சனி, 2 ஆகஸ்ட், 2014

கூடுவாஞ்சேரி கோயிலில் தீ மிதித்த 3 பக்தர்கள் காயம் !

 கூடுவாஞ்சேரி கோயில் விழாவில் தீமிதித்த 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரி ரயில்வே கேட் அருகில் கன்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு 71ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 150  பக்தர்கள் தீமிதித்தனர். கூடுவாஞ்சேரி ஈவிஆர் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (42), அவர் மகன் கேசவன் (11), நீலமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த  பாபு (58) ஆகியோர் தடுமாறி தீயில் விழுந்தனர். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அந்த 3 பேரையும் மீட்டு நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் பெத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் 3  பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக