செவ்வாய், 29 ஜூலை, 2014

அம்மா ஜெயலலிதா ஒரு சர்வதிகாரியா ? எம்ஜியார் ஏன் அதிமுகவை ஆரம்பித்தார் ?

அம்மா என்ற அழகான அற்புதமான சொல் தற்போது  மிகவும் கேவலப்படுத்த படுகிறது. அம்மா என்று  குழந்தை அழைத்தால் கூட  ஒரு மிக மோசமான அகங்காரியின் ஞாபகம் தான் வருகிறது,
அதிமுக என்ற ஒரு அரசிய கட்சி தவறான ஒரு பிறப்பு என்பதில் சந்தேகமே கிடையாது, அதன் தோற்றத்திற்கு காரணம் எம்ஜியாரின் அந்நிய செலாவணி பிரச்னை என்பது வரலாறு கூறும் உண்மை.
அவரே எதிர்பார்க்காத அளவு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்தது அவரின் அதிஷ்டம் தமிழ்நாட்டின் துரதிஷ்டம் .
அவருக்கு ஜெயாவின் மேல் இருந்த மோகம் காரணமாக அவருக்கு பின் அதிமுக ஜெயலலிதாவின் கைகளில் போய்விட்டது. இதர இரண்டாம் மட்ட தலைவர்களும் வெறும் ஊழல்வாதிகள்தான். இந்த எம்ஜியார் தமிழ்நாட்டுக்கு செய்த தீமையை விட இலங்கை தமிழர்களுக்கு செய்த தீமை மிகவும் அதிகம்,  ஒரு மோசமான பயங்கரவாதியை உருவாக்கியதன் மூலம் சகல சகோதர போராளிகளையும் அழித்தது, இதில் நிச்சயம் எம்ஜியார் மீது குற்றம் உண்டு, எந்த காலத்திலும் எம்ஜியார் பிரபாகரனுக்கு புத்திமதி சொன்னதே இல்லை. மாறாக அவரின் சகல கொடுமைகளையும் ஆதரித்தார். உதவியும் செய்தார். தான் எங்கே மலையாளி என்ற வாதம் பெருத்து விடகூடாது என்பதற்காகவும் திமுகவுக்கு பலம் வந்து விடக்கூடாது என்பதற்காகவும்  பாதி மலையாளியான பிரபாகரனுக்கு பால் வார்த்து கொண்டே இருந்தார். இதெல்லாம் முடிந்த கதை.
ஜெயலலிதாவின் mla க்களும் சரி இதர அதிமுக அடிமைகளும் சரி தற்போது எந்த விடயத்தை பேச எடுத்து கொண்டாலும்  எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நேரடி வழிகாட்டுதலிலும்  சாதுர்யமான திட்டங்களாலும் மற்றும் அவரின் விடா முயற்சி நாட்டு மக்களின் மீது கொண்ட அளவற்ற கருணையாலும் ஒரு தாயின் பரிவோடும் பாசத்தோடும் தைரியமாக எடுத்த காரியத்தை நிறைவேற்றி தந்துள்ளார் ....... அப்பாடா இது போன்ற  பஜனை பாடல்களை சதா பாடி பாடி காவடி தூக்குகிறார்கள். . வாந்தி வருகிறது.
வரலாற்றில் இது  ஒன்றும் புதிது அல்ல . அத்தனை சர்வாதிகாரிகளும் மனநோயாளர்களும் இப்படி பட்ட ஜால்ரா சத்தங்கள் கேட்ட வண்ணமே வாழ்ந்துள்ளார்கள்..... வீழ்ந்துள்ளார்கள் , . அண்மையில் பிரபா கூட இப்படியான ஜால்றாக்களால்தான் கண்ணை மூடிக்கொண்டு பரலோகம் சென்றார்.  அவரது அடிமைகூட்டம்  ஜெயாவின் அடிமைகூட்டதிற்கும் சற்றும் குறையாத அளவு பஜனை பாடியது.
தலைவரின் நேரடி வழிகாட்டலில் அல்லது தலைவரின் தீர்க்கமான காய் நகர்தல்மூலம் அல்லது நுட்பமான அறிவு பொறுமை மற்றும் எதிரியின் பலவீனத்தை அறிந்து தாக்கும் திறன் போன்ற எத்தனையோ பஜனை பாடல்களை அவர்கள் சதா பாடி பாடி உருவேற்றி ஒரு மாதிரி துடைத்து எறிந்து விட்டார்கள்.
ஜெயாவுக்கும் பிரபாவுக்கும் நிறைய ஒற்றுமை. இருவருமே மன நோயாளிகள் .
இருவருக்கும் தம்மை பிறர் வணங்குவது மிகவும் பிடிக்கும், அவ்வளவு தாழ்வு மனப்பான்மையால் கொண்டவர்கள்.
இருவரும் சதா தங்களை என்னவோ வானத்தில் இருந்து வந்த தலைவர்களாக மனப்பால் குடிப்பவர்கள்.  ஏனென்றால் இருவருக்குமே படிப்பு கம்மி .அதன் காரணமாகவே தாம் அறிவாளி என்று காட்டி கொள்ள எப்போதும் தங்களை சுற்றி துதி பாடுபவர்களையே நடமாட விடுவர்.
இருவரும் கூட இருப்பவர்களை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திவிட்டு கொஞ்சம் கூட கூசாமல்  தூக்கி எறிந்துவிடுவர்.
இருவருமே யாரும் நினைக்க முடியாத அளவு பெரிய அடிமை கூட்டத்தை உருவாக்கி விட்டனர்.
இருவருமே சென்ற பாதை அல்லது செல்கின்ற பாதை அழிவு பாதைதான்,  இதை அறியாமல்  வெறும்  வாயில்லா ஜீவன்களாக இவரின் பின் செல்பவர்களை என்ன என்று சொல்வது ?
ஜெயலலிதாவின் சுயரூபத்தை நிச்சயம் வரலாறு புட்டு புட்டு வைக்கத்தான் போகிறது.,
அண்ணா அறிவாலயம்  பட்ட பாடு  ஒன்றே போதும் ஜெயலலிதா யார் என்று வரலாறு பாடம் எடுக்கும் . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக