புதன், 29 ஜூலை, 2015

இலவசமாக கிடைக்கக்கூடிய விண்டோஸ் 10 இன்று வெளியாகிறது


கணினிப் பெருநிறுவனமான மைக்ரோஸாஃப்ட், தனது விண்டோஸ் கணினி இயக்க மென்பொருளின் புதிய வடிவமான விண்டோஸ் 10ஐ இன்று வெளியிடுகிறது. தவிர இந்த மென்பொருளை அது தனது பாவனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பி.சி. எனப்படும் - மேஜையில் வைத்துப் புழங்கும் விதமான மற்றும் மடிக் கணினிகளையும், கையில் வைத்து திரையை தொட்டு இயக்கும் விதமான 'டேப்லட்' கணினிகளையும் இந்த மென்பொருள் இயக்கும்.
திறன் பேசிகளுக்கும், வீடியோ கேம் கருவிகளூக்கும், தலையில் மாட்டிக்கொள்ளும் ஹோலோகிராஃபிக் கருவிகளுக்கும் பிற்பாடு இந்த மென்பொருள நீட்டிக்கப்படும். பி.சி. வகை கணினிகளின் விற்பனை குறைந்து வருகின்ற ஒரு சூழலுக்கு தன்னைப் பொருத்திக்கொள்ள மைக்ரோஸாஃப்ட் திணறும் ஒரு நேரத்தில் இந்த புதிய மென்பொருள் வருகிறது என்று தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தவிர மைக்ரோஸாஃப்ட் காலூன்றத் தவறிய சிறு கணினிகள் சந்தையில், அது இந்த முறை கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.bbc.com/tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக