புதன், 29 ஜூலை, 2015

யாகூப் மேமனுக்கு நாளை காலை தூக்கு! மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி!

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு நாளை காலை 7 மணியளவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநில கவர்னரிடம் அவர் தாக்கல் செய்த கருணை மனு, தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு ஆகியவை இன்று மாலை தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து நாளை காலை 7 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவான் என நாக்பூர் சிறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக