ஞாயிறு, 18 அக்டோபர், 2015

கஸ்தூரி கை துண்டிப்பு: சவுதி புது கதை அளக்கிறது!

ரியாத்:'தமிழகத்தைச் சேர்ந்த கஸ்துாரி என்ற பெண், மாடியில் இருந்து குதித்து, தப்ப முயன்றபோது தான் கையை இழந்தார்; அவர் கையை வெட்டவில்லை' என, சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.வேலுாரைச் சேர்ந்த கஸ்துாரி முனிரத்தினம், 56, என்ற பெண், சவுதி அரேபியாவுக்கு, வீட்டு வேலை பார்க்க சென்றிருந்தார். அங்கு, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அவர், அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அதை தடுக்க நினைத்த, கஸ்துாரி வேலைபார்த்த வீட்டின் எஜமானி, கஸ்துாரியின் கையை வெட்டியுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்துாரி, அங்குள்ள ஊழியர்களின் துணையுடன், தனக்கு நேர்ந்த கொடுமையை, 'வாட்ஸ் அப்' மூலம், தமிழகத்தில் உள்ள தன் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.  Saudi Arabia " - வை சொந்த தாய் நாடு போல இங்கு வந்து பீலா விடுபவர்களிடம் கேளுங்கள். மெத்த படித்த மேதவிகள், ஈரான் , இராக் என எந்த நாடாக இருந்தாலும் அவர்களின் பார்வையில் பிழைக்க வந்தவர்கள்தான். இவர்களின் நிலைமை கேட்கவே வேண்டாம்.
இதை அறிந்த மத்திய அரசு, இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன், 'விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்' என, சவுதி அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சவுதியின், ரியாத் போலீஸ் செய்தி தொடர்பாளர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கஸ்துாரி, இரண்டு மாதங்களுக்கு முன், ரியாத்தில் வீட்டுவேலைக்கு சேர்ந்துள்ளார். கடுமையான மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் இருந்து ரகசியமாக தப்பிக்க முயன்றுள்ளார். மூன்றாவது மாடி ஜன்னல் வழியே, சேலைகளை கயிறுபோல் கட்டி, அதை பிடித்தபடி இறங்கியுள்ளார். ஆனால், நடுவழியில் சேலை கிழிந்து, தரைதளத்தில் இருந்த, மின்சார ஜெனரேட்டர் மீது விழுந்துள்ளார். அதில், கஸ்துாரியின் வலது கை துண்டானது.
இந்த சம்பவத்தை பார்த்த, அக்கம்பக்கத்தினர் சாட்சி அளித்துள்ளனர்.

கஸ்துாரியை, வீட்டு எஜமானி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதை, அந்த மருத்துவமனை நிர்வாகமும் உறுதிபடுத்தியுள்ளது.தற்போது, இந்த வழக்கு, புலனாய்வு துறையின் விசாரணையில் உள்ளது. கஸ்துாரி குறித்து இந்திய ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளன.சவுதியில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, 'இஸ்லாமிய ஷரியத்' சட்டப்படி சமஉரிமை வழங்கப்படுகிறது, என்றார். ( சொன்னாங்க.......) தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக