செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

கைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்

சேலம்: சேலம் மத்திய சிறையில், கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த, இசைப் பயிற்சி நேற்று துவக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், நேற்றைய நிலவரப்படி, 988 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 580 பேர் தண்டணைக் கைதிகளாகவும், 488 பேர் விசாரணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதில் தண்டணைக் கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில, அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.நேற்று முதல் கட்டமாக, 15 சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி துவக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கான இசைக் கருவிகளை, ஹிந்தி சிறைப்பணி அமைப்பு சகோதரி ஜாய்ஸ் வழங்கினார். செயின்ட் ஜான்ஸ் பள்ளி இசைப் பயிற்சியாளர் ராபின்சன், சேலம் அரசு இசைப் பயிற்சி பள்ளி ஆசியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை சிறை அலுவலர்கள் ஜெயராமன், ராஜாமனோகரன், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கோவை, கடலூர் ஆகிய இடங்களில் செயல்படும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இசைப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. சேலம் சிறையில் முதன் முறையாக இசைப் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக, 15 கைதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியை பெறுவதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனதை நல்வழிப்படுத்தவும், மனமாற்றம் ஏற்படவும், சிறையில் அவ்வப்போது இசை நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். விடுதலையான பிறகு இதன் மூலம் தனியார் இசைக் குழுவில் சேர்ந்து பணியாற்றவும் வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக