அம்மா என்ற அழகான அற்புதமான சொல் தற்போது மிகவும் கேவலப்படுத்த படுகிறது. அம்மா என்று குழந்தை அழைத்தால் கூட ஒரு மிக மோசமான அகங்காரியின் ஞாபகம் தான் வருகிறது,
அதிமுக என்ற ஒரு அரசிய கட்சி தவறான ஒரு பிறப்பு என்பதில் சந்தேகமே கிடையாது, அதன் தோற்றத்திற்கு காரணம் எம்ஜியாரின் அந்நிய செலாவணி பிரச்னை என்பது வரலாறு கூறும் உண்மை.
அவரே எதிர்பார்க்காத அளவு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்தது அவரின் அதிஷ்டம் தமிழ்நாட்டின் துரதிஷ்டம் .
அவருக்கு ஜெயாவின் மேல் இருந்த மோகம் காரணமாக அவருக்கு பின் அதிமுக ஜெயலலிதாவின் கைகளில் போய்விட்டது. இதர இரண்டாம் மட்ட தலைவர்களும் வெறும் ஊழல்வாதிகள்தான். இந்த எம்ஜியார் தமிழ்நாட்டுக்கு செய்த தீமையை விட இலங்கை தமிழர்களுக்கு செய்த தீமை மிகவும் அதிகம், ஒரு மோசமான பயங்கரவாதியை உருவாக்கியதன் மூலம் சகல சகோதர போராளிகளையும் அழித்தது, இதில் நிச்சயம் எம்ஜியார் மீது குற்றம் உண்டு, எந்த காலத்திலும் எம்ஜியார் பிரபாகரனுக்கு புத்திமதி சொன்னதே இல்லை. மாறாக அவரின் சகல கொடுமைகளையும் ஆதரித்தார். உதவியும் செய்தார். தான் எங்கே மலையாளி என்ற வாதம் பெருத்து விடகூடாது என்பதற்காகவும் திமுகவுக்கு பலம் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் பாதி மலையாளியான பிரபாகரனுக்கு பால் வார்த்து கொண்டே இருந்தார். இதெல்லாம் முடிந்த கதை.
ஜெயலலிதாவின் mla க்களும் சரி இதர அதிமுக அடிமைகளும் சரி தற்போது எந்த விடயத்தை பேச எடுத்து கொண்டாலும் எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி வழிகாட்டுதலிலும் சாதுர்யமான திட்டங்களாலும் மற்றும் அவரின் விடா முயற்சி நாட்டு மக்களின் மீது கொண்ட அளவற்ற கருணையாலும் ஒரு தாயின் பரிவோடும் பாசத்தோடும் தைரியமாக எடுத்த காரியத்தை நிறைவேற்றி தந்துள்ளார் ....... அப்பாடா இது போன்ற பஜனை பாடல்களை சதா பாடி பாடி காவடி தூக்குகிறார்கள். . வாந்தி வருகிறது.
வரலாற்றில் இது ஒன்றும் புதிது அல்ல . அத்தனை சர்வாதிகாரிகளும் மனநோயாளர்களும் இப்படி பட்ட ஜால்ரா சத்தங்கள் கேட்ட வண்ணமே வாழ்ந்துள்ளார்கள்..... வீழ்ந்துள்ளார்கள் , . அண்மையில் பிரபா கூட இப்படியான ஜால்றாக்களால்தான் கண்ணை மூடிக்கொண்டு பரலோகம் சென்றார். அவரது அடிமைகூட்டம் ஜெயாவின் அடிமைகூட்டதிற்கும் சற்றும் குறையாத அளவு பஜனை பாடியது.