சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை
செய்யப்பட்டது குறித்து ‘தர்மம் வெல்லும்‘ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை
அனைத்த திரையரங்குகளிலும் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிடுவதை ஏற்க முடியாது
என்றும், இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து
கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம்
விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
சனி, 1 ஆகஸ்ட், 2015
விமான விபத்தில் பின் லேடன் குடும்பத்தினர் பலி
பிரிட்டனில் ஹம்ஸியார் பகுதியில் விபத்துக்குள்ளன விமானத்தில் ஒசாமா
பின்லேடனின் குடும்பத்தினர் இருந்ததாக பிரிட்டனுக்கான சவுதி தூதரகம்
கூறியுள்ளது.
வெள்ளியன்று இந்த தனியார்
விமானம் பிளக்புஸி விமானநிலையத்துக்கு அருகே விழுந்து எரிந்ததில், அதன்
விமானி உட்பட அனைத்து மூன்று பயணிகளும் கொல்லப்பட்டனர்.
சவுதி தூதர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் அதில் கொல்லப்பட்ட பின்லேடன்குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்த பிரிட்டிஷ் புலனாய்வாளர்களை தாம் தொடர்புகொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
சவுதி தூதர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் அதில் கொல்லப்பட்ட பின்லேடன்குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்த பிரிட்டிஷ் புலனாய்வாளர்களை தாம் தொடர்புகொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
சசிபெருமாள் கழுத்தில் இருந்த கயிறை அகற்றாதது ஏன்?: சக போராளி ஜெயசீலன் கேள்வி
மதுக்கடைகளை உடனடியாக மூட
வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் செல்போன்
கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென
உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இந்நிலையில் போராட்டம நடைபெற்றபோது
உடனிருந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும் பாஜக பிரமுகருமான ஜெயசீலன்
செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதுக்கடையை அகற்ற கோரி மது போதை ஒழிப்பு மக்கள் இயக்கம்
சார்பில் இறுதிக்கட்ட போராட்டமாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு
செய்யப்பட்டது. அதன்படி காந்தியவாதி சசிபெருமாளும் நானும் கையில் மண்ணெண்ணை
பாட்டிலுடன் செல்போன் டவரில் ஏறினோம். பாதி தூரம் ஏறியதும் உடல் சோர்வு
காரணமாக நான் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் சசிபெருமாள் செல்போன்
டவரின் உச்சிக்கு சென்றார்.
சசிபெருமாள் செல்போன் டவரில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை எப்படி அனுமதித்தார்கள்?
மதுவுக்கு எதிராக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, காந்தியவாதி சசிபெருமாள்
பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரி
மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலை கடையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை
அகற்றக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது,
செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் மயங்கி விழுந்து
இறந்தார்.
அஞ்சலி- சசிப்பெருமாள் ! jeyamohan.:சாராயக்காசில்தான் அரசியலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது!
இன்றுகாலை பேருந்துக்காக நின்றிருக்கையில் அருகே ஒரு
மாந்தோட்டத்திற்குள் லுங்கியை தூக்கிக் கட்டிய ஒரு நடுத்தரவயது மனிதர்
கையில் ஹெல்மெட்டுடன் சென்றார். அவர் கையிலிருந்தது ஒரு பக்கெட் என்று
நினைத்த நான் கூர்ந்து பார்த்தேன். ஹெல்மெட்டை வைத்து உள்ளிருந்து இரண்டு
ஃபுல் ரம் புட்டிகளை எடுத்தார். குந்தி அமர்ந்து அவற்றைத்திறந்து
நேரடியாகவே வாயில் விட்டுக்கொண்டார். தண்ணீர்கூட இல்லை. தொட்டுக்கொள்ள
ஒன்றும் இல்லை. நேராக மடக் மடக். ஐந்தே நிமிடம். ஒருமுறை குமட்டியபின்
அருகே நின்ற ஏதோ ஒரு இலையைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு வந்து என்
அருகே நின்ற ஸ்கூட்டரை எடுத்தார்
மிகப்பழக்கமான காட்சி. ஆனால் தொடர்ந்து தொந்தரவு செய்தது. போனவருடம் அம்பசமுத்திரம் பகுதிகளில் கிராமங்களுக்குச் சென்றபோது வீடுவீடாக ஆண்கள் சும்மா இருப்பதைக் கண்டேன். பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
மிகப்பழக்கமான காட்சி. ஆனால் தொடர்ந்து தொந்தரவு செய்தது. போனவருடம் அம்பசமுத்திரம் பகுதிகளில் கிராமங்களுக்குச் சென்றபோது வீடுவீடாக ஆண்கள் சும்மா இருப்பதைக் கண்டேன். பெண்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
வெள்ளி, 31 ஜூலை, 2015
ஜெயலலிதாவை பொறுத்தவரை நீதிபதி தத்து ஓய்வு பெறுவதற்குள் வழக்கை ஊத்தி முடிவிடவேண்டும்என்ற.....
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி,
கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது. இந்த நாடகத்தின்
சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர்
செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார்.
எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக
வழக்கறிஞர்கள், சம்பந்தமே இல்லாமல், நீண்ட வரிசையில் நின்று, பார்வையாளர்
அனுமதிச் சீட்டு வாங்கி நீதிமன்ற அறை எண் 12க்குள் முண்டியடித்துக் கொண்டு
நின்றிருந்தார்கள்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழியும் என்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதென்றால், லட்சக்கணக்கில் செலவழியும். ஆனால் அப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து தொடுக்கப்பட்ட வழக்குகளை சில வினாடிகளில் தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ். அவரது அருகில் அமர்ந்திருந்த ஆர்.கே அகர்வாலோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தார். பத்தரை மணிக்கு கோர்ட் தொடங்கியதென்றால் பத்தே முக்கால் மணிக்குள் 26 வழக்குகளை முடித்திருந்தார் பினாக்கி. ஒவ்வொர வழக்கையும் எடுத்து, டிஸ்மிஸ், டிஸ்மிஸ் என்று சகட்டுமேனிக்கு தள்ளுபடி செய்து கொண்டிருந்தார். வழக்கறிஞர்களை பேசவே விடவில்லை. அவர்கள் பேசத் தொடங்கும் முன்பாகவே, “டிஸ்மிஸ்” என்று கூறிக் கொண்டிருந்தார். சில வழக்கறிஞர்கள் பேச முனைந்தபோது, “சாரி.. நோ… வி ஆர் சாரி. வி ஆர் டிஸ்மிஸ்ஸிங்” என்று மனுக்களை தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் கோஷ். ஒரு வழக்கறிஞர் “What I say may be appreciated” என்றார். “All right we are appreciating and dismissing” என்றார். இப்படித்தான் 26 வழக்குகளும் முடிக்கப்பட்டன.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழியும் என்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதென்றால், லட்சக்கணக்கில் செலவழியும். ஆனால் அப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து தொடுக்கப்பட்ட வழக்குகளை சில வினாடிகளில் தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ். அவரது அருகில் அமர்ந்திருந்த ஆர்.கே அகர்வாலோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தார். பத்தரை மணிக்கு கோர்ட் தொடங்கியதென்றால் பத்தே முக்கால் மணிக்குள் 26 வழக்குகளை முடித்திருந்தார் பினாக்கி. ஒவ்வொர வழக்கையும் எடுத்து, டிஸ்மிஸ், டிஸ்மிஸ் என்று சகட்டுமேனிக்கு தள்ளுபடி செய்து கொண்டிருந்தார். வழக்கறிஞர்களை பேசவே விடவில்லை. அவர்கள் பேசத் தொடங்கும் முன்பாகவே, “டிஸ்மிஸ்” என்று கூறிக் கொண்டிருந்தார். சில வழக்கறிஞர்கள் பேச முனைந்தபோது, “சாரி.. நோ… வி ஆர் சாரி. வி ஆர் டிஸ்மிஸ்ஸிங்” என்று மனுக்களை தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் கோஷ். ஒரு வழக்கறிஞர் “What I say may be appreciated” என்றார். “All right we are appreciating and dismissing” என்றார். இப்படித்தான் 26 வழக்குகளும் முடிக்கப்பட்டன.
சசிபெருமாள் மரணத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்: இளங்கோவன்
மது ஒழிப்பிற்காக நீண்டகாலமாக பல்வேறு முனைகளில்
அமைதியான முறையில் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் தமிழக
ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கு காரணமாக தமது உயிரை இழக்க வேண்டிய அவலநிலை
இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்
பகுதியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி செல்பேசி கோபுரத்தின் உச்சியில்
ஏறி தமது கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த துயர
சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்பேசி கோபுரத்தின் உச்சியில் 5 மணி நேரமாக
அமர்ந்து தமது கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்து போராட்டத்தில்
ஈடுபட்டபோது அவரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியாளர்களோ, காவல்துறையினரோ எந்த
நடவடிக்கையும் எடுக்க முன்வராததுதான் சசிபெருமாள் உயிரிழப்புக்கு முக்கிய
காரணமாகும். தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமிக்க ஆணவப் போக்கின் காரணமாகவே
அவர் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை இன்றைக்கு
ஏற்பட்டுள்ளது.
கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை
அமெரிக்காவில் “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்”
என்ன நடக்கும்? அவரை சந்தேக கேஸ் என்று போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்படி
தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அவரிடம் சந்தேகத்துக்குரிய வஸ்துகள் உள்ளனவா
என்று தேடிப் பார்க்கப்படுவார். போலீசுக்கு போதுமான பணிவையும்,
அடிபணிதலையும் காட்டா விட்டால், அவர் கைது செய்யப்படுவார். சிறையில் சில
நாட்கள் அடைக்கப்பட்டு உயிரிழப்பார்.
சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.
சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.
காந்தியவாதி சசிபெருமாள், மது ஒழிப்பு போராட்டத்தின்போது மரணம் அடைந்தார்
60
வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள் சேலம் மாவட்டத்தைச்சேர்ந்தவர். கடந்த
30 வருடங்களாக பூரண மதுவிலக்கு கோரி போராடிவந்தார். மதுவிலக்கு கோரி
பலமுறை உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
மார்த்தாண்டம்
அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை
அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். இந்த குழுவின்
மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு
மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர்.: தே.மு.தி.க.,வை விட கூடுதல் 'சீட்'கள்: காங்கிரஸ் அதிரடியால் தி.மு.க அதிர்ச்சி ?
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்தபடியாக, பெரிய கட்சி
நாங்கள் தான்' என, காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருவது, தி.மு.க.,
மேலிடத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இதுகுறித்து, கட்சி
வட்டாரங்கள் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்க்க,
பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி ஒன்றை, தன் தலைமையில்
அமைக்க வேண்டும் என, தி.மு.க., முயற்சிக்கிறது.அந்த அணியில்,
தே.மு.தி.க.,வையும், காங்கிரசையும் இணைக்க வேண்டும் என, திட்டமிட்டு,
அதற்கான காரியங்களில், தி.மு.க.,வினர் இறங்கி உள்ளனர்.ஆனால்,
விஜயகாந்த் தரப்பு, தி.மு.க.,வினருக்கு பிடிகொடுக்கவில்லை. இந்நிலையில்,
'தி.மு.க., கூட்டணியில் இடம் பிடிப்போம்' என்பது போல சொல்லி வந்த
காங்கிரசார், சமீபத்தில், திருச்சியில், ராகுலை வரவழைத்து நடத்திய
கூட்டத்திற்கு பின், தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பேச
ஆரம்பித்துள்ளனர். காங்கிரசில் தான் அனைவரும் தலைவர்களாக உள்ளனர்...தொண்டர்களை
காணோம்...திமுகவில் கருணாநிதி ஸ்டாலின் உட்பட ஒரு 8 தலைவர்கள்
தேறுவார்கள்...அதிமுகவில் அம்மா ஒருவர் மட்டுமே தலைவர்..சசிகலா துணை
தலைவர்...காங்கிரசில் அப்படியா? எல்லாருமே தலைவர்கள் ...அப்போ அவர்கள் தானே
பெரிய கட்சி..நியாயம் தான்..
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம்- மத்திய அரசு விரைவில் அறிவிப்பு
பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது இடங்களில் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை என பலரும் கூறி முகம் சுளிப்பது உண்டு.
பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கைவிட்டு, மறுவாழ்வு வாழத்தக்க விதத்தில் மத்திய அரசு திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
டெல்லி மேல்–சபையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பற்றி நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் துறை ராஜாங்க மந்திரி கிருஷன் பால் குர்ஜார் பதில் அளித்தார்.
அப்போது அவர், ‘‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பாக மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் என பல தரப்பினரையும் கூட்டி, தேசிய அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வியாழன், 30 ஜூலை, 2015
சினிமா பாடல்கள் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் விளையாட்டாகவே மாறிவிட்டது? அதிர்ச்சி தரும் உண்மைகள்!
கோடம்பாக்கம் பாத்திமாப் பள்ளிக்கு அருகிலுள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள்
நான் நுழையும்போது தினேஷ் கணினியில் ஏதோ ’நோண்டி’க்கொண்டிருந்தார். அதில் புதிதாக ’மெலோடைன்’ ( Melodyne) எனும் இசையுருவாக்க
மென்பொருளின் புத்தம் புது வடிவம் ஒன்றை பொருத்தியிருந்தார். அதன் மாய வித்தைகள்
செயல்முறை விளக்கம் காட்டுவதற்குதான் என்னை அழைத்திருக்கிறார்! பிரபல பாடகர் ஒருவர்
சற்று முன்பு பாடிவைத்துப் போன ஒரு பாடலை அந்த மென்பொருள் வழியாக கடத்தி விட்டு
அதை சின்னஞ்சிறு துணுக்குகளாக பிரித்தார். அதாவது அப்பாடலின் ஒவ்வொரு சுரங்களையும்
பல வண்ணங்களில் ஒலியலைக் கற்றைகளாக எனும் சுரங்களை கீழ் கீழாக
அடுக்கியிருக்கும் ஒரு சட்ட வடிவத்திற்குள், அந்தந்த சுரங்களுக்கு நேராக அந்த
பாடலின் துணுக்குக் கற்றைகள் ஆங்காங்கே நிற்கின்றன! இசையின் இலக்கணமும் மெலோடைன்
மென்பொருள் இயக்கு முறையும் நன்கு தெரிந்த தினேஷ் அந்த சுரங்கள் ஒவ்வொன்றையும் எலி
(Mouse) வைத்துப் பிடித்து
அங்கும் இங்கும் இடம் மாற்றி வைக்கிறார். அரைமணி நேரத்திற்குள் அதே குரலில் அந்த
பாடல்வரிகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு மெட்டாக ஒலிக்கத் துவங்கியது! சுருதியும்
தாளமும் எல்லாமே மாறிப் போனது! ஆனால் வரிகளுக்கோ பாடகனின் குரலுக்கோ எந்த
மாற்றமுமில்லை! நான் வாய் பிளந்துபோனேன்.
vinavu:ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வுதான் இந்தத் தீர்ப்பையும்....
யாகூப்
மேமன் தூக்கிலிடப்பட்டு விட்டார். இன்று – 30.07.2015 – காலை 7 மணிக்குள்
மேமனைத் தூக்கிலிடாவிட்டால், நீதி செத்துவிடும் என்று பதறிய உச்ச
நீதிமன்றம் இரவோடு இரவாக நீதி வழங்கி விட்டது.
“பவானிசிங்கின் நியமனம் செல்லாது, ஆனால் அவரை அரசு வழக்குரைஞராக
அங்கீகரித்து குமாரசாமி நடத்திய விசாரணை செல்லும்” என்று ஜெயலலிதாவுக்கு
தீர்ப்பு வழங்கிய நீதியரசர் தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வுதான் இந்தத்
தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது.
இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி,
இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும்
அதனை அடக்க முடியாது. பாரதிய ஜனதா மட்டுமல்ல காங்கிரசும், விசாரணை
நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான அனைவரும் இந்தக் குற்றத்தின்
கூட்டாளிகள்.
1994-ல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், (தற்போது கார்டியன் பத்திரிகையில் பணியாற்றுகிறார்) அவுட் லுக் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் – “இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!”
1994-ல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், (தற்போது கார்டியன் பத்திரிகையில் பணியாற்றுகிறார்) அவுட் லுக் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் – “இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!”
மியான்மரில் 6,966 கைதிகள் விடுதலை
மியான்மரில் 210 வெளிநாட்டவர் உட்பட 6,966 கைதிகள் விடுதலை
செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் நவம்பர் மாதம் அந்நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டின் அதிபர் இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பர்மாவைச் சேர்ந்த அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்களா என்பது தெளிவாகவில்லை. விடுவிக்கப்பட்டவர்களில், சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டுபவர்கள் 150 பேரும் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. இவர்கள் மியான்மர் அரசால் கைதுசெய்யப்பட்டது, சீன அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. சமீப காலமாக மியான்மர் அரசு இம்மாதிரியான பொது மன்னிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வரும் நவம்பர் மாதம் அந்நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டின் அதிபர் இந்த மன்னிப்பை வழங்கியிருப்பதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பர்மாவைச் சேர்ந்த அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட்டார்களா என்பது தெளிவாகவில்லை. விடுவிக்கப்பட்டவர்களில், சீனாவைச் சேர்ந்த மரம் வெட்டுபவர்கள் 150 பேரும் அடக்கம் என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. இவர்கள் மியான்மர் அரசால் கைதுசெய்யப்பட்டது, சீன அரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. சமீப காலமாக மியான்மர் அரசு இம்மாதிரியான பொது மன்னிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்! மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின்.......
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளி யாகூப் மேமனுக்கு
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் சிறையில் இன்று காலை 6.30 மணியளவில்
தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பின்னர் காலை 7.01 மணிக்கு யாகூப் மேமன்
உயிரிழந்ததை உறுதிப்படுத்தி மருத்துவர்கள் அறிவித்தனர்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி 13 இடங்களில்
தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றினர். இதில் 257 பேர்
படுகொலை செய்யப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர். சுதந்திர இந்தியாவின்
முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமன், பாகிஸ்தானில்
இருந்து வந்து நேபாளத்தில் இந்திய அதிகாரிகளிடம் சரணடைந்தவர். தம் மீது
எந்த குற்றமும் இல்லை என்பதற்காக யாகூப் மேமன் சரணடைந்திருந்தார். அத்துடன்
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பல திருப்பங்கள்
ஏற்படுவதற்கு காரணமாக பல்வேறு தகவல்களையும் வழங்கியிருந்தார்.
இருப்பினும் மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் தூக்கு
தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம்,
உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதனால் ஜனாதிபதியிடம் யாகூப் மேமன் கருணை மனுவைத் தாக்கல் செய்தார்.
இக்கருணை மனுவும் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி நிராகரிக்கப்பட்டது.
டாக்டர் அப்துல் கலாம் பற்றி சாருநிவேதா விமர்சனம் ! நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன்?
charuonline.comபல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் போன்ற மிகப் பெரிய பதவியில் இருக்கும்
நபர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அவர்களின் கருத்துக்கள் சமூகத்தின்
கடைநிலையில் இருக்கும் ஒரு பாமர மனிதனுக்குரியவையாகவே இருக்கக் கண்டு
திகைத்திருக்கிறேன். (சில உதாரணங்கள்: ராணுவ ஆட்சி வந்தா எல்லாம் சரியாப்
போய்டும் சார்; உங்களை டிவியில பார்த்திருக்கிறேன்; நீங்க புக்ஸ் கூட
எழுதியிருக்கீங்கிளா?; எதைப் பத்தி எழுதுவீங்க?; சிவாஜி மாதிரி நடிகன்
உலகத்துலேயே கிடையாது; நம்ப நாடு மாதிரி ஒலகத்துலயே கிடையாது சார்;
(கொஞ்சம் விவரம் தெரிந்தவராக, ஒன்றிரண்டு புக்ஸ் படித்தவராக இருந்தால்)
ரைட்டர்ஸ்லாம் ஏன் சார் சண்டை போட்டுக்கிறீங்க, ஒத்துமையா இருந்தா எவ்ளவோ
முன்னேற்லாம்.) இது போன்ற உளறல்களுக்கெல்லாம் காரணம், இலக்கியய வாசிப்பு இல்லை என்பதுதான். அப்படி இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் கூட
புத்தகம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்தப்
புத்தகங்கள் அதை எழுதியவர்களின் மிக உயர்ந்த சமூக அந்தஸ்தின் காரணமாக
லட்சக் கணக்கில் விற்கின்றன. இது எல்லாமே 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
ஒரு மகத்தான கலாச்சாரத்தின் வீழ்ச்சியின் குறியீடு. நம் அன்புக்குரிய
டாக்டர் அப்துல் கலாமும் அந்தக் குறியீடுகளில் ஒருவரே.
நான் ஒரு பயந்தாங்கொள்ளி. ஏய் என்று மிரட்டினாலே தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். எங்காவது அடிதடி என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். ஆனால் மற்ற பயந்தாங்கொள்ளிகளுக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசங்களில் முக்கியமானது என்னவென்றால், என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.
நான் ஒரு பயந்தாங்கொள்ளி. ஏய் என்று மிரட்டினாலே தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். எங்காவது அடிதடி என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். ஆனால் மற்ற பயந்தாங்கொள்ளிகளுக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசங்களில் முக்கியமானது என்னவென்றால், என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.
மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் பாடும்போது... M.S.Visvanathan
shajiwriter.blogspot.in
1999ல் எச் எம் வி இசை நிறுவனம் 'லெஜென்ட்ஸ்' என்ற தலைப்பில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசைத்தொகையொன்றை வெளியிட்டது. அதற்கு ஒரு தொலைக்காட்சி விளம்பரம் தயாரிக்கும் வேலை எனக்கு அளிக்கப்பட்டது. எம் எஸ் விஸ்வநாதனின் பேட்டித்துணுக்குகளும் அதில் இடம்பெற்றன. விஸ்வநாதனை நேரில் சந்திக்கும் அனுபவத்தைப்பற்றிய உள்ளக்கிளர்ச்சியுடன் நான் சென்னை சாந்தோம் ஹைரோடில் இருந்த அவரது இல்லத்துக்கு ஒளிப்பதிவுக்குழுவுடன் விரைந்தேன். நிச்சயிக்கபப்ட்ட நேரத்துக்கு முன்பே அவர் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்தார், வெள்ளையும் வெள்ளையும் உடையும் அவருடன் எபோதுமே இருக்கும் அந்த ஆர்மோனியமுமாக. மறக்கமுடியாத எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர்... இந்தியாவின் இணையற்ற இசைமேதைகளில் ஒருவர்... என் கண்முன் ரத்தமும் சதையுமாக உட்கார்ந்திருந்தார்.
யாக்கூப் மேமனின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்
மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற
தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர்
நிராகரித்துள்ளார்.
மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
முன்னதாக, புதன் கிழமையன்று காலையில் யாகூப் மேமன் தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. யாக்கூப் மேமன் தூக்கிலிடப்படக் கூடாது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் அளித்த மரண தண்டனைத் தீர்ப்பை, கருணைகாட்டி ரத்து செய்ய வேண்டும் என்று மேமன் அளித்திருந்த மனுக்கள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.
முன்னதாக, புதன் கிழமையன்று காலையில் யாகூப் மேமன் தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. யாக்கூப் மேமன் தூக்கிலிடப்படக் கூடாது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றங்கள் அளித்த மரண தண்டனைத் தீர்ப்பை, கருணைகாட்டி ரத்து செய்ய வேண்டும் என்று மேமன் அளித்திருந்த மனுக்கள் தோல்வியில் முடிவடைந்திருந்தன.
புதன், 29 ஜூலை, 2015
4 மாதங்களாக கூலி கிடைக்காமல் தவிக்கும் நெசவாளர்கள் !பல லட்சம் சேலைகள் தேக்கம்
கூட்டுறவுச் சங்க அதிகாரிகளின் மெத்தனத்தால், உற்பத்தி செய்யப்பட்ட பல
லட்சம் சேலைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், 4 மாதங்களாக கூலி கிடைக்காமல்
நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி
செய்யப்படும் சேலைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல்
செய்யப்பட்டு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப
அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பலுசிஸ்தான் ! பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடகுமா?
வாஷிங்டன்/இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில்
பிரச்சனைக்குரிய பகுதியான பலுசிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை
தாக்கல் செய்தனர். குடியரசு கட்சியின் உறுப்பினர் டானா ரொஹ்ராபாஷரின்
தலைமையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
பலூச்சிகளுக்கு சுய நிர்ணய உரிமைக்கும்,
இறையாண்மை மிக்க தேசத்தை உருவாக்கவும் உரிமை உண்டு என்று கூறும் தீர்மானம்,
பலுசிஸ்தான் வரலாற்று ரீதியாக ஒரு சுதந்திர பகுதி என்று
சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பிரதிநிதி சபையின் வெளியுறவு விவகார துணை
குழு தலைவரான ரொஹ்ராபாஷர், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் மனித
உரிமை மீறல்கள் குறித்து முன்னரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கார்வேண்டும் பெட்ரோல் வேண்டும் வீடும் வேண்டும்! முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பட்டீல் அலப்பறை /கோரிக்கை!
டெல்லி: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது
அவர் செயல்பட்ட விதம், அவர் பணியாற்றிய விதம் குறித்து இந்தியா முழுவதும்
மக்கள் விழுந்து விழுந்து உயர்வாகப் பேசிக் கொண்டுள்ள நிலையில் இன்னொரு
முன்னாள் குடியரசுத் தலைவர் குறித்த ஒரு செய்தி வெளியாகி சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த சலசலப்பில் சிக்கியுள்ளவர் பிரதீபா பாட்டீல். இவர் குறித்து சர்ச்சைகள் வெடிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கூட கலாம் மறைந்துள்ள இந்த நேரத்தில் இவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைதான் பலரையும் விமர்சனங்களை குவிக்க வைத்துள்ளது.
தனக்கென சொந்தமாக ஒரு அரசுக் கார் வேண்டும். அதேசமயம், தான் சொந்தக் காரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்குரிய எரிபொருள் செலவையும் மத்திய அரசே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளாராம் பிரதீபா பாட்டீல்
இந்த சலசலப்பில் சிக்கியுள்ளவர் பிரதீபா பாட்டீல். இவர் குறித்து சர்ச்சைகள் வெடிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கூட கலாம் மறைந்துள்ள இந்த நேரத்தில் இவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைதான் பலரையும் விமர்சனங்களை குவிக்க வைத்துள்ளது.
தனக்கென சொந்தமாக ஒரு அரசுக் கார் வேண்டும். அதேசமயம், தான் சொந்தக் காரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்குரிய எரிபொருள் செலவையும் மத்திய அரசே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளாராம் பிரதீபா பாட்டீல்
இலவசமாக கிடைக்கக்கூடிய விண்டோஸ் 10 இன்று வெளியாகிறது
கணினிப் பெருநிறுவனமான மைக்ரோஸாஃப்ட், தனது விண்டோஸ் கணினி இயக்க மென்பொருளின் புதிய வடிவமான விண்டோஸ் 10ஐ இன்று வெளியிடுகிறது.
தவிர இந்த மென்பொருளை அது தனது பாவனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
பி.சி.
எனப்படும் - மேஜையில் வைத்துப் புழங்கும் விதமான மற்றும் மடிக்
கணினிகளையும், கையில் வைத்து திரையை தொட்டு இயக்கும் விதமான 'டேப்லட்'
கணினிகளையும் இந்த மென்பொருள் இயக்கும்.
திறன் பேசிகளுக்கும், வீடியோ கேம் கருவிகளூக்கும், தலையில் மாட்டிக்கொள்ளும் ஹோலோகிராஃபிக் கருவிகளுக்கும் பிற்பாடு இந்த மென்பொருள நீட்டிக்கப்படும். பி.சி. வகை கணினிகளின் விற்பனை குறைந்து வருகின்ற ஒரு சூழலுக்கு தன்னைப் பொருத்திக்கொள்ள மைக்ரோஸாஃப்ட் திணறும் ஒரு நேரத்தில் இந்த புதிய மென்பொருள் வருகிறது என்று தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தவிர மைக்ரோஸாஃப்ட் காலூன்றத் தவறிய சிறு கணினிகள் சந்தையில், அது இந்த முறை கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.bbc.com/tamil
திறன் பேசிகளுக்கும், வீடியோ கேம் கருவிகளூக்கும், தலையில் மாட்டிக்கொள்ளும் ஹோலோகிராஃபிக் கருவிகளுக்கும் பிற்பாடு இந்த மென்பொருள நீட்டிக்கப்படும். பி.சி. வகை கணினிகளின் விற்பனை குறைந்து வருகின்ற ஒரு சூழலுக்கு தன்னைப் பொருத்திக்கொள்ள மைக்ரோஸாஃப்ட் திணறும் ஒரு நேரத்தில் இந்த புதிய மென்பொருள் வருகிறது என்று தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தவிர மைக்ரோஸாஃப்ட் காலூன்றத் தவறிய சிறு கணினிகள் சந்தையில், அது இந்த முறை கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.bbc.com/tamil
யாகூப் மேமனுக்கு நாளை காலை தூக்கு! மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி!
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை
விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணியளவில் தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநில கவர்னரிடம் அவர் தாக்கல் செய்த கருணை மனு, தண்டனையை
எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு ஆகியவை
இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து நாளை காலை 7 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் யாகூப் மேமன்
தூக்கிலிடப்படுவான் என நாக்பூர் சிறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன maalaimalar.com
தலிபான் தலைவர் முல்லா ஒமர் 2 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்
தலிபான் தலைவர் முல்லா ஒமர்,
தலிபான் தளபதிகளான. முல்லா அக்தர் முகமது மன்சூர் மற்றும் குல் அக்ஹா
ஆகியோரால் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான்
இஸ்லாமிய இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் குவாரி ஹம்சா கூறியுள்ளார்.
மேலும் ஹம்சா கூறும்போது ஒமர் இல்லை என நிரூபிக்க
போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். ஒமர் மரணம் குறித்து
ஆப்கானிஸ்தான் அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி அறிக்கை
தெரிவிக்கிறது.
எனினும் தலிபான் இதுவரை ஒமர் மரணம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.dinamani.com
ஜப்பான் தோசிபா நிறுவனத்தின் மோசடிகள்! ஊதிப்பெருக்கியும் (Inflated Profit) நட்டக்கணக்கு போலியாகவும் காட்டப்பட்டு?
2008-ல் முதலாளித்துவ சூதாட்டத்தால் விளைந்த
உலகப்பெருமந்தத்தில் சந்தைகளும், சிறுமுதலீட்டாளர்களும், பலநாட்டின்
அரசுகளும், லேமன் பிரதர்ஸ் போன்ற நிதி நிறுவனங்களும் கவிழ்ந்த பொழுது
ஜப்பானைச் சேர்ந்த தோசிபா நிறுவனம் மட்டும் வாடாமல்லியாக காட்சிளித்தது!
காரணம் என்ன? தோசிபா கம்பெனியின் இலாபம் அபரிதமாக ஊதிப்பெருக்கியும் (Inflated Profit), கம்பெனியின் நட்டக்கணக்கு இத்துணை ஆண்டுகளாக போலியாகவும் காட்டப்பட்டு வந்துள்ளது.
மிகச் சமீபத்தில் தோசிபாவில் நடைபெற்ற விசாரணைக் கமிட்டி, கிட்டத்தட்ட 120 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ 7,200 கோடி) அளவிற்கு இலாபக் கணக்கு மோசடியாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
காரணம் என்ன? தோசிபா கம்பெனியின் இலாபம் அபரிதமாக ஊதிப்பெருக்கியும் (Inflated Profit), கம்பெனியின் நட்டக்கணக்கு இத்துணை ஆண்டுகளாக போலியாகவும் காட்டப்பட்டு வந்துள்ளது.
மிகச் சமீபத்தில் தோசிபாவில் நடைபெற்ற விசாரணைக் கமிட்டி, கிட்டத்தட்ட 120 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ 7,200 கோடி) அளவிற்கு இலாபக் கணக்கு மோசடியாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியுடன் குடித்து கும்மாளமிட்ட நடிகை
மலேசிய விமானம் மாயம், ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது போன்ற
சம்பவங்களுக்கு விமானிகள்தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்ததையடுத்து, விமானிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சில விமானிகள் அந்த கட்டுப்பாட்டை மீறி செயல்படுகின்றனர்.
இந்நிலையில், லண்டன் ஹீத்ரோவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற ஒரு
விமானத்தில் விமானி ஆபாச நடிகை ஒருவரை காக்பிட்டுக்கு வரவழைத்து அவருடன்
மது அருந்தி புகைபிடித்து உற்சாகத்தில் திளைத்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் குவைத் ஏர்வைசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டனில்
உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள
ஜான் எப். கென்னடி விமான நிலையத்திற்கு 300 பயணிகளுடன் புறப்பட்டுச்
சென்றது.
செவ்வாய், 28 ஜூலை, 2015
நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் 16 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நிலம் கொடுத்த
விவசாயிகளுக்கு, நீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்காமல்
அலைக்கழிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட பெருந்திட்ட வளாகத்துக்காக, 1998-ல் பிறப்பிக்கப்பட்ட
அரசாணைப்படி வேங்கிக்கால், வட ஆண்டாப்பட்டு மற்றும் நம்மியந்தல்
கிராமங்களில் இருந்த 40 ஏக்கர் புறம்போக்கு நிலம், 170 ஏக்கர் விவசாய நிலம்
என்று 210 ஏக்கர் நிலம் 1999-ல் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு
இழப்பீட்டுத் தொகையாக ஒரு சதுரடிக்கு 50 பைசா என்று விலை நிர்ணயம்
செய்யப்பட்டது.
நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார்
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக, நடிகர் ராதாரவி ஆதரவு திரட்டி
கூட்டத்தில், விஷால் அணியைச் சேர்ந்த ஒருவர், சரமாரியாக
தாக்கப்பட்டுள்ளார். இதனால், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும்
ராதாரவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், இரு அணிகள் மோதுகின்றன. நடிகர் ராதாரவி தலைமையிலான அணியில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார், நடிகை குயிலி என, சிலர் போட்டியிட உள்ளனர்.நடிகர் விஷால் தலைமையிலான அணியில், நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன் உட்பட சிலர், தேர்தல் களத்தில் குதிக்க தயாராகியுள்ளனர்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், இரு அணிகள் மோதுகின்றன. நடிகர் ராதாரவி தலைமையிலான அணியில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார், நடிகை குயிலி என, சிலர் போட்டியிட உள்ளனர்.நடிகர் விஷால் தலைமையிலான அணியில், நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன் உட்பட சிலர், தேர்தல் களத்தில் குதிக்க தயாராகியுள்ளனர்.
கலாமின் கடைசி 5 மணி நேரத்தில் நடந்த 3 சம்பவங்கள்
முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாமின் கடைசி 5 மணி நேரத்தில் நடந்த 3 சம்பவங்களை
கலாமுடன் பயணித்த அவரது மாணவர் ஸ்ரீஜன் பால் சிங் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
அவர்
கூறியதாவது: ஜூலை 27 மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம்.
அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். 2.5
மணிநேரப் பயணம். கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம்.
மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம்.
இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே
விஷேசமான அனுபவமாகவே இருக்கும். ஆனால் இது தான் நான் அவருடன் பயணிப்பது
கடைசி முறையாக இருக்கும் என்று கனவில் கூட நினைத்து பார்கவில்லை என்று கண்
கலங்கினார்.
இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம்! வெளிநாட்டினர் அதிகம்.. மத்திய சுற்றுலா அமைச்சகம் தகவல்
வெளிநாட்டினர் அதிகம் சுற்றுலா வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல்
இடம் பிடித்தது. மராட்டியம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
இந்தியாவிற்கு கடந்த 2014-ம் ஆண்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்
விவரங்களையும், இதில், அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்த
மாநிலங்களின் பட்டியலையும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சமீபத்தில்
வெளியிட்டது
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த மராட்டிய மாநிலம் தற்போது
2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மராட்டியத்தை பின்னுக்கு தள்ளி
பிரசித்திபெற்ற கோவில்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கை எழில்
கொஞ்சும் பகுதிகளை கொண்ட தமிழகம் முதல் இடம் பிடித்து உள்ளது.
அப்துல்கலாம் காலமானார்! மேகாலயாவில் அப்துல் கலாம் பதிவிட்ட கடைசி ட்வீட்!
Livable Planet குறித்துப் பேச ஷில்லாங் போகிறேன்.. கலாமின் கடைசிச் செய்தி
முன்னாள்
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார். தீவிர
சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
மேகாலயாவில்
கருத்தரங்கில் பங்கேற்றபோது தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி
விழுந்தார். உடனே, ஜில்லாங்கில் உள்ள பெதானி மருத்துவமனையின் தீவிர
சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை
அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இந்தியாவின்
11வது குடியரசுத்தலைவராக இருந்தவர் கலாம். 2002 ம் ஆண்டு முதல் 2007ம்
ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுதலைவராக இருந்தார்.
84 வயதாகும் அப்துல்கலாம், 1931- ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இவர் இந்திய ஏவுகணையின் தந்தை என்று புகழப்படுகிறார்.திங்கள், 27 ஜூலை, 2015
பஞ்சாப்பில் 12 மணி சண்டை முடிவுக்கு வந்தது: தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்
பஞ்சாப்பில் ராணுவ வீரர்களின் உடையில் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் இன்று அதிகாலையில் ராணுவ வீரர்களின் உடையில் வந்த தீவிரவாதிகள் அவ்வழியாக வந்த பேருந்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் அங்கிருந்த காவல்நிலையத்தின் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை 12 மணி நேரத்திற்கு பின்பு மாலையில் முடிவுக்கு வந்தது. இதில் போலீசார் நடத்திய தாக்குதலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அதிக இளைஞர்கள்
டிராஸ்:''பயங்கரவாத அமைப்புகளில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது,'' என, ராணுவத்தின் வடக்கு பிரிவின், லெப்டினன்ட் ஜெனரல், டி.எஸ்.ஹூடா கூறினார்.
கடந்த 1999ல், கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவி, அதனால் ஏற்பட்ட போரில் இந்தியா பெற்ற வெற்றி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, 'விஜய் திவஸ்' என்ற பெயரில் ராணுவத்தினரால் கொண்டாடப்படுகிறது.ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், டில்லி, 'அமர் ஜவான் ஜோதி' எனப்படும், மறைந்த வீரர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, கார்கில் போரில் இறந்த, 490 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1999ல், கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவி, அதனால் ஏற்பட்ட போரில் இந்தியா பெற்ற வெற்றி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 26ம் தேதி, 'விஜய் திவஸ்' என்ற பெயரில் ராணுவத்தினரால் கொண்டாடப்படுகிறது.ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், டில்லி, 'அமர் ஜவான் ஜோதி' எனப்படும், மறைந்த வீரர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, கார்கில் போரில் இறந்த, 490 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
விபத்துக்கு கட்டணமில்லா சிகிச்சை: பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடில்லி:''சாலைகளில், விபத்துகளில் சிக்கி, உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், விபத்தில் சிக்குவோருக்கு, முதல், 50 மணி நேரம் கட்டணம் இல்லா, அவசர சிகிச்சை அளிக்க வகை செய்யும் புதிய திட்டம், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பிரதமர் மோடி அறிவித்தார்>மாதம் ஒருமுறை, 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், 'மனதில் பட்டதை பேசுகிறேன்' என்ற அர்த்தத்தில், வானொலியில் பேசுவதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று அவர், 15 நிமிடங்கள் பேசியதன் முக்கிய அம்சங்களாவன:
சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் நடைபெறும் விபத்துகள் குறித்து பேசுமாறு, பலரும் எனக்கு அறிவுறுத்தினர். அதன் படி, எனக்கு கிடைத்த தகவலின் படி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவிலிருந்து 61,000 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து ஓட்டம்
புதுடில்லி: கடந்த, 14 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து, 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து, அவற்றை தங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டுள்ளனர்.நியூ வேர்ல் வெல்த், எல்.ஐ.ஓ., குளோபல் ஆகிய அமைப்புகள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது இந்த நுாற்றாண்டு துவக்கம் முதல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு குடிபுகுவதும், இரண்டாம் குடியுரிமை விண்ணப்பங்கள் அளிப்பதும் அதிகரித்து வருகிறது. கடந்த, 14 ஆண்டுகளில், உலகளவில் அதிகபட்சமாக, சீனாவிலிருந்து 91 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளில் குடிபுகுந்துள்ளனர். வெளிநாடுகளில் சட்டவிரோதிகள் வாழ முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் வெளி நாட்டில் செட்டில் ஆகமுடியாது. இங்கு எந்தவித பயமும் இன்றி சட்டவிரோதிகள் ஓட ஓட விரட்டி கொலை செய்கிறார்கள். 3 வயது பெண் குழந்தையை கூட கற்பழிப்பு கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் முக்கியமான ஒரே காரணம் """"மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை"""". பிழைப்புக்காக வெளிநாடு சென்று வரும் இந்தியர்களை கேட்டு பாருங்கள். அங்கு ஒரு பெண்ணை ஏறேடுத்துகூட பார்க்க முடியாது. ஆனால் இங்கு வேண்டுமென்றால் பார்த்து தொலையுங்கள் பரவாஇல்லை. கடத்தி செல்லுதல் கற்பழித்தல் கொலை செய்தல். கொள்ளை அடித்தல். இது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. """"""இதற்க்கெல்லாம் முக்கியமான ஒரே காரணம் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ''''''''((((சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை)))))''
என்ன நடக்கிறது I I T களில்? சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம்
சூத்திரர்’ கல்வி உரிமையைப்
பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர்.
மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின்
சிந்தனைகளுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடைபோட்டன. ‘மனுதர்மமே’
அய்.அய்.டி. ஏற்றுக்கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம்.இதுகூட ஒரு
கண்ணோட்டத்தில் வரவேற்கவேண்டியது தான். இல்லையேல்
தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள்,
மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம்கோர்க்க நல்ல வாய்ப்பை
உருவாக்கியிருக்குமா?
‘அய்.அய்.டி.’
என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் -
“அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்புவட்டம், வந்தே
மாதரம் படிப்பு வட்டம், இராமாயணபடிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு
வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேதமயமாக்குவதற்கு
அனுமதித்தவர்கள் - அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும்
அனுமதிக்கமறுத்தது.
ஞாயிறு, 26 ஜூலை, 2015
மாரி ?அப்படி என்ன பெருசா செஞ்சிட்டாரு?
நான் வேற மாரி’ என்று தரை லோக்கலாக மாரி படத்தில் களம் இறங்கியிருக்கிறார் தனுஷ். ரௌடிஸம், பந்தயம் போன்ற படங்கள் தான் தனுஷின் திரைவாழ்க்கையில் அவருக்கு மிகவும் கைக்கொடுத்து இந்நிலைக்கு வர உதவியிருக்கின்றன. இந்த இரண்டும் கலந்த படம் தான் மாரி.
’எட்டு வயசுல புறா வளக்குற பையனா இருந்தவன், இன்னைக்கு பெரிய ரௌடி. ஏரியாவே அவன் கைல’ என்று டிரெய்லரில் வரும் வசனமே மாரியின் கதாபாத்திரத்தின் விளக்கம். அநாதையாக இருந்த சின்னப்பய மாரியை ஏரியா மக்கள் உதாசினப்படுத்திவிட, பாசமாக வளர்த்த புறாக்கள் தான் பந்தயங்களில் ஜெயித்து மாரியை ஆளாக்கின.
வடகொரிய தலைவருக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் இது கிடைக்கிறது ! நியுயார்க் பத்திரிக்கை புகழாரம்
மே 8ஆம் திகதி சென்னையின் ஒரு கோயிலில் நான் இருக்கிறேன். பெருமாளே நீ கிடைக்கணும், அம்மா விடுதலையாகணும்.
அம்மாவைச் சிறையிலடைத்த தீய சக்திகள் அழிந்து போகணும் என்று தொண்டர்கள் கூட்டம் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்துகிறது.
கூட்டத்தினரில் ஒருவர் மாநில அமைச்சர்.
அவரது கையில் ஒரு பெண்ணின் படத்தை பச்சை குத்தியிருக்கிறார். அவர்தான்
தமிழகத்தின் அழிக்க முடியாத, தவிர்க்க முடியாத சக்தியான அம்மா.
கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி
அவருக்கு நான்கு வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வந்ததிலிருந்து பல
தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இந்த
வெறித்தனமான பக்தியை என்னவென்று சொல்வது?
அரசியலுக்கு வரும் முன் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா.
யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சல்மான்கான்
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேமனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்று நாடே எதிர்பார்க்கும் நிலையில், தூக்குத் தண்டனைக்கு எதிராக சல்மான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
யாகூப் மேமனுக்கு ஆதரவாக சல்மான் கான் பேசியதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சல்மான்கான் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் மும்பையின் பந்தரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரச்சனை எதுவும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாலைமலர்.com
திருப்பதி கோயிலுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு! தங்கத்தில் விலை சரிவால் ஏழுமலையானுக்கு நஷ்டம்!
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து
வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, சுமார் 1,000 கோடி ரூபாய்
இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 450 ஆண்டுகளாக
காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கத்தின் அளவு 20 டன் இருக்கும் எனக்
கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை சுவாமிக்கு நகைகளாக மாற்றப்பட்டு,
திருமலை கோயில் கருவூலத்தில் பாதுகாக்கபட்டு வருகின்றன.
இவை தவிர மேலும் 4,335 கிலோ எடை உள்ள சுத்த தங்கம்
வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சி
அடைந்து வருவதால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை
இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேவஸ்தானத்தின் இருப்பில்
உள்ள 20 டன் நகையின் மதிப்பு, கடந்த ஆண்டு ஜனவரியில் 55,180 கோடி ரூபாய்
இருந்தது. தற்போது, அதன் மதிப்பு 47,540 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதே
போல் திருமலை கோயில் வசம் இருக்கும் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி
அடைந்துள்ளது dinamani.com ரொம்ப நல்ல செய்தி சுஷ்மா சுவராஜ் திடீர் பல்டி! பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை.
டில்லி: ''ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின், போர்ச்சுகல் பயணத்திற்கு, பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை,'' என்று, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.'லலித் மோடியின் பயண விவகாரம் வெடித்தபோது, மனிதாபிமான முறையில், அவருக்கு உதவினேன்' என, சுஷ்மா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதையடுத்து, லலித் மோடிக்கு ஆதரவளித்த சுஷ்மா, பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், தொடர்ந்து நான்கு நாட்களாக, பார்லிமென்ட் அலுவல்கள் முடங்கின.இந்நிலையில், சுஷ்மா நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:லலித் மோடி பயணத்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளிக்கக் கோரி, அந்நாட்டு எம்.பி., கெய்த் வாஸிடம் நான் தெரிவித்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்.
லிட்டர் தண்ணீருக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் பைக் Brazil This motorbike runs on WATER
பிரேசில்: ''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான் இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும் இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார்.'சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே பெட்ரோல் காலியாகி விட்டதா? பையிலும் 10 பைசா கூட இல்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். அருகில் ஏதாவது குளம், குட்டை இருக்கிறதா என்று தேடுங்கள். இல்லையென்றால், சாலையில் எங்காவது தண்ணீர் தேங்கிக் கிடக்கிறதா என்று பாருங்கள்,'' என்கிறார், ரிக்கார்டோ ஆஸேவெடோ.நபரின் பெயரைப் படித்தவுடனேயே வெளிநாட்டு சங்கதி தானே என்று புலம்பாமல் தொடர்ந்து படித்தால், சுவாரசியம் கூடும்!
தி.மு.க., கூட்டணியில் 50 'சீட்': ராகுல் ஓப்புதல்?
சட்டசபை தேர்தலில், ஆட்சியில் பங்கு வேண்டும்; 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தி.மு.க., தரப்புக்கு, காங்கிரஸ் சார்பில், நிபந்தனை விதிக்கலாம் என்ற, கட்சியினரின் எதிர்பார்ப்புக்கு, கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஒப்புதல் அளித்து விட்டதாக இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:'தமிழகத்தில், அ.தி.மு.க., அரசை அகற்ற, தி.மு.க., காங்கிரஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்; இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் மாறி, மாறி ஒரு நிகழ்ச்சியில் பேசினர்.
அடுத்ததாக நடந்த கூட்டம் ஒன்றில், பேராயர் எஸ்றா சற்குணம் பேசுகையில், 'மீண்டும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உருவாக வேண்டும்' என்றார். அதற்கு இளங்கோவன், 'எஸ்றா சற்குணம் விருப்பம் நிறைவேறினால், எனக்கு மகிழ்ச்சி' என்றார். இதையடுத்து, மதுரைக்கு சென்ற இளங்கோவன், தடாலடியாக, 'கூட்டணி ஆட்சி தேவை. முதல்வர் பதவி அவர்களுக்கு என்றால், துணை முதல்வர் பதவி எங்களுக்கு; நிதி அமைச்சர் பதவி அங்கே என்றால், உள்துறை அமைச்சர் பதவி எங்களுக்கு' என்றார்.
இணையதளங்களை முடக்க மத்திய அரசு முடிவு !மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் பரப்பும்...
புதுடில்லி: மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் பரப்பும் இணையதளங்களை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சமீப காலத்தில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விதமாக சமூக வலைதளங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இணைய தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மேலும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியும் இணைய தளம் மூலம் நடந்தது. மேலும் சில இணையதளங்களில் பயங்கரவாத கொள்கைள் பரப்பி விடப்பட்டன. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதில் குற்றம் புரியும் சில அமைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். நாட்டில் மத ரீதியிலான அவதூறு கருத்துக்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் பரப்பிய சில இணையதளங்கள் லிஸ்ட்டை மத்திய அரசுக்கு உளவு பிரிவு படையினர் கொடுத்துள்ளனர் இதன் அடிப்படையில் இது போன்ற இணைய தளங்களை முடக்க மத்திய அரசு ஆணை பிறபி்த்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லைdinamalar.com
மீடியாக்களை பார்த்து BJP ஏன் பயப்படுகிறது?
The story of Nirbhaya. I aim to share the insights I have gleaned on an extremely challenging and harrowing journey while making a documentary about the gang-rape and murder of 'India's Daughter', the 23 year old medical student, in Delhi in December 2012. When starting on this endeavour, strongly inspired by the protests which this gang-rape sparked, I set off with the question WHY? Why do brutal rapes take place and why with such frequency? What sort of monsters are capable of such brutality in such flagrant disregard of civilised values? The answers I found were resounding and surprising. The answer lies not in the men who perpetrate the barbaric acts but in the society that seeds and even encourages such acts.
சிறையில் கைதிகளை சந்தித்து ஆவணப்படம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
டெல்லியில் நிர்பயா என்ற பெண், இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு
உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கொடும் காயமடைந்த அவர்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த கற்பழிப்பு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்தும்,
அதன் பின்னணி குறித்தும் பி.பி.சி. டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்த லெஸ்லி
உட்வின் என்ற பெண் ஆவணப் படம் தயாரித்தார்.
இந்த படத்தின் ஒரு பகுதியாக, ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த, நிர்பயா
கற்பழிப்பு வழக்கின் குற்றவாளிகளை அவர் பேட்டி எடுத்தார். அதைத் தொடர்ந்து
“இந்தியாஸ் டாட்டர்” (இந்தியாவின் மகள்) என்ற பெயரில் அந்த ஆவணப்படம்
வெளியானது. ஏராளமான பாஜக தொண்டர்கள் குண்டர்கள் தற்போது ஜெயில் உள்ளார்கள் .அவர்கள் மூலம் பாஜகவின் நிர்வாணம் தெரிய கூடாது என்பதற்குதான் இந்த ஏற்பாடு!
பாம்பனில் சர்வதேச நீர் விளையாட்டுகள் ! இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 போட்டியாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் அரியமான் கடற்கரைப் பகுதியில் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச நீர்விளையாட்டுப் போட்டிகள் சனி மன்றும்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதனையொட்டி குந்துகாலில் சர்வதேச
நீர்விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர்
எஸ்.சுந்தரராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கடலோர காவற்படை கூடுதல் இயக்குநர் சி.சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர்
க.நந்தகுமார், மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பாளர் தீபக் எஸ். பில்கி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.<
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ் பேசியதாவது,