திங்கள், 4 பிப்ரவரி, 2013

IPL ஏலம் போன, போகாத வீர‌ர்க‌ள் யா‌ர்? யா‌ர்?

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்‌ட்ரேலிய இளம்வீரர் மேக்ஸ்வெலு‌க்கு அ‌திக மவுசு இரு‌ந்ததா‌ல் ரூ.5.31 கோடிக்கு ஏல‌ம் போனா‌ர். ஆனா‌ல் இ‌தி‌ல் சோக‌ம் ‌எ‌ன்னவெ‌ன்றா‌ல் 71 ‌வீர‌ர்களை யாரு‌ம் ஏல‌ம் எடு‌க்க மு‌‌ன்வர‌வி‌ல்லை. ‌இ‌தி‌ல் மு‌க்‌கியமானவ‌ர்க‌ள் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா ‌வீர‌ர் போ‌லி‌ஞ்ச‌ர், தெ‌ன் ‌ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌வீர‌ர் ‌‌கி‌ப்‌ஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கும் 6வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் >ஆ‌ம் தேதி முதல் மே 26ஆ‌ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான புதிய வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட்சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. 9 அணிகளின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் ஏலத்திற்கு வந்தனர்.


100க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்த ஏலப்பட்டியலில் முதல் வீரராக ஓய்வு பெற்ற ஆ‌ஸ்‌ட்ரேலிய முன்னாள் கேப்டன் 38 வயதான ரிக்கிபாண்டிங்கின் பெயர் வாசிக்கப்பட்டது. முதலில் அவரை எந்த அணிகளும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து அவர் விற்பனையாகாத வீரர் என்று ஏலத்தை நடத்திய ரிச்சர்ட் மேட்லி அறிவித்தார். சிறிது நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஆரம்ப விலையான ரூ.2 கோடியே 12 லட்சத்திற்கு கேட்டது. வேறு யாரும் அவரை ஏலம் கேட்காததால் அவர் அதே விலைக்கு மும்பை அணிக்கு ஒதுக்கப்பட்டார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆஸ்‌ட்ரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கை வாங்குவதிலும் பெரும்பாலான அணிகள் தயக்கம் காட்டின. அவரது தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.2.12 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி கேட்டது. வேறு யாரும் முன்வராததால் அவரை புனே அணி அதே விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த ஏலத்தில் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு வியக்க வைத்தவர் ஆஸ்‌ட்ரேலிய இளம் வீரர் கிளைன் மேக்ஸ்வெல் தான். ஆஸ்ட‌்ரேலியாவின் ஆல் ரவுண்டராக ஜொலிக்க தொடங்கியுள்ள அவரது தொடக்க விலையாக ரூ.1 கோடியே 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரை தங்கள் அணிக்கு இழுக்க மும்பை இந்தியன்சும், ைதராபாத் சன் ரைசர்சும் கடுமையாக மல்லுக்கட்டி நின்றன. மாறி மாறி இரு அணிகளும் அவரது விலையை உயர்த்திக் கொண்டே சென்றன. கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது. அவரை ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.5.31 கோடி) மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது அவரது ஆரம்ப விலையை விட ஐந்து மடங்கு கூடுதலாகும்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங்குக்கும் ஏக கிராக்கி நிலவியது. அவரது தொடக்க விலையான ரூ.53 லட்சத்தில் இருந்து ராஜஸ்தான், பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏலம் கேட்டன. ஒரு கட்டத்தில் சென்னை அணி விலகிக்கொள்ள, ராஜஸ்தானும், பெங்களூரும் களத்தில் நீடித்தன. பிறகு சன் ரைசர்ஸ் அணியும் கோதாவில் குதித்து பார்த்தது. இறுதியில் ஆர்.பி.சிங்கை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.2.12 கோடிக்கு தட்டிச்சென்றது.

தென் ஆப்பிக்க ஆல் ரவுண்டர் ஜோகன் போத்தாவுக்கும் நல்ல மவுசு காணப்பட்டது. அவரை தங்கள் அணிக்கு சொந்தமாக்க டெல்லி டேர்டெவில்ஸ்- புனே வாரியர்ஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் அவரை ரூ.2.40 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது.

மேக்ஸ்வெல்லுக்கு அடுத்து பெரிய தொகைக்கு விலை போனவர் இலங்கை மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ். மும்முனை போட்டிக்கு (புனே-மும்பை -கொல்கத்தா) இடையே அஜந்தா மென்டிசை ரூ.3 கோடியே 85 லட்சத்திற்கு புனே வாரியர்ஸ் அணி பெற்றது.

இந்திய வீரர்களில் ஆல் ரவுண்டர் அபிஷேக் நாயர் மீது பல அணிகளின் கவனம் ஒட்டுமொத்தமாக விழுந்தது. இந்த ரஞ்சி சீசனில் 966 ரன்கள் குவித்து 2வது இடம் பிடித்திருந்த அவரது தொடக்க விலை வெறும் ரூ.53 லட்சம் தான். ஆனால் அவரை இந்த ஐ.பி.எல்.ல் தங்கள் அணியில் விளையாட வைப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான், டெல்லி, பெங்களூர், ைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முயற்சி மேற்கொண்டன. இதனால் அவரது விலை பல மடங்கு எகிறியது. இறுதியாக களத்தில் புகுந்த புனே வாரியர்ஸ் அணி அவரது விலையை ரூ.3.59 கோடியாக உயர்த்தி, அவரை தங்கள் வசப்படுத்தி விட்டது.

இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடித்த இன்னொரு வீரர் பிரபலமில்லாத ஆஸ்‌ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன். இதுவரை ஒரு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ள அவரது அடிப்படை விலை ரூ.53 லட்சம் தான். அவரை ரூ.3.72 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி வாங்கியது. அவரை போன்று தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிசும் கணிசமான தொகைக்கு ஏலம் போனார். அவரை ரூ.3.32 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

ஆஸ்‌ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் 36 வயதான திர்க் நேன்னஸ் ரூ.3.19 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார். டெல்லி, பெங்களூர் அணிக்காக இதுவரை விளையாடியுள்ள அவர் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பனியனை அணிவார்.
ஆல் ரவுண்டர்களை வாங்குவதில் தான் எல்லா அணிகளும் விரும்பின. இந்த வகையில் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு அணியின் கேப்டனும், ஆல் ரவுண்டருமான டேரன் சேமியை ரூ.2.26 கோடிக்கு ைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வாங்கியது. அவரை வாங்குவதில் பின்னடைவை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவை ரூ.3.32 கோடிக்கு தனதாக்கியது.

இந்த ஏலத்தில் மொத்தம் 37 வீரர்கள் விற்கப்பட்டனர். இவர்களின் மதிப்பு ரூ.63 கோடியாகும். புதிதாக வாங்கப்பட்ட வீரர்கள் அனைவரும் ஓர் ஆண்டுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சீசனில் அனைத்து வீரர்களும் மீண்டும் ஏலம் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இ‌‌‌ந்த ஏல‌த்‌தி‌ல் 71 ‌வீர‌ர்க‌ள் ‌‌வி‌ற்பனையாகாததுதா‌ன் பெ‌ரு‌ம் சோக‌ம். இ‌ந்த ஏல‌த்த‌ி‌ல் மொ‌த்த‌ம் 216 ‌வீர‌ர்க‌ள் ப‌திவு செ‌ய்‌திரு‌ந்தன‌ர். அவ‌ர்க‌ளி‌ல் 101 பே‌ர் இறு‌தி‌ப்ப‌ட்டிய‌லி‌‌ல் இட‌ம் பெ‌ற்று, ‌பிறகு அது 108 ஆக அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. இவ‌ர்க‌ளி‌ல் 37 பே‌ர் ம‌ட்டுமே ஏல‌ம் போனா‌ர்க‌ள். ‌மீதமு‌ள்ள 71 பேரை யாரு‌ம் ஏல‌ம் எடு‌க்க‌வி‌ல்லை.

செ‌ன்னை அ‌ணி‌யி‌ல் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ஆ‌ஸ்‌ட்ரே‌‌லியா ‌வீர‌ர் போ‌லி‌ஞ்ச‌ர், மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு ‌வீர‌ர் டேர‌ன் ‌பிராவோ, ஆ‌ஸ்‌ட்ரேயா‌வி‌ன் மே‌த்யூ வே‌ட், தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ன் ‌‌கி‌ப்‌ஸ், இல‌ங்கை‌யி‌ன் தர‌ங்கா, ஹெரா‌த், ‌நியூ‌ஸிலா‌ந்து ‌வீர‌ர் க‌ப்‌தி‌ல், டெ‌ஸ்‌ட் ‌‌‌கி‌ரி‌க்கெ‌ட்டி‌ல் ‌மிர‌ட்டி வரு‌ம் தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌‌க்கா‌வி‌ன் வெரோ‌ன் ‌பிலா‌ண்ட‌ர், இ‌ங்‌கிலா‌ந்து ‌வீர‌ர் போபரா, மே‌த் ‌பிரைய‌ர் ஆ‌கியோ‌ர் ஏல‌ம் போகாத ‌வீர‌ர்க‌ள் ஆவ‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக