சனி, 9 பிப்ரவரி, 2013

பத்மப்ரியா: தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது

மாலிவுட்டிலிருந்து வந்து கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் என ஒரு பட்டியல் போடலாம். ஆனால் இந்த பட்டியலில் இருந்து தவறிப்போய் மற்ற எல்லா மொழி திரையுலகிலும் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை வித்யாபாலன்.பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களை தொடர்ந்து தவிர்த்து வந்தார் வித்யாபாலன்.  காரணம் இல்லாமலா இருக்கும்.  எல்லாம் பேசி முடித்த பின் வேறு ஹீரோயினை வைத்து படப்பிடிப்பு நடத்தியது, சில காட்சிகள் நடித்த பின் வித்யாபாலனை மாற்றியது என கோலிவிட்டிற்கும், வித்யாபாலனுக்கும் பேசித் தீர்க்க முடியாத கணக்கு நிறையவே உள்ளது.இதைக் காரணமாகக் கொண்டு தான் தமிழக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடிக்கவே முடியாது என மறுத்து மணவாழ்க்கைக்குள் புகுந்துவிட்டார் வித்யாபாலன். இதே போல் ஒரு மாலிவுட் இறக்குமதியான சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம், பட்டியல் ஆகிய படங்களில் நடித்த பத்மப்ரியாவையும் உருவாக்கிகொண்டு வருகிறதாம் கோலிவுட்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பத்மப்ரியா “ நான் நடித்த படங்கள் நல்ல ரிசல்ட் கொடுத்திருந்தும், தமிழ் சினிமா என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. என் திறமைகளை கண்டுகொள்ளவில்லை.  நான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தைரியமாக நடிப்பவள் என்பது தெரிந்திருந்தும் என்னைப் பற்றி மறந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துவிட்ட பத்மப்ரியா இந்தி படங்களிலும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட ராஜஸ்தான் சிறுமி கவலைக்கிடம் : டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி

புதுடெல்லி: ராஜஸ்தானில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமியை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அடிவயிற்றில் 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவளது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று மாலை சிறுமியை டெல்லிக்கு கொண்டு சென்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் தனிவார்டில் சேர்த்தனர். அவளது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பரிசோதனைகளுக்கு பிறகு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எம்ய்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர். பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து அவளது குடும்பம் பிழைப்பு தேடி ராஜஸ்தானின் சிகாருக்கு வந்தனர். சிறுமிக்கு 6 சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். பலாத்காரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் ஜாமீனில் வந்து விட்டனர். ‘கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகள் பணபலத்தால் தப்பிவிட்டனர்’ என சிறுமியின் தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

மணிரத்னத்தின் கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு”

மணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல்! “ஏம்பா.. சரக்கை பார்த்து வாங்க மாட்டீகளா?”

Viruvirupu
“ஆச்சரியமாயிருக்கே… இந்த ஒரு கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு” “மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நீந்தப் போய் மூழ்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் மணிரத்னம் வீடு மற்றும் அலுவலகத்தில் மையம் கொள்வார்கள் என்று தெரியவருகிறது” என்று இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். முற்றுகைக்கு முன் சில பேச்சுவார்த்தைகள் போன் மூலமும், மற்றொரு தரப்பு மஸ்தியஸ்தத்திலும் நடந்ததாக தெரிகிறது. இவற்றில் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால், வீட்டை முற்றுகையிடுவதை தவிர வேறு வழியில்லை என விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து மணிரத்னம் கேட்டாரா, அல்லது வேறு ஏற்பாடா தெரியவில்லை, மணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
கடல் படம் வெளியான முதல் நாளே அதன் ரிசல்ட் தெரிந்து விட்டது. ஆனால், சோகம் என்னவென்றால், எடுத்த படத்தை போட்டுக் காட்டாமலேயே மணி விற்றுவிட்டார். மணிரத்னத்தின் ஓவர் பில்ட்-அப்பை பார்த்து கோடிகளை கொட்டிக் கொடுத்தவர்கள், இப்போது தேள் கொட்டிய நிலையில் உள்ளார்கள்.
ஏம்பா.. மீன் வாங்கும்போதே பார்த்து வாங்குவீங்க.. கடல் வாங்கும்போது பார்த்து வாங்க மாட்டீகளா?

குஷ்பு மீது தாக்குதல்: தி.மு.க. தலைமை, நடிகர் சந்திரசேகருக்கு குட்டு!

Viruvirupu
நடிகை குஷ்பு வீட்டின் மீதும், அவர் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள், தி.மு.க.-வில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்ற பேச்சு பரவலாக அடிபட்டுக்கொண்டு உள்ள நிலையில், தி.மு.க .தலைமை, நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க. முன்னணியினரிடையே ஏதாவது கலகம் விளைவித்து குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று முயன்று பார்க்கின்ற ஒரு கூட்டத்தினர் அண்மைக் காலத்தில் குஷ்பு சுந்தரை தி.மு.க.விலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி வலை பின்னி, அதிலே வெற்றியடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த ஏமாற்றத்தால் குஷ்பு சுந்தரின் வீட்டைத் தாக்கவும், அவருடைய கார் கண்ணாடியை உடைக்கவுமான காட்டுமிராண்டிச் செயல்களில் ஈடுபட்டதோடு, குஷ்புவினுடைய பிள்ளைகளையும் மிரட்டி அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் குஷ்பு கழகத்தை விட்டு வெளியேறவில்லையே என்ற ஆத்திரத்தில் தி.மு.கழகம் குஷ்புவை வெளியேற்றும் என்ற பொய்ச் செய்திகளையும் ஏடுகளில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் தலைமைக் கழகம் உடனடியாக தலையிட்டதோடு, கழகத்தின் கட்டுப்பாட்டினை காத்திடாமல் குஷ்புவின் கார், வீடு இவைகளுக்கு சேதாரம் ஏற்படுத்தி அவரையும் தாக்கிட முற்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது கழகத்தின் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு இப்பிரச்சினைப் பற்றி அவரவர்களும் தம் இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
“…இஷ்டம் போல் அறிக்கைகள் கொடுப்பதையும் – பேட்டிகள் அளிப்பதையும்..” என்று கூறப்பட்டிருப்பது, நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு விழுந்த குட்டு என்று ஒரு பட்சி சொல்கிறது! வாகை சந்திரசேகர் என்ன சொன்னார் என்பதை கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்

ஸ்டாலின் அனுமதியோடுதான் குஷ்பூவுக்கு எதிராக சந்திரசேகர் அறிக்கை விட்டாரா?

பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அடுத்த தலைவரை பொதுகுழு கூடி முடிவு செய்யும் என பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு. அதற்கு உண்மையான காரணம் ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று சொல்லியிருந்தால் அவரை ஸ்டாலின் ஆதரவாளர் என்று சொல்லி அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் இதை போன்று தாக்குதலும் நடத்துவார்கள் என்பதால் இவர்தான் அடுத்த தலைவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறார். யாருடைய கோபத்திற்கும் ஆளாக கூடாது என்பதுதான் அவரது எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் அதற்காக சந்திரசேகர் எப்படி அறிக்கை விட்டார் என்று தெரியவில்லை. கருணாநிதி அல்லது ஸ்டாலின் அனுமதி இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இவர்களே இதுபோன்று மிரட்டும் தோணியில் நடந்துகொண்டிருப்பதை உண்மையான திமுக தொண்டர்கள் உணர வேண்டும். ஸ்டாலின் அவர்களை எதிர்த்து இது மடம் அல்ல என்று அழகிரி செய்தியாளர்களிடம் சொன்னாரே சந்திரசேகர் அழகிரியை எதிர்த்து ஏன் அறிக்கை வெளியிட வில்லை? குஷ்புவை தாக்கும் தொண்டர்கள் ஏன் அழகிரிவீட்டை தக்க முயலவில்லை? திமுக தொண்டர்கள் ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவது வெட்ககேடானது.
suresh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

Vijai Mallaiya வின் Vintage கார் கலெக்ஷன்!

ஆடம்பரத்தின் உச்சம் எங்கெல்லாம் விஜய் மல்லையாவிற்கு ஓர் இடம் உண்டு. மதுபான தொழிலிருந்து வரும் வருவாயை ஆடம்பரத்திற்கு செலவிட்டதுபோக கார் பந்தயம், கிரிக்கெட், பார்முலா-1, படகு பந்தயம் மற்றும் குதிரை பந்தயங்கள் என அடித்து விட்டு வருகிறார்.
ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் 1906ம் ஆண்டு முதல் 1926 வரை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்த மாடல். மல்லையாவிடம் இருப்பது 1913ம் ஆண்டு மாடல். 6 சிலிண்டர்கள் கொண்ட 7.4 லிட்டர் டூவல் இக்னிஷன் எஞ்சின் கொண்ட இந்த கார் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 4 ஸ்பீட் டிரான்மிஷன் பொருத்தப்பட்டது. லண்டன் டூ எடின்பர்க் பாடி ஸ்டைல்

சன்பீம் டைகர் டைகர் என்ற பெயரிடப்பட்ட 1925ம் ஆண்டு மாடலான இந்த கார் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்தது. 4.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டது.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு

2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து நீதிபதி எஸ்.எம்.திங்கா தலைமையில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. 2004ல் அப்சல் குரு குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட 2006 அக்டோபர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்சல் குரு குருணை மனு தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்சல் குருவின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையடுத்து ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அப்சல் குருவின் சொந்த ஊரான காஷ்மீரில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா கார்த்தி சிவகுமார் அமீர் லடாய் ஓவர்! இனி ஆதிபகவனை இழுத்து விழுத்த மாட்டாரா பரதேசி?


Viruvirupu
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு மத அமைப்புகள் ஏற்படுத்தும் சிக்கல்களை விட பெரிய சிக்கலாக இன்டஸ்ட்ரிக்கு உள்ளேயே ஒரு சிக்கல் இருந்தது. தமிழ் திரையுலகின் இரண்டு டாப் ஹீரோக்களை கையில் வைத்திருக்கும் சிவகுமார் குடும்பத்துக்கும் அமீருக்கும் இடையே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது உள்பகை.
ஆதிபகவன் ரிலீஸ் ஆகும்போது கௌன்டர் அட்டாக் கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆதிபகவன் எப்போதோ முடிந்த பின்னரும் இன்னமும் பெட்டிக்குள் தூங்குவது இந்த கௌன்டர் அட்டாக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குதான். ஆதிபகவன் ரிலீஸின்போது அதே தேதியில் சகோதரர்கள் இருவரில் ஒருவரின் படத்தையும் ரிலீஸ் செய்வது என்பதே ஆரம்ப பிளான்.
ஆனால், சகோதரர்களின் சமீபத்தைய படங்கள் எல்லாம் தள்ளாட்டத்தில் உள்ளன. அதுவும் சமீபத்தில் பல கோடிகளில் வியாபாரமாகி வெளியான ஒரு சகோதரரின் படத்தை பவர் ஸ்டார் (கண்ணா லட்டு) அசால்ட்டாக முந்திச் சென்றதில், இன்ட்டஸ்ட்ரியே நமுட்டுச் சிரிப்பு சிரிக்க தொடங்கியிருக்கிறது.
அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. காபிபொடி, பற்பொடி என்று விளம்பரங்களில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

நீது சந்திரா : கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்

சென்னை: ஹீரோ நட்பாக இருந்ததால் நெருக்கமான காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது என்றார் நீது சந்திரா. ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படங்களில் நடித்தவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: ஆதி பகவன் படத்தில் அமீருடன் பணியாற்றியது வித்தியாசமான அனுபவம். 2 வருடம் அவருடன் பணியாற்றினேன். ஜோக் சொல்வது, வேடிக்கையாக பேசி டயம் பாஸ் செய்வது என்று எதிலும் நேரம் செலவிட்டதில்லை. ஹீரோ ஜெயம் ரவி எனது நண்பர். இதனால் நடிப்பிலும், நெருக்கமான காட்சிகளிலும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனது. கோலிவுட்டில் பணியாற்றுபவர்கள் ஒழுக்கமாகவும், கடுமையாகவும் உழைப்பவர்கள். இங்கு நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வம் வந்திருக்கிறது. என்னைப்பொறுத்தவரை ஒரே பாணி நடிப்பு என்ற வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை. சினிமாவில் பல பரிமாணங்களில் நடிக்க விரும்புகிறேன். கடந்த 2 படங்களில் நான் ஏற்று நடித்த வேடங்களை கவனித்து பார்த்தால் அது புரியும். இந்த எல்லைக்குள்தான் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதையும் நான் வரையறுத்துக் கொள்ளவில்லை.

இலங்கை வங்கி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்தது : 20 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

சென்னை-: சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலை ஜெரால் கார்டன் 2-வது சந்திப்பில் இலங்கை வங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து, நேற்று மதியம் முகமூடி அணிந்த 20-க்கும் அதிகமான மர்ம நபர்கள் இந்த வங்கியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வங்கி ஊழியர்களான கொடுங்கையூரை சேர்ந்த மரிய ராஜேஸ் (26), இலங்கை தமிழர் ஜனகன் (21) ஆகியோருக்கு அடி, உதை விழுந்தது. அவர்கள் இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தனிப்படை அமைத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். முதல்கட்டமாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் !

பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும்
    அர்ச்சகர்கள்
    னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.
    நீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா மற்றும் காலின் கான்சால்வேஸ் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.
    பெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை  தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு
    • ‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.

    TamilNadu 1000 ஆண்களுக்கு, 900 பெண்கள்

    தமிழகத்தில், 14 மாவட்டங்களில், பெண் குழந்தை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 1,000 ஆண்களுக்கு, 900 பெண்கள் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த, 2000ம் ஆண்டில், 2015க்குள் எட்டப்பட வேண்டிய நாட்டின் தேவைகள் குறித்து, பட்டியலிடப்பட்டது. இதற்கு, "புத்தாயிரம் வளர்ச்சி இலக்குகள்' என, பெயரிடப்பட்டது.இந்த இலக்குகளை அடைவதற்கு, மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து, இளங்குழந்தைகள் உரிமை பேணும் நிறுவனம், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், குழந்தை பாலின விகிதம் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டதுஆய்வில் கண்டறியப்பட்டவை: பல தலைமுறைகளாக, நம் நாட்டில், பெண் பாலின குழந்தை விகிதம் குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால், 1991ம் ஆண்டு, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 945 பெண் குழந்தைகள் பிறந்தன. 2001ம் ஆண்டு, பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 914 ஆக குறைந்தது.
    * தமிழகத்தில், குழந்தை பாலின விகிதம் உற்சாகமளிப்பதாக இல்லை. அரசின் கணக்கீடுகள், குறுகிய காலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டவை. கருவுறும் முன் மற்றும் கருவுறுதலுக்கு பின், பரிசோதனை நுணுக்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்) சட்டம் - 1994 மற்றும் மருத்துவக் கருக்கலைப்பு சட்டம் - 1971 ஆகியவை அமல்படுத்தப்படவே இல்லை.

    ஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டது

    விஸ்வரூபம் விவகாரம்: “புரட்சித் தலைவி கார்ட்டூன் கேரக்டரா?” தமிழக அரசு கடும் ஆவேசம்!

    Viruvirupu
    தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1217-வது தடவையாக (உத்தேச கணக்கு) களங்கம் ஏற்பட்டு விட்டது. இதனால் வெகுண்ட தமிழக அரசு, டி.வி. சேனல் ஒன்றின்மீது, அவதூறு வழக்கு போட்டுவிட்டது.
    விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது குறித்து என்.டி. டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்தி, தமிழக முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது எனக்கூறி, அந்த டி.வி.யின் நிர்வாகிகள் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
    முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜனவரி 31-ம் தேதி என்.டி. டி.வி.யில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி வெளியானது. இந்த செய்தி காமிக்ஸ் முறையில் ஒளிபரப்பப்பட்டது.
    அதில், நடிகர் கமலஹாசன், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டயலாக் பேசுவதுபோல் காட்சி அமைந்திருந்தது.
    இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கும், தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் உள்ளது. செய்தியை வெளியிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் காஷிஸ் குப்தா, என்.டி. டி.வி. தலைவர் பிரணாய்ராய், தலைமைச் செயல் அதிகாரி விக்ரம் சந்திரா, செயல் துணைத் தலைவர் கே.வி.எல்.நாராயண ராவ் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டனைக்கு உரியவர்களாவார்கள். எனவே, அவர்கள் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
    நாட்டில் உள்ள டி.வி. சேனல் முதல்கொண்டு, காதுகுத்து விழா போஸ்டர்வரை புரட்சித் தலைவிக்கு களங்கம் விளைவிப்பதை, மானமுள்ள தமிழன் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? புரட்சித் தலைவியின் நற்பெயர் ஸ்டாக்கும், எத்தனை காலம்தான் தாங்கும்?
    இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
    1) தமிழக அரசு அவதூறு வாரியம் அமைக்கலாம்.
    2) அவதூறு துறை அமைச்சு ஒன்றை உருவாக்கி, அதிபணிவு அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம்.
    3) அவதூறு விரைவு நீதி மன்றம் அமைக்கலாம்.
    4) ஜெயா டி.வி. தவிர்ந்த மற்றைய அனைத்து மீடியாவுக்கும் இடைக்கால தடை கோரலாம். யாராவது எதிர்த்து வழக்கு போட்டால்… கைவசம் இருக்கவே இருக்கிறார், விஸ்வரூபம் புகழ் நவநீதகிருஷ்ணன். கேஸை பிச்சுபுடுவார்.. பிச்சு!

    காவிரியில் 2.44. டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு


    2.44. டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கும் குட்டு டெல்லி: காவிரியில் 2.44. டி.எம்.சி. நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் வழக்கறிஞருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.வழக்கு என்ன?தமிழகத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. நீர் கோரி தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த வார விசாரணையின் போது குறைந்தபட்சம் 9 டி.எம்.சி. நீரையாவது திறக்கவும் தமிழகம் கோரியது. ஆனால் கர்நாடகா பிடிவாதமாக மறுத்தது. இதைத் தொடர்ந்து மத்திய உணவுத்துறை துணை ஆணையர் பிரதீப்குமார் ஷா, கே.எஸ். ஜேக்கப், ஏ.மகேந்திரன் ஆகிய அடங்கிய குழுவை அமைத்து திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதனடிபப்டையில் 14 இடங்களில் மத்திய குழுவினர் சம்பா சாகுபடியை நேரில் பார்வையிட்டனர்.இதனடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட சம்பா சாகுபடியை காப்பாற்ற 2.44 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது என்று மத்திய குழு பரிந்துரைத்தது.

    வடிவேலு ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார்

    நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த காமெடி நடிகர். அவர் ஹீரோவாக நடித்த ’இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படமும் சூப்பர் ஹிட்டாகி வடிவேலுவை ஹீரோவாக மாற்றியது. ஹீரோவாகவும், காமெடியனாகவும் தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென ஒரு இடத்தை அடைந்திருந்தார் வடிவேலு. தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருந்த சமயத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பாக அ.தி.மு.க கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆளும்கட்சிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்ததால் திரையுலகினர் பலரும், இவரை நடிக்க வைத்தால் தமக்கு ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று வடிவேலுவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க தயங்கினர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் சொந்த படங்களிலும் கூட வடிவேலுவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.திரையுலகில்  மார்கெட் இல்லாத போது சம்பளத்தை குறைத்து வாங்குவது திரையுலகில் வழக்கமான ஒன்று. வாய்ப்புகள் இல்லாத போதிலும் தனது சம்பளத்தை உயர்த்தியே கேட்டுக்கொண்டிருந்தார் வடிவேலு. மார்கெட் இல்லாத சமயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக் கூடும் என்று தெரிந்திருந்தும் இவரை நடிக்கக் கேட்டால் இவ்வளவு சம்பளம் கேட்கிறாரே? என வடிவேலுவை சந்தித்தவர்கள் புலம்பியது அவரது காதுக்கு கேட்டதோ என்னவோ, தன்னிலை உணர்ந்து கதை சொல்ல வருபவர்களிடம் இப்போது சம்பளத்தை குறைத்து கேட்கிறேராம்.இதன் பயனாக ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். ’போட்டா போட்டி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் யுவராஜா தான் வடிவேலு நடிக்கும் இந்த படத்திற்கு இயக்குனர். யுவராஜா தற்போது விதார்த் நடிப்பில் ‘நாகேஷ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருப்பதால், இந்த படம் முடிந்ததும் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

    ஜனநாயகத்தைப் பயன்படுத்தி பாசிசத்தை உருவாக்குதல்– வஹாப்

    மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள் http://www.jeyamohan.in/?p=34193 ,மனுஷ்யபுத்திரன் – வஹாபியம்- கடிதங்கள் http://www.jeyamohan.in/?p=34262 என்பவற்றை வாசித்தேன்.
    ரிஷானா விடயத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்த மனுஷ்யபுத்திரனுக்கும் ஏனைய பத்திரிகைகளுக்கும் எதிரான ஜெய்னுலாப்தீன் போன்றவர்களின் ஆத்திரம் புரிந்துகொள்ளக் கூடியதே.கடற்கரையில் மணல்வீடு கட்டும் சிறுவர்களுக்கு அது ஒரே அலையால் இல்லாதொழிக்கப்படும் போது ஏற்படும் மனநிலைக்கு நிகரானதுதான் இது.சகல பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக சவூதிச்சட்டங்களை பிரச்சாரம் செய்துவந்தவர்கள்.அவை கேள்விக்குள்ளாகும் போது நிலைதடுமாறிவிடுகின்றனர்.
    நவீன சமூகத்தின் மக்கள் திரள் பண்டைய சமூகங்களின் மக்கள் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு பிரமாண்டமானதாகும்.அத்துடன் தற்போதைய சமூகத்தின் உறவுநிலைகள்,சூழல்கள் என்பன பழங்குடி சமூகங்களினுடையதைவிட மிகவும் சிக்கலானவையாகும்.அவற்றிற்கு இது கறுப்பு,அது வெள்ளை என்ற எளிய சட்டங்கள் பொருத்தமானவை அல்ல.

    ஆங்கில மோகத்துக்கான அடிப்படை

    ஆங்கில மாயை, நலங்கிள்ளி, விஜயா பதிப்பகம், டிசம்பர் 2012, பக்கம் 160, விலை ரூ. 80
    விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. ‘தமிழ்மொழியில் ஆங்கிலக் கலப்பு சரிதானா, கூடாதா?’ என்பதுதான் தலைப்பு. பிற மொழி கலப்பதால் தமிழ் மொழி ஒன்றும் அழிந்துவிடாது என்பதாக மீனா கந்தசாமி, இளங்கோ கல்லாணை ஆகிய பிறர் பேசுகிறார்கள். மக்கள் தொலைக்காட்சியில் ‘புதுமைக்குத் தடையாகுமா தமிழ்?’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலில் கலந்துகொள்கிறார் நலங்கிள்ளி. அதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்ற இதழில் ‘ஆங்கிலத்தின் முற்போக்கு: பகுத்தறிவா மூடநம்பிக்கையா?’ என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு தொடர் கட்டுரை எழுதுகிறார். அந்தக் கட்டுரைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு, மேலும் சில மாற்றங்களுடன் உருவானதே இந்தப் புத்தகம் ‘ஆங்கில மாயை’. நலங்கிள்ளி பல தமிழர்களிடமும், அதுவும் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வருவோரிடமும், ஆங்கிலம் தொடர்பாக உள்ள நம்பிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறார்:

    இதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு

    மகனுக்கு மணிமுடி எதிர்த்தால் செருப்படி, மகுடம் சூட்டுவேன் பாருங்கள் , தெம்பு இருந்தால் தோள் கொடுங்கள், திராணி இருந்தால் மோதிப்பாருங்கள். கழகக் கண்மணிகளே, இதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு . புரிந்து கொள்ளுங்கள், அலை கடலென திரண்டு வாருங்கள். 
     குடும்பக்கட்சியில் வேறு யாரும் தலையிட முடியாது என்பதை செருப்பால் அடித்து சொல்கிறார்கள் நம் கழகக்கண்மணிகள்...
    நம் தமிழ் நாட்டிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ஒரு சாதாரண சினிமாவிற்கு ஒரு கூட்டம் மிரட்டுகிறது, இன்னொரு பக்கம் இலங்கை பிரச்சனைக்காக எக்மோரில் உள்ள வங்கியை ஒரு கூட்டம் அடித்து நொறுக்குகிறது (அதையும் சிலர் ஆதரிக்கிறார்கள்) எஸ் வி சேகர் விடுதலை புலிகளை பற்றி சொன்ன ஒரு கருத்துக்காக அவர் வீட்டின் மீது ஒரு கூட்டம் கல் எறிகிறது, வேறு ஒரு பக்கம் குஷ்பூ சொன்ன ஒரு பேட்டிக்காக அவர் விட்டின் மேல் கல் எறிகிறது ஒரு கூட்டம் (அதுவும் அவர் பிள்ளைகள் மட்டுமே விட்டில் இருக்கும் போது) என்னக்கு என்னமோ நாம் பாகிஸ்தான் காஷ்மீர் பாதையில் போய் கொண்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது, சகிப்பு தன்மை இல்லாத வன்முறை கூட்டமாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோமோ ? நடப்பவை எதுவும் தமிழக நலனுக்கு நல்லது அல்ல. 

    1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடி: 5 இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் கைது

    அமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்கள் போலி அடையாளங்கள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். பின்னர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செலவு செய்துள்ளனர். இது திட்டமிட்டு, அமெரிக்க நிதி அமைப்புகள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல். இதனால், அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000 போலி அடையாள அட்டை, ஆவணங்களைப் பயன்படுத்தி, 25,000 கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளனர் என்றார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ருமேனியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், 14 பேரைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டனர்; 6 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், பாபர் குரேஷி (59), இஜாஸ் பட் (53), ரக்பிர் சிங் (57), முகமது கான் (48), சாத் வர்மா (60), விஜய வர்மா (45) தர்சீம் லால் (74), வினோத் தத்லானி (49) ஆகியோரும் அடங்குவர். இவர்களில் 5 பேர் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.thenee.com

    வியாழன், 7 பிப்ரவரி, 2013

    பிரிட்டனிலும் ஓரின திருமணத்துக்கு அங்கீகாரம்!!

    சமீபத்தில் பிரான்ஸில் ஓரினக் கலப்புத் திருமணத்துக்கும், குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப் பட்டது.இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை பிரிட்டனிலும் ஓரினக் கலப்புத் திருமணம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனின் Commons இல்லத்தில் டோரி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி இரு பாலின ஜோடி தமக்கிடையே உறவு கொள்வதற்கும் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை ஓரினக் கலப்பு ஜோடிக்கும் உள்ளது எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. எனினும் பிரிட்டனில் உள்ள பிரதான தேவாலயம் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இச்சட்டத்தைத் தடை செய்வதற்காக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் நடவடிக்கை எடுப்பதற்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது.

    திமுகவின் குஷ்பூ அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்து

    நாளுக்கு நாள் குஷ்பு மீதான மரியாதை அதிகரித்தவண்ணமிருக்கிறது. அது நமக்கே அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது. குஷ்புவின் சமகால பேட்டிகள் எல்லாமே ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் லாவகத்தோடு, ஏடாகூடமான கேள்விகளுக்கும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பிச்செல்லும் அபார ஆற்றலையும் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தந்திரம்தான் என்றாலும் அது நாள்பட ரசிக்கும்படி மாறிக்கொண்டிருப்பதே நம் அச்சத்துக்கு காரணம்.
    ஆங்கில ஊடகங்களுக்கு திராவிட இயக்கத்தின் முகமாக குஷ்பூ ஏற்கனவே மாறிவிட்டார். இதை உடன்பிறப்புகள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களாலே கூட இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குஷ்பூவின் ஆங்கிலப்புலமையும் திமுகவின் கொள்கைகளை செயல்பாடுகளை சாதனைகளை கலைஞர்பாணியில் எடுத்துரைக்கிற பாங்கும் அவருடைய தோற்றமும் கூட ஆங்கில ஊடகங்களுக்கு அல்வாவை போல அமைந்திருப்பதாக அவதானிக்கலாம். உண்மையோ பொய்யோ! திமுகவின் மற்ற யாரையும் விட அக்கட்சியின் மேல் அதன் தலைவரின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக தன்னை வெளிபடுத்திக்கொள்கிறார் குஷ்பூ.

    குஷ்பு விகடன் பேட்டி...அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே

    சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார் குஷ்பு?இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்:ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்
    குஷ்பு.''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?'''நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''''திரும்பவும் சொல்றேன்...

    ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை கடுமையாக திட்டி கற்களை வீசித் தாக்கினர்.

    மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமைக்கு வருவதற்கு எதிராக நடிகை குஷ்பு அளித்த பேட்டி வார பத்திரிகை ஒன்றில் வெளியானதை அடுத்து, தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது, அதன் எதிரொலி, கல்லெறியில் போய் முடிந்துள்ளது.
    நடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. அதில் அவர், “தி.மு.க.வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தி.மு.க. தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும்.
    தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறியதாக உள்ளது.
    தி.மு.க.-வில் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளராகவே இதுவரை அறியப்பட்டவர். சில வாரங்களுக்குமுன் மதுரையில் குஷ்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு அதை புறக்கணித்தனர். இதனால் குஷ்பு, ஸ்டாலின் ஆதரவாளர் என்ற முத்திரை அழுத்தமாக விழுந்தது.
    ஆனால், அதன்பின் சில கசமூசா செய்திகள் காற்றுவாக்கில் அடிபட்டன. குஷ்புவை கோபாலபுரம் இல்லத்துக்கே வரக்கூடாது என ‘சிலர்’ தெரிவித்ததாகவும் ஒரு கதை உண்டு. அந்தக் கதையில் லேசான உண்மையும் உள்ளதாக தெரிந்தது. ஆனால், விஷயம் அத்துடன் அடங்கிப் போனது.
    இந்த பேட்டியின் பின்னணியில், ‘அந்த’ கதைதான் இருந்ததா டிதரியவில்லை.
    இன்று, குஷ்புவின் இந்த பேட்டி அடங்கிய இதழ் வெளியான சில மணி நேரங்களில் தி.மு.க.வினரிடையே பரபரப்பு கிளம்பியது.
    ஸ்டாலின் ஆதரவாளர்கள் என ஊகிக்கப்படும் 50 பேர், சாந்தோமில் உள்ள குஷ்பு வீட்டு முன்பு திரண்டனர். குஷ்புவை கடுமையாகத் திட்டிய அவர்கள், வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர்.
    இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. உடனடியாக தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
    இதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தாக்குதல் நடத்தியவர்களை கலைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது நடிகை குஷ்பு, அவரது கணவர் சுந்தர்.சி இருவரும் வீட்டில் இல்லை. குஷ்புவின் இரண்டு மகள்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
    கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைத்தனர் என்று ஒருசாராரும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். போலீஸ் இதுவரை எதுவும் கூறவில்லை!

    குஷ்பு தி.மு.க.-வினரால் தாக்கப்பட்டார் ! வீட்டுக்கு கல்லெறி

    “தளபதி நேரில் தேர்ந்தெடுத்த ஆட்களாச்சே!”திருச்சியில் என்ன பூ… குஷ்பு! தி.மு.க. இளைஞர் அணி ‘கும்மாங் குத்து’!

    Viruvirupu
    “தளபதி நேரில் தேர்ந்தெடுத்த ஆட்களாச்சே!”
    தி.மு.க.-வில் இன்று காலை தொடங்கிய ‘குஷ்பு எதிர்ப்பு அலை’ வேகமாகத்தான் இருக்கிறது. சென்னையில் குஷ்பு வீட்டுக்கு ஒரு செட் ஆட்கள் கல்லெறிய… திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவா இல்ல திருமணத்துக்கு சென்ற குஷ்பு தி.மு.க.-வினரால் தாக்கப்பட்டார். அந்த அவமானம் தாங்காமல் சென்னை திரும்ப ஏர்போர்ட்டுக்கு வந்த குஷ்புவை விமான நிலையத்தில் செருப்பால் தாக்கியுள்ளனர்.
    தி.மு.க.-வின்  கொள்கை விளக்க கூட்டங்களில்கூட நட்சத்திர பேச்சாளராக மேடையேற்றப்பட்ட குஷ்புவுக்கு, அதே கட்சியில் ஏற்பட்ட நிலை இது.
    நடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. தி.மு.க.வின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்களை ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார் குஷ்பு.
    இந்த பேட்டி இன்று வெளியானதுமே தி.மு.க.வினர், குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அதன் எதிரொலி திருச்சியில் கேட்டது.
    இன்று திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவாவின் இல்லத் திருமணம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க சென்றிருந்த குஷ்புவைப் பார்த்த தி.மு.க.வினர், ஆத்திரத்துடன் தாக்க ஆரம்பித்தனர். குஷ்பு காரில் ஏறும்போது, இளைஞர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தாக்கியுள்ளனர்.
    குஷ்பு சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்கும் நிலையில் இல்லை தொண்டர்கள்.
    அங்கிருந்து காரி்ல் தப்பித்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் குஷ்பு. விமான நிலையத்திலிருந்து அவர் வரும்போது ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து குஷ்புவுக்கு எதிராக கோஷமெழுப்பினர். அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர்.
    இப்படியான சூழ்நிலை முன்பு ஏற்பட்டிருந்தால், திருச்சியில் இருந்து மதுரைக்கு போயிருந்தால் சேஃப்! இப்போது, அங்கே உள்ளவர்களே சேஃபாக இல்லை!!  

    Deepika Padukone: ஹீரோதான் பேர் தட்டிச் செல்கிறார்

    மும்பை: படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள் என்றார் தீபிகா படுகோன். பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக ‘கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார். அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப் என்பது இப்போது பேஷனாகிவிட்டது. அந்த பட்டியலில் சேர வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் வழக்கமான ஒரே பாணியிலான நடனங்களிலும், காட்சிகளிலும் திரும்ப திரும்ப நடிக்கிறார்கள். அப்படியொரு நடிப்பு எனக்கு தேவையில்லை. ‘காக்டெய்ல் படத்தில் எனது வேடத்தை பாராட்டினார்கள். எனக்கு அதுவே போதும். அதே நேரம், படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்.

    பார்த்து தொலைச்சேன் விஸ்வரூபம் ஒரு வழியா

    vishwaroopamகுத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

    விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..
    இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.
    உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.
    மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம். ‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.
    நீக்க சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.
    இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.
    ‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அறிவுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்க பொருட்களை வாங்கு’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்,
    படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள்கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.
    விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்? என்று எழுதியிருந்தேன்.

    அமெரிக்கா H1-B விசா: ஆடுகளுக்காக அழும் ஒநாய்கள் !

    தொழிலாளர் நலன்H1-B விசா திட்டம் என்பது அமெரிக்க ஐ.டி. துறை ஊழியர்களை தெருவுக்கு அனுப்பி விட்டு, வெளிநாட்டு ஊழியர்களைச் சுரண்டி ஐ.டி. நிறுவனங்கள் தமது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கானது
    ம்ம ஊரில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதாவும் பல விஷயங்களில் அடித்துக் கொண்டாலும் அம்பானிக்கு வரிச் சலுகை கொடுப்பது, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது கொடுப்பது போன்ற அவர்களுக்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். அதைப் போலவே, அமெரிக்காவின் இரண்டு பெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் துப்பாக்கி கட்டுப்பாடு, மக்களுக்கு மருத்துவ சேவை, நடுத்தர வர்க்கத்துக்கு வரிக் குறைப்பு போன்ற விஷயங்களில் முட்டிக் கொண்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதில் ஒன்று கூடி விடுகிறார்கள்.
    ஊடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் ஓரின் ஹேட்ச், மின்னசோட்டா மாநில ஜனநாயக் கட்சி மேலவை உறுப்பினர் ஏமி க்ளோபுகர், புளோரிடா குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் மார்கோ ரூபியோ, டெலாவர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ் என்று இரு கட்சியைச் சேர்ந்தவர்களின் குழு ஒன்று குடியேற்ற புத்தாக்க சட்டம் (இமிக்ரேஷன் இன்னொவேஷன் ஆக்ட் 2013) எனப்படும் 20 பக்க மசோதா ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த மசோதா வெளிநாட்டுக்காரர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து சிறப்பான பணிகளில் வேலை வாங்குவதற்காக கார்ப்பரேட்டுகள் மூலமாக வழங்கப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரிக்க கோருகிறது.

    இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

    obamaabdullah2லகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
    ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.
    ஆனால், முசுலீம் மதவாத அமைப்புகளோ, இசுலாத்துக்கெதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் என்றும், அதற்கெதிரான தமது புனிதப் போரில் உலக முசுலீம்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறை கூவுகின்றனர்.
    ”முசுலீம்களே, ஜிகாத்துக்குத் தயாராகுங்கள்” என்று டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் அறைகூவல் விட்ட போது அதை எதிர்த்து கண்டித்தார், நடிகை ஷபனா ஆஸ்மி. ஸ்டார் டி.வி நடத்திய விவாதமொன்றில் ஷபனா ஆஸ்மியை ‘கூத்தாடி-விபச்சாரி’ என்ற பொருள்பட பகிரங்கமாக ஏசினார், இமாம்.
    வரவேற்கத்தக்க நல்ல வசவு தான்! காசுக்காகத் தன் உடலை விற்பதுதான் விபச்சாரம் என்றால், டாலருக்காகத் தன்னையும் தன் நாட்டையும் சேர்த்து விற்றுக்கொண்ட தாலிபான், பின்லாடன், சதாம், சவுதி ஷேக்குகள் ஆகியோரைப் பற்றித்தான் நாம் முதலில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
    ஆனால் முசுலீம் அமைப்புகளோ பின்லாடனையும், தாலிபானையும் இசுலாத்தைக் காக்க வந்த மாவீரர்களாகச் சித்தரிக்கின்றனர். வளைகுடாப் போரின் போது இந்த மாவீரன் பட்டத்தை சதாம் உசேனுக்கு வழங்கியிருந்தனர்.

    பதிப்புரிமை: எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்துக்கு


    copyright lockபதிப்பாளர்கள், எண்ணற்ற எழுத்தாளர்கள், எண்ணிலடங்கா புத்தகங்கள் என்று சென்னை புத்தக கண்காட்சி நம்மை மலைக்கவைக்கிறது.  தினம் தினம் புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள். தங்கள் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட முடியாதவர்கள் பதிப்பாளர்களை நாடிச் செல்கிறார்கள். பதிப்பாளர்களால் புத்தகங்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும். அதற்கான கட்டமைப்பு அவர்களிடம் உண்டு. உள்நாட்டின் மூலைமுடுக்கு தொடங்கி  வெளிநாடுகள் வரை ஒரு புத்தகத்தைக் கொண்டுசெல்லமுடியும் என்றால் அது பதிப்பாளர்கள் அல்லது வெளியீட்டாளர்களால்தான் முடியும்.
    அதேபோல் என்னதான் வியாபார உத்தி கடைப்பிடிக்கப்பட்டாலும் புத்தகம் சுவாரஸ்யமாக இல்லை என்றால் வாசகர்கள் வாங்கமாட்டார்கள். புத்தகம் விற்காது. பதிப்பாளர்களுக்கு நட்டம்தான். ஒரு புத்தகம் மக்களிடையே பேராதரவைப் பெற வேண்டுமென்றால் நல்ல எழுத்தாளரும் தேவை, நல்ல பதிப்பாளரும் தேவை. இன்றைய புத்தக வியாபாரத்தில் பதிப்பாளரைச் சார்ந்து எழுத்தாளரும், எழுத்தாளரைச் சார்ந்து பதிப்பாளரும் இருக்கின்றனர்.

    CM பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்

    முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர்.கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.தடபுடல் ஏற்பாடுகள்:வாழ்த்து பேனர்களைத் தவிர, கோயில்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லங்களில் அன்னதானங்களும், பொதுமக்களுக்கு சிறப்பு விருந்துகளும் அளிக்கி ஏற்பாடு செய்து வருகின்றனர்.கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழக்கமாக, கட்சி நிகழ்வுகள் என்றால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் நடைபெறும்.ஆனால், ஜெயலலிதா பிறந்த தினத்தை, மேல்மட்ட ஆணைகள் எதுவும் இல்லாமல், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல், கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    புதன், 6 பிப்ரவரி, 2013

    புதிய சட்டசபை வளாகத்தை மருத்துவமனையாக மாற்ற இடைக்காலத் தடை

    இந்தியப் பசுமைத்தீர்ப்பாயம் தமிழக அரசு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்ற எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இன்று புதன் கிழமை(6.2.13) இடைக்காலத்தடை விதித்தது,
    தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபைக்காக கட்டப்பட்ட புதிய வளாகம்
    சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகத்தினை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி மருத்துவமனையாக மாற்ற அஇஅதிமுக அரசு முடிவெடுத்ததாகக் கூறி வீரமணி என்பவர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுச்செய்திருக்கிறார்.
    அம்மனு சென்னையில் இயங்கும் தீர்ப்பாயத்தின் தென்னிந்தியப் பிரிவின் முன் நிலுவையில் இருக்கிறது.

    ரிசானா மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை

    இலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அவளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த கொடூரச் செயலுக்கு இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இஸ்லாமிய படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய படைப்பாளிகள் ஜனவரி 31ம் தேதி வெளியிட்ட கூட்டறிக்கை வருமாறு:
    கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான் குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.

    தலைமைச் செயலர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை? வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்

     புதுடில்லி : "குழந்தைகள், மர்மமான முறையில் காணாமல் போவது தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகம், குஜராத் மாநில தலைமைச் செயலர்கள், கோர்ட்டில் ஆஜராகாதது கண்டனத்துக்குரியது. அடுத்த முறை, கோர்ட்டில் ஆஜராகவில்லை எனில், அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும்' என, சுப்ரீம் கோர்ட், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "பச்சோபன் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனு: நம் நாட்டில், ஏராளமான சிறுவர், சிறுமியர், மர்மமான முறையில், காணாமல் போகின்றனர். 2008-2010 காலத்தில் மட்டும், நாடு முழுவதும், இரண்டு லட்சம் குழந்தைகள், காணாமல் போயுள்ளன. பெரும்பாலான குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன; குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றன. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவின், முந்தைய விசாரணையின்போது, "அனைத்து மாநில அரசுகளும், இந்த விவகாரத்தில், தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, அல் தாமஸ் கபீர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட், "பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: "குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, அனைத்து மாநிலங்களும், தற்போதைய நிலவரத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தோம். பெரும்பாலான மாநிலங்கள், இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம், குழந்தைகள் விஷயத்தில், யாருக்கும் அக்கறை இல்லை என்பது தெரிகிறது;

    பாமக-வை நிராகரிக்கும் வன்னியர்கள் – கள ஆய்வு!

    தர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.
    1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன. எனினும் சாதிக் கூட்டணியில் துவங்கி, தமிழ் தேசியத்தில் வளர்ந்து, ஓட்டரசியலில் கிடைத்த பதவிகளில் சீரழிந்து, மக்களிடம் செல்வாக்கு இழக்கத் துவங்கி, தற்போது முற்றிலுமாய் அம்பலப்பட்டு நிற்கின்றன.

    கடலூர் : சிறுவனை கடத்திக்கொன்றவருக்கு மரண தண்டனை

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த, கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் சரஸ்வதி, 15, சுகன்யா, 14 , சூர்யா, 11, மற்றும் மகன் சுரேஷ், 7, ஆகி‌யோருடன் கிராமத்தில் வசித்து வந்தார்.சிறுவன் சுரேஷ் விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த, 2009ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, பைக்கில் வந்த நபர், சுரேஷை கடத்திச் சென்றார். பின், அன்று இரவு மகேஸ்வரியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஐந்து லட்சம் பணம் கொடுத்தால் சுரேஷை விடுவிப்பதாகவும், போலீசில் கூறினால் குழந்தையைக் கொலை செய்து விடுவேன் என, மிரட்டினார்.போலீஸ் விசாரணையில், மகேஸ்வரியின் தூரத்து உறவினரான கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி மனைவி பாலாயி, 34, இவரது கள்ளக் காதலன் திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் சுந்தர் (எ) சுந்தர்ராஜன், 25, ஆகிய இருவரும் சிறுவன் சுரேஷை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது.

    இந்தியா தோல்வி வெற்றியை ருசித்த இலங்கை! மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

    Sri Lankan Women Cricketers stun the cricket world

     மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா. இதன்மூலம் அடுத்த சுற்றான "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா.
    ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகளும் "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
    இந்தியா தோல்வி: மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 42.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது.
    முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் ஜெயன்கனி 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த மெண்டிஸýம், ரசன்கிகாவும் 2-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர். மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    இதையடுத்து ஸ்ரீவர்த்தனா களம்புகுந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியதால் இலங்கையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ரசன்கிகா 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸ்ரீவர்த்தனா 59 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் ஆல்ரவுண்டர் கெüசல்யா கடைசிக் கட்டத்தில் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் சேர்க்க இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அம்பலம்

    லண்டன்: உலகம் முழுவதும் நடந்த மொத்தம் 680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்து இருப்பது அம்பலமாகியுள்ளது.கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் களேபரங்களில் முடிவது வாடிக்கை.. கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே 'மேட்ச் பிக்சிங்கில்தான்' இப்படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்குபவை.. தற்போது கிரிக்கெட்டுக்கு இருந்த 'மேட்ச் பிக்சிங்' பெயரை தட்டிப் பறித்திருக்கிறது களேபர கால்பந்து போட்டிகள்...கால்பந்துக்கு பிரபலமான ஐரோப்பாவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மட்டுமின்றி உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளிலும் 'மேட்ச் பிக்சிங்' கொடிகட்டிப் பறந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.இப்படியாக 680 போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அரங்கேறியுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 425 அதிகாரிகள், வீரர்கள் இந்த மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் புரண்டு விளையாடி இருக்கின்றனர். ரூ 44 கோடிக்கு மேல் மேட்ச் பிக்சிங் மூலம் இந்த கும்பல் சம்பாதித்திருக்கிறது.மேட்ச் பிக்சிங் தொடர்பாக 150 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றவை. இதில் 380 போட்டிகள் ஐரோப்பிய நாடுகளிலும், 300 போட்டிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்றவை.

    உடனடித் தேவை, தண்ணீர்! dinamani

    பிப்ரவரி 5, 2007-இல் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானது. செவ்வாய்க்கிழமையுடன் (5.2.2013) ஆறு ஆண்டுகள் நிறைவுற்றன. இன்னமும் இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் இருக்கிறது மத்திய அரசு.
    டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவோம் என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, இன்னமும்கூட, "இரு தரப்பும் ஏற்கும் ஒரு தருணத்துக்காக அரசிதழில் வெளியிடாமல் இருப்பதாக' நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் கூறுகிறார். அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது.
    அண்மையில் தமிழகத்தில், தஞ்சைப் பகுதியில் பேசிய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும் என்றார். இப்போது நீதிமன்றம் பிப்ரவரி 20-க்குள் வெளியிடப்பட வேண்டும் என்கிறது. பிப்ரவரி மாதத்துடன் "சம்பா' விவசாயம் முடிந்து போய்விடும். அதன் பிறகு தண்ணீர் பேச்சு பற்றிய காரசார விவாதங்கள் அடுத்த "குறுவை'ச் சாகுபடியின்போதுதான் மீண்டும் எழும்.
    அரசிதழில் வெளியாவதைக் காட்டிலும் இன்றைய அவசியத் தேவை - 3 லட்சம் ஏக்கர் நெற்பயிரைக் காப்பதுதான். மொத்தம் 9 லட்சம் ஏக்கரில் பயிரிட்டனர். 3 லட்சம் ஏக்கரில் பயிர், நீர் இல்லாமல் கருகிவிட்டது. 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி முடிந்துவிட்டது. இப்போது அறுவடைக்கு காத்து நிற்கும் 3 லட்சம் ஏக்கருக்கு உடனடியாகத் தண்ணீர் தேவை.

    பிரதமர்: சர்வதேச தரத்திற்கு ஒரு பல்கலை., கூட இல்லையே!''-

    நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
    நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை உருவாக்கும் நிலை காணப்படவில்லை. படித்த பாடம் ஒன்றாக இருக்கிறது; வேலைவாய்ப்பு வேறு மாதிரி உள்ளது. இது மிகவும் மோசமான நிலை; இதை சரி செய்ய வேண்டும்.உயர் கல்வி நிறுவனங்கள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் எல்லாம், எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தியாக இல்லை. இந்நிறுவனங்கள் சரிவர செயல்படாதது கவலை அளிப்பதாக உள்ளது.

    சவூதிக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை தடை

    இலங்கையை சேர்ந்த பெண்கள் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல இலங்கை அரசு தடை விதித்துள்ளது. சவூதி அரேபியாவில் 5 லட்சம் இலங்கை மக்கள் பணிபுரிகின்றனர். இதில், பெரும்பாலானவர்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸப்னா நஃபீக் என்ற இலங்கையைச் சேர்ந்த பணியாளருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு வீட்டு வேலைக்கு ஆள்களை அனுப்புவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு (ஏஎல்எஃப்இஏ) தலைவர் எம்.பி. அபோன்சா கூறுகையில், ""சவூதிக்கு வீட்டு வேலைப் பணியாளர்களை அனுப்புவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சவூதி அதிகாரிகள், பணியாளர்களுக்கு காப்பீடு உத்தரவாதம் வழங்கும் வரை இத்தடை நீடிக்கும். இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் திலான் பெரைராவுடன் கலந்தாலோசிக்கப்படும்'' என்றார்  thenee.com

    செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

    Abida Parveen Sings Bulleh Shah காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ?


    வினவு    ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்


  • Kashmir-3

  • பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது.
    ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின.
    “இசை இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது, பெண்கள் வீட்டில் வேண்டுமானால் பாடலாம், மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது” என்று இதற்கு விதவிதமான வியாக்கியானங்கள் தரப்பட்டன.
    “இந்த தேவடி…களை டில்லியில் செய்தமாதிரி செய்யணும்” என்பன போன்ற அநாகரிகமான ஏச்சுகள் வரையில் விதவிதமான நச்சு அம்புகள் இணையத்தில் இந்த சிறுமிகளுக்கு எதிராக எய்யப்பட்டன. வளர்ப்பு சரியில்லை என்று இவர்களது பெற்றோரை சிலர் வசை பாடினார்கள்.
    “ஆண்களுக்கு எதிரில் இளம்பெண்கள் பர்தா அணியாமல் தோன்றினால், மனித ஆசைகளை கட்டுக்குள் வைக்க முடியுமா?

    மலாலா: ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    மலாலாவின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்கான 2 ஆபரேஷன்கள் கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ராணி எலிசபத் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது. தலிபான்களால் மலாலா கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்து முடிந்து சுமார் 5 மாதங்கள் ஆகின்றன. இதுவரை ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய புகைப்படங்களும் மட்டுமே வெளியாகியுள்ளன. இந்நிலையில், முதன் முதலாக மலாலா வீடியோ மூலம் பேசிய காட்சி நேற்று ஒளிபரப்பட்டது.கீழ் உதட்டுடன் மேல் உதடு சரியாக பொருந்தாத நிலையில் சிரமப்பட்டு தெளிவாக பேசிய மலாலா கூறியதாவது:- இன்று என்னை நீங்கள் உயிருடன் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் நான் நலமடைந்து வருகிறேன். உங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் காரணம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என உலகமக்கள் அனைவரும் எனக்காக செய்த பிராத்தனை தான். உங்களுடைய பிராத்தனையின் பலனாக கடவுள் எனக்கு புதிய வாழ்க்கையை தந்துள்ளார்.இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை இந்த வாழ்க்கையின் மூலம் நான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும் கல்வியறவை பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்.இதற்காக மலாலா நிதி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன். கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் இருந்து மட்டும் ரூ. 53 கோடி நிதி சேர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.nakkheeran.in

    இணையத்தில் யார் சம்பாதிக்க வேண்டும் – முதலாளிகள் லடாய் !

    ;வினவு
    புதிய கண்டுபிடிப்புகளை லாப வேட்டை சட்டகத்துக்குள் அடக்க முயல்வதால் தொழில் நுட்பங்கள் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு பலனளிக்காமல் போவதோடு அடுத்தக் கட்ட வளர்ச்சியும் முடக்கப்படுகிறது.
    • ணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் தமது வலைப்பதிவில் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?
    • தனது இணைய தளத்தில் அல்லது பேஸ்புக்கில் அல்லது கூகுள் பிளஸ்சில் அல்லது டுவிட்டரில் ஏதாவது ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தியின் சுட்டியை கொடுத்து, இரண்டு வரி சுருக்கமும் எழுதி தொடர்புகளோடு பலர் பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்காக அந்த செய்தித் தாள்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
    இப்படித்தான் சிந்திக்கிறார்கள் இவ்வுலகை இயக்குவதாகச் சொல்லிக் கொள்ளும் முதலாளிகள்.

    பெண்கள் பாதுகாப்பு அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

    புதுடில்லி: "பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.

    அரசியல்வாதிகள் பாலியல் குற்றம்; விசாரிக்க முடியாது!; சிதம்பரம்

     ராணுவத்துக்கு, ராணுவ கோர்ட் இருக்கு, ஆனா பொலிசாருக்கு சக பொலிசார் கேசே பதிய மாட்டாங்களே? அது எங்க போயி சொல்வீங்க?
    "பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டம், முடிவானது அல்ல; ஒரு துவக்கமே. நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும், அவசர சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், எந்த ஒரு பரிந்துரையும் நிராகரிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பாலியல் வன்முறைகளை தடுக்க, மத்திய அரசு, நேற்று முன்தினம் அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தியது.< இந்த அவசர சட்டம் பற்றி, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது: 

    ஆட்சியாளர் கவனிப்பின்றி அழியும் உழவர் சந்தை dinamalar

    தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் துவங்கிய, உழவர் சந்தைகளை, ஆட்சி மாற்றத்தால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. வெளி மார்க்கெட்டை போலவே, உழவர் சந்தையிலும் கூடுதல் விலைக்கு, காய்கறிகள் விற்கப்படுகின்றன. கடந்த, 2000ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியில், மாநிலம் முழுவதும், 100 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.இவை,மேலும், 2008ல், 53 சந்தை, 2010ல், 26 சந்தை என, மொத்தம், 179 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.விவசாயிகள் எடுத்து வரும் விளைபொருட்களை, விற்பனை செய்ய, கடைகள், மின்னணு தராசு, இருப்பு வைக்க கிடங்கு, சந்தை தகவல் அறிதல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகள் காய்கறி கொண்டு வர, இலவச பஸ் பாஸ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, சந்தையில் அனுமதிக்கப்பட்டனர். இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள், காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ததால், நுகர்வோருக்கு தரமான, குறைந்த விலையில் காய்கறி கிடைத்தது; இரு தரப்பினரும் பயன் பெற்றனர். தானும் படுக்க மாட்டான்..தள்ளியும் படுக்க மாட்டான்னு வழக்கு மொழி ஒன்னு உண்டு, இந்த ஆட்சியோட லட்சணம் அதுதான்.......நல்ல திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்திய முக வை கரித்து கொட்டி தூக்கி எறிந்தவர்களுக்கு இனியாவது புத்தியில் உறைக்குமா....? இப்போ இருக்குற ஆட்சி ஏதோ கஜனி முகமது படையெடுத்து வந்த மாதிரி இருக்குது ஒரே அழிவுதான் சமசீர் கல்வி, கலைஞர் காப்பீட்டு திட்டம் , செம்மொழி ஆபீஸ் , அண்ணா நூலகம் , புதிய தலைமை செயலகம் , சமத்துவபுரம் எல்லாத்துக்கும் அழிவுதான் இந்த ரெண்டு வருசத்துல புதுசா என்ன வந்தது ?

    கைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்

    சேலம்: சேலம் மத்திய சிறையில், கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த, இசைப் பயிற்சி நேற்று துவக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், நேற்றைய நிலவரப்படி, 988 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 580 பேர் தண்டணைக் கைதிகளாகவும், 488 பேர் விசாரணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதில் தண்டணைக் கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில, அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.நேற்று முதல் கட்டமாக, 15 சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி துவக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கான இசைக் கருவிகளை, ஹிந்தி சிறைப்பணி அமைப்பு சகோதரி ஜாய்ஸ் வழங்கினார். செயின்ட் ஜான்ஸ் பள்ளி இசைப் பயிற்சியாளர் ராபின்சன், சேலம் அரசு இசைப் பயிற்சி பள்ளி ஆசியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை சிறை அலுவலர்கள் ஜெயராமன், ராஜாமனோகரன், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    5 வயது மகளை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த சவுதி அரேபிய இஸ்லாமிய போதகன் விடுதலை.

     ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

    கொலைகாரப் பாவி


    கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்

    சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன.< அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நோர்வேயில் வெள்ளையின பெண்ணை குத்தி கொலை செய்த தமிழன்.


    கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர் ஒருவரால் வெள்ளையினப் பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரவி எனப்படும் நபரால் குத்திக்கொலை செய்யப்பட்ட இப்பெண்ணுடன் இணைந்து பல்வேறு வியாபராங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இக்கொலை நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் நோர்வேயில் சுமார் 20 வீடுகள் மற்றும் ரெஸ்ருரண்டுகள் என கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளவராம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நோர்வேயில் குடியேறிய இவரால் குறுகிய காலத்தினுள் எவ்வாறு இவ்வளவு சொத்துக்களையும் சேர்க்க முடிந்தது என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணுடன் குறித்த நபர் தகாத உறவுகளை வைத்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Written By இலங்கைநெற்

    திங்கள், 4 பிப்ரவரி, 2013

    கட்டி பிடிங்க! ரத்த அழுத்தம் குறையும், மூளை சுறுசுறுப்பாகும்

    நேசிப்பவகளை கட்டி அணைப்பதின் மூலம் உங்களின் உறவு பலப்படுவது அல்லாது அதில் பல நலன்களும் உள்ளதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம்.வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது.ஆனால் நீங்கள் யாரை கட்டி அனைக்கிறீர்கள் என்பதை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அனைக்கும் போதே மனதளவிலான மாறுதல் புலப்படும். மேலும் பிடித்தமான ஒருவரின் கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையாலாம். ஆனால் அது முற்றிலும் நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு ஒப்பான மனிதராக இருக்க வேண்டும்.
    இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.

    IPL ஏலம் போன, போகாத வீர‌ர்க‌ள் யா‌ர்? யா‌ர்?

    ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்‌ட்ரேலிய இளம்வீரர் மேக்ஸ்வெலு‌க்கு அ‌திக மவுசு இரு‌ந்ததா‌ல் ரூ.5.31 கோடிக்கு ஏல‌ம் போனா‌ர். ஆனா‌ல் இ‌தி‌ல் சோக‌ம் ‌எ‌ன்னவெ‌ன்றா‌ல் 71 ‌வீர‌ர்களை யாரு‌ம் ஏல‌ம் எடு‌க்க மு‌‌ன்வர‌வி‌ல்லை. ‌இ‌தி‌ல் மு‌க்‌கியமானவ‌ர்க‌ள் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா ‌வீர‌ர் போ‌லி‌ஞ்ச‌ர், தெ‌ன் ‌ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌வீர‌ர் ‌‌கி‌ப்‌ஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கும் 6வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் >ஆ‌ம் தேதி முதல் மே 26ஆ‌ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான புதிய வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட்சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. 9 அணிகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் ஏலத்திற்கு வந்தனர்.