புதன், 30 ஜூலை, 2014

ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் வீடுகளிலும் உளவு கருவிகள் ? டெல்லி மீண்டும் பரபரப்பு !

புதுடெல்லி,
மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோரது வீடுகளிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியானதால் டெல்லி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் பரபரப்பு டெல்லி தீன்மூர்த்தி தெருவில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மந்திரியும், பா.ஜனதாவின் முன்னாள் தலைவருமான நிதின் கட்காரியின் வீட்டு படுக்கை அறையில் சக்தி வாய்ந்த உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும், பின்னர் தற்செயலாக அவை கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.  போகப்போக தெரியும் இந்த பூதத்தின் சுய குணம் புரியும் , 

இதனை நிதின் கட்காரி மீண்டும் மீண்டும் மறுத்தார். எனினும் இது தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருடைய வீடுகளிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்ட பிரச்சினை மறுபடியும் சூடுபிடித்து இருக்கிறது.
சரியானது அல்ல எனினும் இந்த தகவலை பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் நிதின் கோஹ்லி மறுத்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆண்டில் பா.ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை பரவலாக இருந்தது. இதன் காரணமாக தகவல் சேகரிப்பில் அப்போது ஆர்வம் காட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறினால் அது ஆச்சரியத்துக்குரிய விஷயம் அல்ல. அதற்காக திட்டமிட்டு உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கலாம் என்றும், அல்லது ஒட்டுக்கேட்டு இருக்கலாம் என்றும் கூறுவது சரியானது அல்ல என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவிடம் கொண்டு செல்வோம் எனினும் சில வாரங்களுக்கு முன்பு 2010–ம் ஆண்டு பா.ஜனதாவை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை (சி.ஐ.ஏ.) உளவு பார்த்ததாக அண்மையில் இந்த முகமையின் முன்னாள் ஏஜெண்டு எட்வர்ட் ஸ்னோடென் பரபரப்பு தகவல் வெளியிட்டு இருந்ததும், இது தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நிதின் கோஹ்லியிடம் கேட்டதற்கு, அப்படி இதில் ஏதேனும் அவசியம் இருந்தால், இந்த பிரச்சினையை அமெரிக்காவிடம் எடுத்துச் செல்வோம் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி உதவி பா.ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியிடம் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோரது வீடுகளில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், என்னை பொறுத்தவரை பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை நிச்சயம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) குறி வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பா.ஜனதாவின் மீதான இதுபோன்ற உளவு பார்க்கும் வேலைக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உதவி செய்து இருக்கவேண்டும் என்று குற்றம் சாட்டினார்.
மோடியின் மவுனம் ஏன்? அதே நேரம் இப்பிரச்சினையை காங்கிரஸ் விட்டுவிடுவதாக இல்லை. உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோகில் கூறுகையில், ‘‘மோடி முதல்–மந்திரியாக இருந்தபோதுதான் குஜராத்தில் பொது இடத்திலேயே அரசுக்காக உளவு பார்க்கப்பட்டது. எனவே இதற்கும், இப்போது டெல்லியில் கூறப்படும் பிரச்சினைக்கும் பொதுவான தொடர்பு இருப்பதாக கருத வாய்ப்பு இருக்கிறது. முன்பு தான் கேள்வி எழுப்பியபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாக இருப்பதாக மோடி குற்றம் சாட்டினார். ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் மன்மோகன்சிங்கின் கேள்விக்கு மோடி மவுனம் சாதிப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக