புதன், 30 ஜூலை, 2014

நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி

பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி நடிக்கின்றனர். வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் தேவதர்ஷினி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் சொல்லும்போது, ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ படத்தில் ஆண் ரவுடியாக, பக்கா பொறுக்கியாக நடித்துள்ளேன். இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்றார்.
மேலும், அவரிடம் சினிமாக்களில் பெரும்பாலும் வில்லன் வேடமென்றால் ஆண்கள்தான் நடிப்பார்கள். அப்படி அவர்கள் நடிக்கும்போது பெண்களை கற்பழிக்க முயற்சிப்பது, அவர்களை கொடுமைப்படுத்துவது என்பதுபோன்ற காட்சிகள் இருக்கும். இப்படத்தில் நீங்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அதுமாதிரியான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அந்த மாதிரியான காட்சிகள் எல்லாம் இப்படத்தில் இல்லை என்று கூறினார்.thamilmurasu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக