திங்கள், 19 அக்டோபர், 2015

சென்னை IIT யில் கேரளா மாணவன் தற்கொலை..30 ஆண்டுகளில் 68 IIT மாணவர்கள் தற்கொலை

சென்னை ஐஐடி-யில் மாணவர் ஒருவர் தனது ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் சென்னை ஐஐடி-யில் எலக்ட்ரீகல் என்ஜினீயரிங் நான்காம் ஆண்டு படித்து வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவரின் கடைசிக் கடிதம் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை.அம்மாணவரின் பெற்றோர் கேரளாவில் கொல்லத்தில் வசித்து வருகின்றனர். இன்று இரவுக்குள் அவர்கள் சென்னை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த மாதம் ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது சென்னை ஐஐடி மாணவர் நாகேந்திர ரெட்டி, தனது ஹாஸ்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். வேலை கிடைக்காத மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மற்றொரு மாணவரும் அதே போல் ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் தலை சிறந்த பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் ஐஐடியில் கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் சுமார் 68 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Read more at: http://tamil.oneindia.com/

1 கருத்து: