ஞாயிறு, 26 ஜூலை, 2015

சுஷ்மா சுவராஜ் திடீர் பல்டி! பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை.

டில்லி: ''ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின், போர்ச்சுகல் பயணத்திற்கு, பிரிட்டன் அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை,'' என்று, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.'லலித் மோடியின் பயண விவகாரம் வெடித்தபோது, மனிதாபிமான முறையில், அவருக்கு உதவினேன்' என, சுஷ்மா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதையடுத்து, லலித் மோடிக்கு ஆதரவளித்த சுஷ்மா, பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், தொடர்ந்து நான்கு நாட்களாக, பார்லிமென்ட் அலுவல்கள் முடங்கின.இந்நிலையில், சுஷ்மா நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:லலித் மோடி பயணத்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளிக்கக் கோரி, அந்நாட்டு எம்.பி., கெய்த் வாஸிடம் நான் தெரிவித்ததாகக் கூறுவது முற்றிலும் பொய்.
இதை, இந்த முறை மட்டும் அல்ல, திரும்ப திரும்ப எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவேன். லலித் மோடியின் பயண ஆவணங்களுக்காக நான் பரிந்துரைக்கவே இல்லை. அமைச்சர் என்ற முறையில் நான் பார்லிமென்டிற்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.ஆனால், தேசத்திற்கு தெரிவிக்க, டுவிட்டர் தான் ஒரே வழி என்பதால், இங்கு கூறுகிறேன். இப்பிரச்னையை பிரிட்டன் அரசு, அதன் சட்ட திட்டங்களின் படி முடிவு செய்யட்டும். நாள்தோறும் மனிதாபிமான அடிப்படையில் பலருக்கு உதவுகிறேன். டுவிட்டரில் ஒரே முறை வந்த விண்ணப்பத்தின் பேரில், 17 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்படும் பெண்ணுக்கு உதவியுள்ளேன். ஆனால், லலித் மோடி பிரச்னையில் என் பேச்சு திரிக்கப்பட்டு, பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக