வியாழன், 7 பிப்ரவரி, 2013

CM பிறந்த நாள் விழா ஏற்பாடுகள்:வசூல் வேட்டையும் துவக்கம்

முதல்வர் ஜெயலலிதாவின், 65வது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் தடபுடலாக செய்து வருகின்றனர். பிப். 24ம் தேதி வரும் பிறந்த நாளுக்கு, இப்போதிருந்தே பணிகளைத் துவங்கிவிட்டனர்.கட்-அவுட், பேனர்கள், அலங்கார வளைவுகளை அமைப்பதற்கு, பிளக்ஸ் பேனர்கள் தயாராகி வருகின்றன. இதுவரை, பயன்படுத்தப்படாத வாசகங்கள், முதல்வராக கடந்த ஒன்றேமுக்கால் ஆண்டில், ஜெயலலிதா செய்த சாதனைகள் ஆகியவை கட்-அவுட், பேனர்களில் இடம்பெற உள்ளன. பிளக்ஸ் பேனர்கள் அச்சடிப்புக்கு, பெருமளவில் ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக, பிரிண்டிங் பிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.தடபுடல் ஏற்பாடுகள்:வாழ்த்து பேனர்களைத் தவிர, கோயில்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு இல்லங்களில் அன்னதானங்களும், பொதுமக்களுக்கு சிறப்பு விருந்துகளும் அளிக்கி ஏற்பாடு செய்து வருகின்றனர்.கட்சியின் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வழக்கமாக, கட்சி நிகழ்வுகள் என்றால், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் நடைபெறும்.ஆனால், ஜெயலலிதா பிறந்த தினத்தை, மேல்மட்ட ஆணைகள் எதுவும் இல்லாமல், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் தங்கள் விருப்பம் போல், கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


பேனர்களில் எவருடைய புகைப்படமும் இடம்பெறக் கூடாது என்ற கட்சி உத்தரவால், கட்சி நிர்வாகிகளின் போட்டோக்கள் இல்லாமல், பேனர், கட்-அவுட்கள் தயாராகி வருகின்றன.
பேனர் வாசகங்கள்:காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவின் அணுகுமுறை, லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெ பொதுமக்களின் ஆதரவை நாடுவது, மத்திய அரசில் அங்கம் பெற்றுக்கொண்டு, தமிழக அரசுக்கு தி.மு.க., நெருக்கடி கொடுக்கிறது, அதை ஜெயலலிதா எப்படி முறியடிக்கிறார் போன்றவை, பேனர் வாசகங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதில், கட்சி நிர்வாகிகள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. கட்சியின் அணித் தலைவர்கள் நேரடியாகவே, இப்போட்டியில் குதித்துள்ளனர். இதற்காக, அணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு, மறைமுக ஆணைகளையும் பிறப்பித்துள்ளனர். நகரின் முக்கிய பகுதிளில் வாழ்த்துக்களை இப்போத எழுதிவிட்டனர். பல இடங்களை, ரிசர்வ் செய்து, வேறுயாரும் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளனர்.

வசூல் வேட்டை:
ஏற்க்கனவே கல்யாணம் ஆனா 65 ஜோடிகளுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வெப்பாங்களோ ?

முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, வர்த்தக பிரமுகர்கள், தொழில் அமைப்புகளிடம் வசூல் வேட்டையும் நடப்பதாக கூறப்படுகிறது. தங்களது பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், பிறந்தநாள் கொண்டாட்ட செலவுக்காக ஒரு தொகையை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் வசூலித்து வருகின்றனர்.உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்களை மிரட்டி, பணம் வசூலிக்கத் துவங்கியுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், சோழவரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பினர், முதல்வர் பிறந்தநாள் பெயரில் வசூல் வேட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. சோழவரம் பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக