ஞாயிறு, 18 அக்டோபர், 2015

விஷால் வெற்றி !1445 வாக்குகள் !நாசர் வெற்றி !1331 ! வாக்குகள் ! தோல்வியை ஒப்புகொள்கிறோம் ..ராதாரவி!

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி தவிர்த்த அனைத்துப் பதவிகளிலும் சரத்குமார் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் சரத்குமார் அணியின் வேட்பாளர்களே அனைத்துப் பதவிகளிலும் முன்னிலை வகித்தனர். குறைந்தது 200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். மொத்தம் 821 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் நேரடி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட உடனே விஷால் அணியினர் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் மட்டும் சரத்குமார் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அணியின் கார்த்தி முதலில் பின்தங்கியிருந்தார்.
ஆனால இப்போது அவர் சரத்குமார் அணியின் எஸ்எஸ்ஆர் கண்ணனை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே தபால் வாக்குகளை அனுப்பிய நாடக நடிகர்கள் பெருமளவு சரத்குமார் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் இருந்த சினிமா நடிகர்கள் பெருமளவு விஷால் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளன

Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக