வெள்ளி, 23 அக்டோபர், 2015

கருப்பு பண பதுக்கலைவிட பருப்பு பதுக்கலே மக்களை அதிகம் பாதித்துள்ளது...ஒரு கந்துவட்டிகாரனின் ஸ்டேட்மென்ட்..

 தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பான்மையான இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருளான, புரதச்சத்து நிறைந்த பருப்பானது உணவுப்பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஏழை, எளிய மக்களின் அன்றாட உணவுப்பொருளான பருப்பின் விலை ரூ.50-லிருந்து ரூ.200-யாக உயர்ந்து நிற்கிறது.வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டுவந்து,இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மத்திய அரசு முதலில் இந்தியாவில் பருப்பு பதுக்கலை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் சுவையான பருப்பு உற்பத்திக்கு புகழ் பெற்றவை,பெயர் பெற்றவை.ஆனால் முறையான நீர்மேலாண்மை செய்யப்படாத காரணத்தால் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும் இம்மாவட்டங்களில் பருப்பு விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டதும் ஒரு காரணம்.
எனவே சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி,பருப்பை பதுக்கி, பருப்பின் விலையை உயர்த்தி பொதுமக்களிடம் அதிக இலாபம் பார்க்கும் வியாபாரிகளின் திட்டமிட்ட செயல் இது. எனவே மத்திய அரசும்,மாநில அரசும் இணைந்து எதிர்காலத்தில் இதுபோன்ற முக்கிய உணவுப்பொருள்களுக்கு தட்டுப்பாடு வராமல் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். குறிப்பாக சிறுதானியங்கள்,பருப்பு வகைகள் போன்றவை வாரச்சந்தைகளில் ஏழை,எளிய மக்களை எளிதில் சென்றடையும் வகையில் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு,தமிழகம் முழுவதுமுள்ள வியாபாரிகளின் கிடங்குகளை சோதனையிட்டு,பருப்பு தட்டுப்பாட்டிற்கான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் nakkheeran.in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக