இந்த ஆய்வின்படி, ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.
இவை சமூக சூழலில், பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.
இது தவிற கட்டி தழுவுவது உங்களை மேலும் மென்மமையாக மாற்றும். அத்துடன் உங்கள் அன்புக்குரியோரை நீங்கள் அடிக்கடி தழுவி கொள்வது அவர்கள் உடையே ஆன அன்பை மேம்படுத்தும். இது கால போக்கில் உறவில் ஏதும் சிக்கல் ஏற்பட்டாலும், அதனை அறுத்தெறிய வழிவகுக்கும். குற்றமே செய்தாலும் அந்த நம்பிக்கை உரிய அன்பானவர்கள் உங்கள் முந்தய அன்பான நடவடிக்கைகளை எண்ணி தவறையும் மறப்பார்கள்.
ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
மேலும் நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.
அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, அந்த தழுவதலின் மூலம் ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.
அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பு காலப்போக்கிலும் மேம்படாது என்று இந்த ஆய்வின் முடிவில் நரம்புநோய் மருத்துவர் சாண்ட்க்யூளர் தெரிவித்துள்ளார். tamil.webdunia.com
Super
பதிலளிநீக்கு