செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

ஆட்சியாளர் கவனிப்பின்றி அழியும் உழவர் சந்தை dinamalar

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் துவங்கிய, உழவர் சந்தைகளை, ஆட்சி மாற்றத்தால், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. வெளி மார்க்கெட்டை போலவே, உழவர் சந்தையிலும் கூடுதல் விலைக்கு, காய்கறிகள் விற்கப்படுகின்றன. கடந்த, 2000ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியில், மாநிலம் முழுவதும், 100 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.இவை,மேலும், 2008ல், 53 சந்தை, 2010ல், 26 சந்தை என, மொத்தம், 179 உழவர் சந்தைகள் துவங்கப்பட்டன.விவசாயிகள் எடுத்து வரும் விளைபொருட்களை, விற்பனை செய்ய, கடைகள், மின்னணு தராசு, இருப்பு வைக்க கிடங்கு, சந்தை தகவல் அறிதல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகள் காய்கறி கொண்டு வர, இலவச பஸ் பாஸ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டு, சந்தையில் அனுமதிக்கப்பட்டனர். இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகள், காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ததால், நுகர்வோருக்கு தரமான, குறைந்த விலையில் காய்கறி கிடைத்தது; இரு தரப்பினரும் பயன் பெற்றனர். தானும் படுக்க மாட்டான்..தள்ளியும் படுக்க மாட்டான்னு வழக்கு மொழி ஒன்னு உண்டு, இந்த ஆட்சியோட லட்சணம் அதுதான்.......நல்ல திட்டங்களை தீட்டி நடைமுறை படுத்திய முக வை கரித்து கொட்டி தூக்கி எறிந்தவர்களுக்கு இனியாவது புத்தியில் உறைக்குமா....? இப்போ இருக்குற ஆட்சி ஏதோ கஜனி முகமது படையெடுத்து வந்த மாதிரி இருக்குது ஒரே அழிவுதான் சமசீர் கல்வி, கலைஞர் காப்பீட்டு திட்டம் , செம்மொழி ஆபீஸ் , அண்ணா நூலகம் , புதிய தலைமை செயலகம் , சமத்துவபுரம் எல்லாத்துக்கும் அழிவுதான் இந்த ரெண்டு வருசத்துல புதுசா என்ன வந்தது ?


வெளி மார்க்கெட்டை விட, உழவர் சந்தையில், 15 சதவீதம் விலை குறைவாக இருக்கும்.தற்போது, வெளி மார்க்கெட்டை போலவே, உழவர் சந்தையிலும் விலை தாறுமாறாக உள்ளது. வெளி மார்க்கெட் வியாபாரிகளுக்கு, விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை விற்று விடுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில், நுகர்வோர், இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், கட்சி பாகுபாட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலையில் வேளாண் துறையினர் உள்ளனர். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:



வியாபாரிகள் பிடியில் மக்கள் :

இந்தியாவில் முதன் முதலில், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், உழவர் சந்தை துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகத்தில், 2,000ம் ஆண்டில், தி.மு.க., ஆட்சியில் உழவர்சந்தைகளை துவங்கினர். மாநில அளவில், 179 உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. கடந்த ஆட்சியில், உழவர் சந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு செய்து, பல வசதிகளை மேம்படுத்தினர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும், உழவர் சந்தையை திரும்பி பார்ப்பதில்லை. விவசாயிகளும், காய்கறிகளை மொத்தமாக வியாபாரிகளுக்கு விற்று விடுகின்றனர். அதை வாங்கி சென்று, வெளிமார்க்கெட்டில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
வெளி மார்க்கெட் வியாபாரிகளால், நடத்தப்படும் கடைகளில், தரமற்ற காய்கறி விலை, தாறுமாறாக உள்ளது. வேளாண் அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக