ஞாயிறு, 26 ஜூலை, 2015

இணையதளங்களை முடக்க மத்திய அரசு முடிவு !மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் பரப்பும்...

புதுடில்லி: மத ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் பரப்பும் இணையதளங்களை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சமீப காலத்தில் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் விதமாக சமூக வலைதளங்கள் மற்றும் சில குறிப்பிட்ட இணைய தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மேலும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியும் இணைய தளம் மூலம் நடந்தது. மேலும் சில இணையதளங்களில் பயங்கரவாத கொள்கைள் பரப்பி விடப்பட்டன. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதில் குற்றம் புரியும் சில அமைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். நாட்டில் மத ரீதியிலான அவதூறு கருத்துக்கள் மற்றும் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் பரப்பிய சில இணையதளங்கள் லிஸ்ட்டை மத்திய அரசுக்கு உளவு பிரிவு படையினர் கொடுத்துள்ளனர் இதன் அடிப்படையில் இது போன்ற இணைய தளங்களை முடக்க மத்திய அரசு ஆணை பிறபி்த்துள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லைdinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக