வியாழன், 31 ஜூலை, 2014

நட்வர் சிங் படு சுயநலவாதி ! உண்மைகளைத் திரிக்கிறார்!

உண்மைகளைத்-திரிக்கிறார்-நட்வர்-சிங்-காங்கிரஸ்-தாக்குw 2004ஆம் ஆண்டு சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல் காந்தியே காரணம் என்று நட்வர் சிங் கூறியிருப்பதையடுத்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொடர்ந்து நட்வர் சிங்கை தாக்கி வருகின்றனர். அதாவது சோனியா பிரதமரானால் அவரும் ராஜீவ் காந்தி மற்றும் இந்திரா காந்தி போல் கொல்லப்பட்டு விடுவார் என்று அஞ்சி ராகுல் காந்தி அவரைப் பிரதமர் ஆவதிலிருந்து தடுத்தார் என்று நட்வர் சிங் கூறியுள்ளார். நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நாட் இனஃப் (One Life is Not Enough ) என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது. புத்தக விற்பனைக்காக பரபரப்பான முறையில் உண்மையற்ற, அடிப்படையற்ற விஷயங்களைக் கூறுவதை அனுமதிக்க முடியாது” என்று கடுமையாகக் கூறியுள்ளார். இந்த ஆசாமி தனது புத்தகம் விற்பனையாகவும் முடிந்தால் பாஜாகமீது சவாரி செய்யவும் தான் முயற்சிக்கிறார் ?
மேலும் அவரிடம் இது குறித்து மானநஷ்ட வழக்குத் தொடரப்படுமா என்ற கேள்விக்கு அவர் கூறும்போது, “அரசியல் விவகாரங்கள் அரசியல் மட்டத்திலேயே தீர்க்கப்படும்” என்றார் நட்வர் சிங் கருத்து குறித்து பெயர் கூற விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த விவகாரமெல்லாம் காலத்தின் போக்கில் அழிந்து விடும். நிற்காது, எனவே சட்ட நடவடிக்கை என்ற பெயரில் அதற்கு நீண்ட ஆயுளை வழங்கிவிடுதல் கூடாது என்றார். நம்பிக்கையைப் பெற்ற ஒரு மனிதர் செய்யும் துரோகம் இது என்று அவர் நட்வரைச் சாடினார் tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக