செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஆப்பிரிக்காவில் 8,300 செல்போன் டவர்களை விற்ற ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமாக இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.68,134 கோடி நிகர கடன் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கடனை சரிகட்டும் விதமாக ஆப்பிரிக்காவில் உள்ள 7 நாடுகளில் ஏர்டெல்லுக்கு சொந்தமான சுமார் 8,300 செல்போன் டவர்களை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், அவற்றை விற்பனை செய்ததை இன்று உறுதிப்படுத்தியுள்ளது ஏர்டெல். ஆப்பிரிக்காவில் மட்டும் 14 ஆயிரம் செல்போன் டவர்கள் ஏர்டெல்லுக்கு இருக்கிறது. இது ஏர்டெல்லின் மொத்த டவர் எண்ணிக்கையில் 60 சதவீதமாகும். டவர் பிசினஸில் இருந்து வெளியேற முடிவு செய்ததால் ஏர்டெல் 8,300 டவர்களை விற்றுள்ளது.
தற்போது விற்பனை செய்துள்ள டவர்களின் மதிப்பு ரூ.11 ஆயிரம் கோடியாகும். மீதமுள்ள டவர்களும் விரைவில் அழிக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக