறிந்தவர்களும், விஷாலை அறிந்தவர்களும், ராதாரவியை அறிந்தவர்களும்.

அரங்கேறிய டிராமா!


"திருவிழா போல் நடந்தது தேர்தல்' என தலைவர் நாசரும், "கடும் போட்டியிருந்தும் அசம்பாவிதமில்லாமல் நடந்தது தேர்தல்' என பொருளாளர் கார்த்தியும், "சிறப்பாக நடந்தது தேர் தல்' என செயலாளர் விஷாலும் தெரிவித்தனர்.ஆனால் ஓட்டுப்பதி வின் போது மதியம்... தன்னை அடித்துவிட்ட தாக குற்றம் சாட்டி மயக் கம் போட்டார் விஷால். கேரவனில் ரெஸ்ட் எடுத்தார்.உண்மையில் அப்போது என்ன நடந்தது?சங்கீதா ஓட்டுப் போட வந்தபோது... வாக்குப்பெட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருக்க... "இங்கு நின்று பேச வேண்டாம்' என சரத் சொல்ல..."நீங்க யார்? நீங்களும் ஒரு வேட்பாளர். இதைச் சொல்ல உங்களுக்கு ரைட்ஸ் இல்லை' என சங்கீதா சொல்ல... இதனால் தகவலறிந்து விஷால் உள்ளே வந்தார். அப்போது நெரிசலும் அதிகமாக... இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் தன்னை அடித்து விட்டதாக சிம்பதி கிரியேட் பண்ணிவிட்டார் விஷால்.

ஒப்பந்தத்தின் கதி?

""உடைந்தது உடைந்ததுதான். யார் ஜெயிச்சாலும் பிளவு பிளவுதான். இனி இரு தரப்புக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட வாய்ப் பில்லை. ஒற்றுமை ஏற்படாது'' என பகிரங்க மாகச் சொன்ன சரத்... தேர்தல் முடிவுக்குப் பின்... ""நாசர், விஷால் அணியினர் எடுக்கும் முடிவு களுக்கு ஒத்துழைப்பேன். நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்!'' என்றார்.நாசரும் ""தேர்தலுக்கு முன் நாங்கள் கருத்து வேறுபாடு கொண்டு பேசியது உண்மைதான். இனி... நாங்கள் இணைந்து செயல்படுவோம்!'' என்றார். ஆனால் நடிகர் சங்க இடத்தில் கட்டி டம் கட்டுவது சம்பந்தமான பிரச்சினையில் ஒற்றுமை ஏற்படுமா?""நல்ல நோக்கத்துடன் தான் எஸ்.பி.ஐ. நிறுவனத் துடன் நடிகர் சங்க கட்டிட ஒப்பந்தம் போட்டோம். இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கை பூச்சி முருகன் வாபஸ் பெறணும். நாசர் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து செயல்படுத்தணும்!'' என சரத் கேட்டுக் கொண்டார். ஆனால் விஷால் அணியின் பிரச்சாரத்தில் பிரதானமே... ""நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு விட்டுத்தர மாட்டோம். அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். நாங்களெல்லாம் சேர்ந்து படம் எடுத்து அந்த லாபத்தில் நமக்கான கட்டிடத்தை நாமே கட்டுவோம்!'' என்பதுதான்.அதனால் 29 வருட குத்தகையாக தனியாருக்கு நடிகர் சங்க இடத்தை கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை விஷால் டீம் ரத்து செய்யும் என சரத்-ராதாரவியை நம்பி ஒப்பந்தம் போட்ட நிறுவனம் பீதியடைந்துள்ளது.

தோற்றாலும் பலம்தான்

"ராதாரவியின் மிகப்பெரிய பலமே... நாடக நடிகர்களின் வாக்கு வங்கிதான். ஆனால் அந்த வங்கியில் தனது செல்வாக்கை கொஞ்சம் டெபாசிட் செய்திருக் கிறார் விஷால்' என ஏற்கனவே சொல்லியிருந்தோம்.அதுதான் விஷால் டீமின் "போட்டுத் தாக்கிய' வெற்றிக்கு காரணமாகிவிட்டது. அத்துடன் ராதாரவி யின் தடாலடி பேச்சால் கடுப்பிலிருந்த சினிமா நட் சத்திரங்கள் ஓட்டு பரவலாக விஷால் டீமிற்கு கிடைத் தது. கில்லி மாதிரி சொல்லியடிச்சு வெற்றியைப் பெற்றிருக்கிறது' விஷால் டீம். அதேசமயம்... சரத் அணியும் ஈஸியாக தோற்றுவிடவில்லை. கடுமையாகப் போராடித்தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.அதைத்தான் ஓட்டு வித்தியாசம் காட்டுகிறது. நாசர் தலைவராக விரும்பியவர்கள் 1344 பேர்கள். சரத் தலைவராக விரும்பியவர்கள் 1231 பேர்கள். ஆக... எதிரணியும் சம பலத்துடன் இருந்திருப்பதை ஜெயித்தவர்கள் உணர்ந்து... தங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்கள் நடிகர்-நடிகையர்.

வீழ்த்தி வென்றவர்கள்

மொத்த வாக்குகள் 3139 பதிவான வாக்குகள் 2607 தலைவராக நாசர் (1344 வாக்குகள்), செயலாளராக விஷால் (1445), பொருளாளராக கார்த்தி (1493), துணைத் தலைவர்களாக கருணாஸ் (1362), பொன்வண்ணன் (1235) ஆகிய பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.சரத் (1231), ராதாரவி (1138), எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் (1080), சிம்பு (1107), விஜயகுமார் (1115)  ஆகிய ஐவரும் இவர்களிடம் தோற்றனர்.
-இரா.த.சக்திவேல்
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின் & அசோக் vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக