வியாழன், 22 அக்டோபர், 2015

மும்பை: R.S.S. சீருடையில்மத்திய மந்திரி நிதின் கட்காரி, முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசு டிவியில் நேரலை

1925ஆம் ஆண்டு விஜய தசமி அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதனையொட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் உள்ள பாஜக அரசின் செயல்பாடுகள் பாராட்டக் கூடிய வகையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை மாறி தற்போது புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றார். மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தத்துவம். ராம ராஜ்ஜியம் என்பதே தங்களின் விருப்பம் என்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது சர்ச்சையாக மாறி உள்ள நிலையில் செய்தியின் அடிப்படையிலேயே ஒளிப்பரப்பு செய்யப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் மோகன் பகவத் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையாக வெடித்தது nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக