வியாழன், 7 பிப்ரவரி, 2013

குஷ்பு தி.மு.க.-வினரால் தாக்கப்பட்டார் ! வீட்டுக்கு கல்லெறி

“தளபதி நேரில் தேர்ந்தெடுத்த ஆட்களாச்சே!”திருச்சியில் என்ன பூ… குஷ்பு! தி.மு.க. இளைஞர் அணி ‘கும்மாங் குத்து’!

Viruvirupu
“தளபதி நேரில் தேர்ந்தெடுத்த ஆட்களாச்சே!”
தி.மு.க.-வில் இன்று காலை தொடங்கிய ‘குஷ்பு எதிர்ப்பு அலை’ வேகமாகத்தான் இருக்கிறது. சென்னையில் குஷ்பு வீட்டுக்கு ஒரு செட் ஆட்கள் கல்லெறிய… திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவா இல்ல திருமணத்துக்கு சென்ற குஷ்பு தி.மு.க.-வினரால் தாக்கப்பட்டார். அந்த அவமானம் தாங்காமல் சென்னை திரும்ப ஏர்போர்ட்டுக்கு வந்த குஷ்புவை விமான நிலையத்தில் செருப்பால் தாக்கியுள்ளனர்.
தி.மு.க.-வின்  கொள்கை விளக்க கூட்டங்களில்கூட நட்சத்திர பேச்சாளராக மேடையேற்றப்பட்ட குஷ்புவுக்கு, அதே கட்சியில் ஏற்பட்ட நிலை இது.
நடிகையும், தி.மு.க. பிரமுகருமான குஷ்பு அளித்த பேட்டி ஒன்று, இன்று வெளியான ஆனந்த விகடனில் பிரசுரமாகி உள்ளது. தி.மு.க.வின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதற்கு எதிரான கருத்துக்களை ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார் குஷ்பு.
இந்த பேட்டி இன்று வெளியானதுமே தி.மு.க.வினர், குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அதன் எதிரொலி திருச்சியில் கேட்டது.
இன்று திருச்சியில் தி.மு.க. எம்.பி. சிவாவின் இல்லத் திருமணம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்க சென்றிருந்த குஷ்புவைப் பார்த்த தி.மு.க.வினர், ஆத்திரத்துடன் தாக்க ஆரம்பித்தனர். குஷ்பு காரில் ஏறும்போது, இளைஞர் அணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தாக்கியுள்ளனர்.
குஷ்பு சொன்ன எந்த விளக்கத்தையும் ஏற்கும் நிலையில் இல்லை தொண்டர்கள்.
அங்கிருந்து காரி்ல் தப்பித்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் குஷ்பு. விமான நிலையத்திலிருந்து அவர் வரும்போது ஏராளமான தி.மு.க.வினர் திரண்டு வந்து குஷ்புவுக்கு எதிராக கோஷமெழுப்பினர். அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளனர்.
இப்படியான சூழ்நிலை முன்பு ஏற்பட்டிருந்தால், திருச்சியில் இருந்து மதுரைக்கு போயிருந்தால் சேஃப்! இப்போது, அங்கே உள்ளவர்களே சேஃபாக இல்லை!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக