ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குள் குடியேறிய முதல் மனிதனின்
வாரிசு தமிழகத்தில், மதுரை அருகே ஒரு குக்கிராமத்தில் இருப்பதைக்
கண்டறிந்துள்ளனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர்.
விருமாண்டித் தேவர் என்ற பெயருடைய அந்த 30 வயது நபரின் ஜீன், கிட்டத்தட்ட
70,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய ஆப்பிரிக்க
மனிதர்களின் ஜீன்களோடு ஒத்துப் போவதாக இக்குழுவினர் கூறியுள்ளனர்.
மதுரை அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில்தான் விருமாண்டி வசித்து வருகிறார்.
இவரது ஜீன் எம் 130 ரக ஜீனாகும். இதுதான் இந்தியாவில் தற்போதைய தேதியில்
மிகவும் பழமையான ஜீனாகும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
இந்தியாவின் முதல் மனிதனின் வாரிசு
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வாரிசு என்ற பெருமையைப் பெறுகிறார் விருமாண்டி.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையைச் சேர்ந்த
பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தி முடிவை
வெளியிட்டுள்ளது.
மேலும் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் வசித்து வருபவர்கள்,
ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த முதல் மனிதர்களின் வாரிசுகளாக
இருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
ஆக்ஸ்போர்ட் ஆய்வு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வை பிச்சப்பன் நடத்தியுள்ளார்.
விருமாண்டி தேவர், சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.
ஆப்பிரிக்க மனிதனின் பயணம்
ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய மனித குலத்தின் இடப் பெயர்ச்சியானது,
சிந்து சமவெளி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தென் இந்தியா வழியாக
ஆஸ்திரேலியா வரை போயுள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக மரபியல் நிபுணர்
ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறுகிறார்
இந்தியாவில் மனித குலம் தழைக்க தென்இந்தியா முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் வல்ஸ் கூறுகஇறார்.
விருமாண்டி பரம்பரையின் முன்னோர்கள் சிலர் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் இப்போதும் இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுதொடர்பான ஆய்வுகளில் வெல்ஸ் மற்றும் தமிழக குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் 1 லட்சம் டிஎன்ஏ மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்து
வருகிறதாம். மிக விரிவான மரபியல் புலனாய்வாகவும் இது மாறியுள்ளது. ஒத்த
மரபணுக்களைக் கொண்ட மனிதனைக் கண்டுபிடிப்பதே இதன்
இந்தியா ஆய்வில் பிச்சப்பன் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவர்
தென்னிந்தியாவில் கடலோரம் வழியாகத்தான் மனித இடப் பெயர்ச்சி முதல் முறையாக
நடந்தது என்பதைக் கண்டுபிடித்துக் கூறியவர் பிச்சப்பன் என்பது
குறிப்பிடத்தக்கது.
மனிதகுலத்தில் மொத்தமே 30 ஆயிரம் ஜீன்கள்தான் உள்ளன. அதில் 99 சதவீதம்
கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட அனைத்துமே
"மியூட்டேஷன்"கள்தான். இதனால்தான் மனிதர்களின் குணம், நிறம் உள்பட பல வகை
மாறுபாடுகள் உருவாகக் காரணம்.
ஒரிச மாநிலத்தின் காண்ட் இனத்தவர்களுக்கும், பூர்வீக தமிழர்களுக்கும்
இடையே நிறைய ஒற்றுமை உள்ளதாம். இவர்கள் பேசுவது மத்திய திராவிட மொழியாகும்.
இவர்களும் தமிழர்களைப் போலவே பொங்கல் கொண்டாடுகின்றனர். இவர்களுக்கும்,
தமிழர்களுக்கும் இடையிலான பூர்வீக தொடர்பை ஆராயும் ஆய்வுகளும் நடந்து
வருகின்றனவாம்
அதேபோல மத்தியப் பிரதேசத்தில் உள்ள சில பெயர்கள் தமிழகத்தின் சில
கிராமங்களில் காணப்படுகிறது. எனவே இவர்களுக்கும் மத்தியப் பிரதேசத்தின்
குறிப்பிட்ட இனத்தவர்களுக்கும் இடையி
tamil.oneindia.in
tamil.oneindia.in
it's not true.. Please read following article to know more about this.. http://maruppukalam.blogspot.in/2013/04/blog-post.html
பதிலளிநீக்கு