ஞாயிறு, 26 ஜூலை, 2015

திருப்பதி கோயிலுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு! தங்கத்தில் விலை சரிவால் ஏழுமலையானுக்கு நஷ்டம்!

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 450 ஆண்டுகளாக காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கத்தின் அளவு 20 டன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை சுவாமிக்கு நகைகளாக மாற்றப்பட்டு, திருமலை கோயில் கருவூலத்தில் பாதுகாக்கபட்டு வருகின்றன.
இவை தவிர மேலும் 4,335 கிலோ எடை உள்ள சுத்த தங்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தற்போது தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவஸ்தானத்தின் இருப்பில்  உள்ள 20 டன் நகையின் மதிப்பு, கடந்த ஆண்டு ஜனவரியில் 55,180 கோடி ரூபாய் இருந்தது. தற்போது, அதன்  மதிப்பு 47,540 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதே போல் திருமலை கோயில் வசம் இருக்கும் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது dinamani.com  ரொம்ப நல்ல செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக