திங்கள், 27 ஜூலை, 2015

இந்தியாவிலிருந்து 61,000 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து ஓட்டம்

புதுடில்லி: கடந்த, 14 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து, 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து, அவற்றை தங்களது சொந்த நாடாக மாற்றிக் கொண்டுள்ளனர்.நியூ வேர்ல் வெல்த், எல்.ஐ.ஓ., குளோபல் ஆகிய அமைப்புகள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது இந்த நுாற்றாண்டு துவக்கம் முதல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு குடிபுகுவதும், இரண்டாம் குடியுரிமை விண்ணப்பங்கள் அளிப்பதும் அதிகரித்து வருகிறது. கடந்த, 14 ஆண்டுகளில், உலகளவில் அதிகபட்சமாக, சீனாவிலிருந்து 91 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளில் குடிபுகுந்துள்ளனர்.  வெளிநாடுகளில் சட்டவிரோதிகள் வாழ முடியாது. சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் வெளி நாட்டில் செட்டில் ஆகமுடியாது. இங்கு எந்தவித பயமும் இன்றி சட்டவிரோதிகள் ஓட ஓட விரட்டி கொலை செய்கிறார்கள். 3 வயது பெண் குழந்தையை கூட கற்பழிப்பு கொலை செய்கிறார்கள். இதற்கெல்லாம் முக்கியமான ஒரே காரணம் """"மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை"""". பிழைப்புக்காக வெளிநாடு சென்று வரும் இந்தியர்களை கேட்டு பாருங்கள். அங்கு ஒரு பெண்ணை ஏறேடுத்துகூட பார்க்க முடியாது. ஆனால் இங்கு வேண்டுமென்றால் பார்த்து தொலையுங்கள் பரவாஇல்லை. கடத்தி செல்லுதல் கற்பழித்தல் கொலை செய்தல். கொள்ளை அடித்தல். இது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. """"""இதற்க்கெல்லாம் முக்கியமான ஒரே காரணம் மக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ''''''''((((சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை)))))''
இதே காலக்கட்டத்தில், இந்தியாவிலிருந்து 61 ஆயிரம் கோடீஸ்வரர்கள், வேறு நாடுகளை தமது சொந்த நாடாக்கிக் கொண்டுள்ளனர்.தமக்கு சொந்தமாக உள்ள வீடுகளைத் தவிர, ஆறு கோடி ரூபாய்க்கு மேல் தொழில் துறையில் முதலீடு செய்யக்கூடிய பணக்காரர்கள், எச்.என்.டபிள்யூ.ஐ., என அழைக்கப்படுவர். இந்த வகையைச் சேர்ந்த இந்திய பணக்காரர்கள், ஐக்கிய அரபு எமிரேட், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடிபுக விரும்புகின்றனர்.சீனாவைச் சேர்ந்த பணக்காரர்கள், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளை விரும்புகின்றனர். மொத்தத்தில், உலகளவில், வெளிநாட்டு பணக்காரர்களால் விரும்பப்படும் நாடாக, பிரிட்டன் திகழ்கிறது. கடந்த, 14 ஆண்டுகளில், பிரிட்டனில் அதிகபட்சமாக, 1.25 லட்சம் எச்.என்.டபிள்யூ.ஐ., பணக்காரர்கள் குடிபுகுந்துள்ளனர்.சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக, பிரான்சிலிருந்து42 ஆயிரம் பேர், இத்தாலியிலிருந்து 23 ஆயிரம் பேர், ரஷ்யாவிலிருந்து 20 ஆயிரம் பேர், இந்தோனேஷியாவிலிருந்து 12 ஆயிரம் பேர், தென் ஆப்ரிக்காவிலிருந்து 8,000 பேர், எகிப்திலிருந்து 7,000 பேர், வெளிநாடுகளில் குடிபுகுந்துள்ளனர். சொந்த நாட்டில் நிலவும் குழப்பங்கள், பாதுகாப்பு குறைபாடு, தம் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் போன்ற காரணங்களால், எச்.என்.டபிள்யூ.ஐ., பணக்காரர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.இவ்வாறு, நியூ வேர்ல் வெல்த், எல்.ஐ.ஓ., குளோபல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக