வியாழன், 7 பிப்ரவரி, 2013

Deepika Padukone: ஹீரோதான் பேர் தட்டிச் செல்கிறார்

மும்பை: படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள் என்றார் தீபிகா படுகோன். பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினி ஜோடியாக ‘கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார். அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் கிளப் என்பது இப்போது பேஷனாகிவிட்டது. அந்த பட்டியலில் சேர வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் வழக்கமான ஒரே பாணியிலான நடனங்களிலும், காட்சிகளிலும் திரும்ப திரும்ப நடிக்கிறார்கள். அப்படியொரு நடிப்பு எனக்கு தேவையில்லை. ‘காக்டெய்ல் படத்தில் எனது வேடத்தை பாராட்டினார்கள். எனக்கு அதுவே போதும். அதே நேரம், படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்.
என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி அறிந்துகொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். பல நடிகர்களுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்துவிட்டன. இன்னும் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றி கவலை இல்லை. ஒரு பெண்ணுக்கு பாய்பிரெண்ட் இருப்பது ஒன்றும் தவறில்லை. நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக, என்னை சிரிக்க வைக்கும் பாய்பிரெண்ட் பிடிக்கும். இன்னும் நான் தனிமையில்தான் இருக்கிறேன். இப்போதுகூட ஒரு நடிகருடன் இணைத்து கிசுகிசு வருகிறது. ஏற்கனவே இதுபோல் பேச்சுக்கள் இருப்பதால் இது பற்றியும் கவலை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக