புதன், 29 ஜூலை, 2015

விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியுடன் குடித்து கும்மாளமிட்ட நடிகை


மலேசிய விமானம் மாயம், ஆல்ப்ஸ் மலையில் விமானம் விழுந்து நொறுங்கியது போன்ற சம்பவங்களுக்கு விமானிகள்தான் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து, விமானிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில விமானிகள் அந்த கட்டுப்பாட்டை மீறி செயல்படுகின்றனர். இந்நிலையில், லண்டன் ஹீத்ரோவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற ஒரு விமானத்தில் விமானி ஆபாச நடிகை ஒருவரை காக்பிட்டுக்கு வரவழைத்து அவருடன் மது அருந்தி புகைபிடித்து உற்சாகத்தில் திளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வார இறுதியில் குவைத் ஏர்வைசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி விமான நிலையத்திற்கு 300 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.


விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதே விமானத்தில் பயணம் செய்த ஆபாச நடிகையான சோலே கான் தன் தோழியுடன் விமானியின் அறையான காக்பிட்டுக்குள் நுழைகிறார். அங்கு மது அருந்தியதுடன் சிகரெட்டும் பிடித்து அசால்ட்டாக புகையை ஊதுகிறார். விமானம் ஆட்டோபைலட்டில் சென்றுகொண்டிருந்தபோது, பட்டன்களை அழுத்தி பார்க்கலாமா? என அனுமதி கேட்கிறார்கள். விமானியும் அனுமதி கொடுக்க, நடிகை அந்த பட்டனை அழுத்துகிறார். அத்துடன் காக்பிட்டில் இருந்தபடி போட்டோவும், விடியோவும் எடுத்துள்ளார்.

இந்த கூத்து எப்படியோ வெளிய கசிய, இந்த செய்தியை இங்கிலாந்து பத்திரிகை டெய்லி ஸ்டார் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட விமானி பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை துச்சமென மதிக்கும் இதுபோன்ற விமானிகளால் மற்ற நல்ல விமானிகளும் சர்ச்சைக்குள்ளாகின்றனர்.

2001-ம் ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி நடைபெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு காக்பிட்டுக்குள் விமானிகளைத் தவிர மற்றவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டிற்கு பின் காக்பிட் பகுதிக்குள் புகைப்பிடிக்கவும் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக