ஞாயிறு, 26 ஜூலை, 2015

வடகொரிய தலைவருக்கும் ஜெயலலிதாவுக்கும்தான் இது கிடைக்கிறது ! நியுயார்க் பத்திரிக்கை புகழாரம்

images  அபிமானத்துக்குரிய ஆற்றல் கண்டு ஆச்சரியப்படுகிறது  அமெரிக்க பத்திரிகை!! images8மே 8ஆம் திகதி சென்னையின் ஒரு கோயிலில் நான் இருக்கிறேன். பெருமாளே நீ கிடைக்கணும், அம்மா விடுதலையாகணும்.
அம்மாவைச் சிறையிலடைத்த தீய சக்திகள் அழிந்து போகணும் என்று தொண்டர்கள் கூட்டம் பிரார்த்தனைகளும் பூஜைகளும் நடத்துகிறது.
கூட்டத்தினரில் ஒருவர் மாநில அமைச்சர். அவரது கையில் ஒரு பெண்ணின் படத்தை பச்சை குத்தியிருக்கிறார். அவர்தான் தமிழகத்தின் அழிக்க முடியாத, தவிர்க்க முடியாத சக்தியான அம்மா.
கடந்த வருடம் செப்டெம்பர் 27ஆம் திகதி அவருக்கு நான்கு வருடச் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வந்ததிலிருந்து பல தொண்டர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இந்த வெறித்தனமான பக்தியை என்னவென்று சொல்வது?
அரசியலுக்கு வரும் முன் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா.

தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆரை தனது குருவாக, வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார். 1987இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தனது பரம வைரியாக இருக்கும் 92 வயது சினிமா கதாசிரியரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்.
அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்த நிலையில் தீர்ப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கோயில்களிலும், சர்ச்சுகளிலும், பள்ளிவாசல்களிலும் கூட்டமாகக் கூடிப் பிரார்த்தனைகள், பூஜைகள் செய்தார்கள்.
மதுரையில் கட்சிக்காரர்கள் 1008 தேங்காய் உடைத்தார்கள். கோவையில் 2008 பாற்குடம் எடுத்தார்கள். செல்வவிநாயகர் கோயிலில் 508 பெண்கள் குத்துவிளக்கு பூஜை நடத்தினார்கள். எல்லோரது பிரார்த்தனையும் அம்மா விடுதலையாக வேண்டுமென்பது மட்டுமே.
எங்கு பார்த்தாலும் மோனலிசா புன்னகையுடன் ஜெயலலிதாவின் கட் அவுட்டுகளும், பேனர்களும், போஸ்டர்களும் தென்பட்டால், நீங்கள் தமிழ் நாட்டில் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வாக்கு வங்கி மிக ஸ்திரமாக இருக்கும் கிராமப்புறங்களில் இது இன்னும் அதிகம்.
INDIA-master675-v3  அபிமானத்துக்குரிய ஆற்றல் கண்டு ஆச்சரியப்படுகிறது  அமெரிக்க பத்திரிகை!! INDIA master675 v31948இல் பிறந்த ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது இருக்கும் போது அவரது தந்தை மறைந்தார். வழக்கறிஞராக விரும்பிய ஜெயலலிதா, தாயார் சந்தியாவின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார்.
16 வயதில் தன்னம்பிக்கை மிக்கவராக, காண்போரைக் கவரும் அழகியாக, சிறந்த டான்ஸராகப் பரிமளித்தார். ஆயிரத்தில்  ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் தொடங்கிய இவரது சினிமாப் பயணம் அடுத்த 8 ஆண்டுகளில் 28 படங்களில் சேர்ந்து நடிக்கும் அளவுக்குப் போனது.
அச்சமயத்தில் தி.மு.க.வில் இருந்தார். எம்.ஜிஆர். அவரை முன்னிறுத்தியே தி.மு.க.ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆரே தி.மு.க. வின் முகம் என்று ஆகிப்போனார்.
தனது நண்பர் கருணாநிதியை முதலமைச்சராக அமரவைத்தால். எம்.ஜி.ஆர். ஆனால் இந்த நட்பு வரைவில் கசந்து போனது.
அதனால் எம்.ஜி.ஆர். பிரிந்து அ.தி.மு.க.வைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்றங்களின் துணையோடு 1977இல் நடைபெற்ற தேர்தலில் வென்று முதலமைச்சரானார். ஏழைகளுக்கான பல திட்டங்களைக் கொண்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
அப்போது எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று அரசியலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. பிராமணரை எதிர்க்கும் பாரம்பரியம் கொண்ட திராவிடக் கட்சியில் இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.
ஆனால் அழகும் புத்திசாலித்தனமும் ஒருங்கே அமையப் பெற்ற ஜெயலலிதா இதனை வென்று அரசியல் செய்தார். அவரது ஆங்கிலம் மற்றும் இந்திப் புலமை டெல்லி அரசியலையும் கலக்க உதவியது. ஆனால் எம்.ஜி.ஆரின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்தவர்கள் அவரை அப்புறப்படுத்த நினைத்தனர்.
24.12.1987 அன்று எம்.ஜி.ஆர். மறைந்த போது இரண்டு நாட்கள் அவரின் உடல் அருகிலேயே இருந்தார். இறுதியாக அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அதிலிருந்து ஜெயலலிதா தள்ளி விடப்பட்டு ரோட்டில் விழுந்ததை தொலைக்காட்சியில் கோடிக்கணக்கானோர் பார்த்துக் கண்ணீர் சிந்தினர்.
அதன் பின்னர் நான்கு வருடங்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகளை எதிர்த்துப் போராடினார். 1991இல் தமிழகத்தின் முதலமைச்சராகி தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார்.
சென்னையில் நான் சந்தித்த மீனவர் குப்பத்துப் பெண்ணான கலா கூறுகையில், அரசியலில் யார் தான் தவறு செய்யவில்லை? இவரை மட்டும் ஏன் தண்டிக்க வேண்டும்? இவர் தனி மனுஷியாகப் போராடுவதால் இவரை எங்களில் ஒருவராகவே நேசிக்கிறோம் என்றார்.
rare-moment-sobhan-babu-and-jayalalitha-1427041779g84nk  அபிமானத்துக்குரிய ஆற்றல் கண்டு ஆச்சரியப்படுகிறது  அமெரிக்க பத்திரிகை!! rare moment sobhan babu and jayalalitha 1427041779g84nkமுதல் முறை முதலமைச்சரான போது உடல் முழுவதையும் மறைக்கும் கோட் அணிந்து தன்னை உங்களின் அன்புச் சகோதரி என்று சொன்னார். மீண்டும் முதலமைச்சரான போது நகைகள் அணிவதைச் சுத்தமாகவே கைவிட்டு சந்நியாசி போல் வாழும் அவரை மக்கள், அம்மா என்றே அழைக்கிறார்கள்.
அசாதாரணமான சூழலில் அவர் சிறைக்குப் போனதும் முதலமைச்சரான பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அறையையோ அவரது இருக்கையையோ பயன்படுத்த மறுத்து விட்டார்.
ஜீன் டிரேஸ் – அமர்த்தியா சென் ஆகியோர், ஆன் அன்செர்ட்டெயின் க்ளோரி என்ற புத்தகத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி அலசி ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.
TC_Jalalitha_0225  அபிமானத்துக்குரிய ஆற்றல் கண்டு ஆச்சரியப்படுகிறது  அமெரிக்க பத்திரிகை!! TC Jalalitha 0225அதில், நிர்வாகப் புதுமைகளில் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரே மாநிலம் தமிழ் நாடு என்று குறிப்பிட்டுள்ளனர். விதிகள், வழிமுறைகள், திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றைத் தானே வகுத்து திறம்பட நடத்திய முறைக்கு நாம் தலைவணங்க வேண்டும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் சதானந்த் மேனன்.
ஏழை மக்களுக்கு லேப்டாப், புடைவை, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், அரிசி, பசுமாடுகள், பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் போன்றவற்றை இலவசமாக வழங்கியுள்ளார்.
இப்போது அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா உப்பு, அம்மா மினரல் வோட்டர், அம்மா சிமென்ட் என மலிவு விலைப் பொருட்களையும் வழங்கிச் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்.
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த அன்று காலையில் இருந்தே அவரது இல்லத்தில் குவிந்த தொண்டர்கள் ஏக படபடப்புடன் காத்திருந்தார்கள்.
அவருக்கு விடுதலை என்று அறிவிப்பு வந்ததும் ஆடிக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். அதிசயமாக அன்று மழையும் கொட்டியது என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

ஜூலை 1ஆம் திகதி இணையத்தில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரை, 5ஆம் திகதி தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் சண்டே மெகசின் பகுதியிலும் வெளிவந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக