ஞாயிறு, 26 ஜூலை, 2015

யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சல்மான்கான்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேமனுக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்று நாடே எதிர்பார்க்கும் நிலையில், தூக்குத் தண்டனைக்கு எதிராக சல்மான்கான் கருத்து தெரிவித்துள்ளார். யாகூப் மேமனுக்கு ஆதரவாக சல்மான் கான் பேசியதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சல்மான்கான் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் மும்பையின் பந்தரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரச்சனை எதுவும் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக