ஞாயிறு, 18 அக்டோபர், 2015

உலகின் முதல் கார் வடிவிலான வாகனம்-500 கிலோ மீட்டர்...விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் மகன்!

சென்னை, அக்.18_ உலகின் முதல் கார் வடிவில் தயாரிக்கப்பட்ட வாகனம் கோவை- _ சென்னை இடையே 500 கிலோ மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளது.
உலகில் முதன் முதலாக 1886- ஆம் ஆண்டு இயந்திரத்தின் மூலம் இயங்கும் வாகனத்தை ஜெர்மனி நாட்டின் கார்ல் பென்ஸ் என்ற பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். 3 சக்கரங்களைக் கொண்ட இந்த வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். தமிழகத்தின் பிரபல விஞ்ஞானியான மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் 1886 ஆ-ம் ஆண்டில் முதலாவதாக தயாரான அந்த கார் வடிவிலான ஒரு வாகனத்தைத் தயாரித்தார். அந்த வாகனத்தின் 500 கிலோ மீட்டர் தூர சாதனைப் பயணம் கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 14- ஆம் தேதி மாலை தொடங்கியது. இந்த வாகனம், ஈரோடு, சேலம், விழுப்புரம் வழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தது.

மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்தக் காரை இயக்குவதற்காக 6 ஓட்டுநர்கள் நியமிக் கப்பட்டு, ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு ஓட்டுநர் என ஓட்டி வந்தனர். இதற்குத் தேவையான பென்சீன் எரிபொருள் மற்றொரு வேனில் கொண்டுவரப்பட்டது.
1886- ஆம் ஆண்டு முதல் கார் 194 கிலோ மீட்டர் தூரம் பயணித்தது பெரிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய வாகனம் முறியடித்துள்ளது. ஏற்கெனவே ஒரு முன்னோட்டமாக கடந்த ஜூன் மாதம் கோவையில் இருந்து சேலம் வரை 165 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தது.
நேற்று சென்னை வந்த அந்த வாகனம், தாஜ் கன்னிமாரா ஓட்டலில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. ஜெர்மனி நாட்டு தூதர் அச்சிம் பாபிக், தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாகி ஜி.டி.கோபால் ஆகியோர் அதனை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஜி.டி.கோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பழைமையான வாகனங்களைப்பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறோம். இதுவரை இந்த வாகனத் தில் 194 கி.மீ. கடந்ததே பெரிய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளோம்.
இது கின்னஸ் சாதனையில் இடம்பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். உலகின் அடுத்து, போர்டு நிறுவனத்தின் பழைமையான தயாரிப்பான குவாட்டிரி சைக்கிள் என்ற வாகனத்தை தயார் செய்து சோதனை ஓட்டம் செய்து வருகிறோம். விரைவில் அதையும் சாதனை பயணத்தில் பயன்படுத்த இருக்கிறோம் என்றார்.
இந்தக் கார் தயாரிப்புப் பணியில் உடனிருந்து உதவிய பொறியாளர்கள் க.இளம்பரிதி, கணேஷ், செந்தில்நாதன் மற்றும் குழுவினர்.
ஜி.டி.நாயுடுவை பாராட்டிய
தந்தை பெரியார்
மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பேரன்பைப் பெற்றவராவார். ஜி.டி.நாயுடு அவர்களின் கண்டு பிடிப்புகளைப் பெரியார் அவர்கள் கண்டு வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக