புதன், 29 ஜூலை, 2015

தலிபான் தலைவர் முல்லா ஒமர் 2 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்

தலிபான் தலைவர் முல்லா ஒமர், தலிபான் தளபதிகளான. முல்லா அக்தர் முகமது மன்சூர் மற்றும் குல் அக்ஹா ஆகியோரால் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் குவாரி ஹம்சா கூறியுள்ளார்.
மேலும் ஹம்சா கூறும்போது ஒமர் இல்லை என நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். ஒமர் மரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு உறுதிப்படுத்தியுள்ளதாக பி.பி.சி அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் தலிபான் இதுவரை ஒமர் மரணம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக