திங்கள், 27 ஜூலை, 2015

விபத்துக்கு கட்டணமில்லா சிகிச்சை: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி:''சாலைகளில், விபத்துகளில் சிக்கி, உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், விபத்தில் சிக்குவோருக்கு, முதல், 50 மணி நேரம் கட்டணம் இல்லா, அவசர சிகிச்சை அளிக்க வகை செய்யும் புதிய திட்டம், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என, பிரதமர் மோடி அறிவித்தார்>மாதம் ஒருமுறை, 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், 'மனதில் பட்டதை பேசுகிறேன்' என்ற அர்த்தத்தில், வானொலியில் பேசுவதை, பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று அவர், 15 நிமிடங்கள் பேசியதன் முக்கிய அம்சங்களாவன: சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் நடைபெறும் விபத்துகள் குறித்து பேசுமாறு, பலரும் எனக்கு அறிவுறுத்தினர். அதன் படி, எனக்கு கிடைத்த தகவலின் படி, சாலை பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம்.
நம் நாட்டில், ஒவ்வொரு நிமிடமும் வாகன விபத்துகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு, 4 நிமிடங்களுக்கு ஒருமுறை, வாகன விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, 15 - 25 வயது வரையுள்ள இளைஞர்கள், வாகன விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இதைத் தவிர்க்க, தேசிய அளவில் விரிவான மருத்துவ சிகிச்சை திட்டம் ஒன்றை அறிவிக்க உள்ளோம். வாகன விபத்தில் சிக்குபவர்களுக்கு, அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.அதாவது, விபத்தில் சிக்குபவர்களுக்கு, முதல், 50 மணி நேரம், அவர்களுக்கு தேவையான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு, அவர்களின் உயிர் காப்பாற்றப்படும். இதற்காக, விரிவான பல அம்சங்கள், இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.முதற்கட்டமாக, இந்தத் திட்டம், குர்கான், ஜெய்ப்பூர் மற்றும் வதோதரா நகரங்களிலும், அதற்குப் பின், மும்பை, ராஞ்சி, ஒடிசாவின் ரங்கோன் தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும்.'தீனதயாள் உபாத்யாயா கிராம ஜோதி' திட்டத்தின் படி, நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும். அதற்கான திட்டம், பீகாரின், பாட்னா நகரில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் எளிதானதல்ல.

மின்சாரம்:

எனினும், இதைச் செயல்படுத்த உறுதியாக உள்ளோம். நம் இந்திய கிராமங்கள், தொலை துாரங்களில், ஒன்றுக்கு ஒன்று அதிக துாரத்தில் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் அன்றாட தேவைக்கும் மின்சாரம் மிகவும் அவசியம்.ஆகஸ்ட் 15ல், சுதந்திர தின நாள் உரையில், நான் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட வேண்டும்; என் உரையில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினா dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக