செவ்வாய், 29 ஜூலை, 2014

மீண்டும் தமிழுக்கு வருகிறார் பியா ! ஏகன் கோவா போன்ற படங்களில் நடித்தவர்

சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார் பியா.பொய் சொல்லப்போறோம், ஏகன், கோவா, கோ படங்களில் நடித்தவர் பியா. தமிழில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட்டுக்கு திரும்ப சென்று சிறு படங்களில் நடித்து வந்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் அவர் நடிக்கிறார். படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:ஷபீர், பியா பாஜ்பாய், ஸ்ருதி ஹரிஹரன், தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். பெண் இயக்குனர்களால் கமர்சியல் படங்கள் தர முடியாது என்ற இமேஜை மாற்றும் வகையில் இது இருக்கும். திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் ஒரு லாரியில் கதை பயணிக்கிறது.
அதில் செல்பவர்கள் யார்? லாரியில் என்ன இருக்கிறது? அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது உச்சகட்ட கதை. தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பது மையக் கரு. இதில் நான்கு வாழ்க்கை கதைகள் வெவ்வேறு கோணத்தில் சென்று இணையும். திடீரென்று பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டால், உலக வாழ்க்கை என்னவாகும் என்ற கேள்விக்கான விடை படத்தில் இருக்கும். நெடுஞ்சாலைகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. நானும் நடித்துள்ளேன். செப்டம்பரில் படம் ரிலீசாகிறது. .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக