சனி, 9 பிப்ரவரி, 2013

Vijai Mallaiya வின் Vintage கார் கலெக்ஷன்!

ஆடம்பரத்தின் உச்சம் எங்கெல்லாம் விஜய் மல்லையாவிற்கு ஓர் இடம் உண்டு. மதுபான தொழிலிருந்து வரும் வருவாயை ஆடம்பரத்திற்கு செலவிட்டதுபோக கார் பந்தயம், கிரிக்கெட், பார்முலா-1, படகு பந்தயம் மற்றும் குதிரை பந்தயங்கள் என அடித்து விட்டு வருகிறார்.
ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் 1906ம் ஆண்டு முதல் 1926 வரை ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்த மாடல். மல்லையாவிடம் இருப்பது 1913ம் ஆண்டு மாடல். 6 சிலிண்டர்கள் கொண்ட 7.4 லிட்டர் டூவல் இக்னிஷன் எஞ்சின் கொண்ட இந்த கார் 65 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 4 ஸ்பீட் டிரான்மிஷன் பொருத்தப்பட்டது. லண்டன் டூ எடின்பர்க் பாடி ஸ்டைல்

சன்பீம் டைகர் டைகர் என்ற பெயரிடப்பட்ட 1925ம் ஆண்டு மாடலான இந்த கார் உலகின் அதிவேக கார் என்ற சாதனையை படைத்தது. 4.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டது.
1926ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி உலகின் அதிவேக கார் சாதனையை படைத்தது. மால்க்கம் கேம்பல் என்பவர் மணிக்கு 245 கிமீ வேகத்தில் பறந்து இந்த சாதனையை படைத்தார்.
மெர்சிடிஸ் கே டைப் 1926ம் ஆண்டு மாடல் கார் இது. 6 சிலிண்டர்கள் கொண்ட 6240 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மலைப்பாங்கான சாலைகளில் நடத்தப்படும் கார் பந்தயத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாடல் இது. ஆனால், இந்த கார் பந்தயத்தின்போது விபத்துக்களில் சிக்கியதால் வெற்றி பெர முடியவில்லை.

அதில், அவரது விண்டேஜ் கார் சேகரிப்பும் அடங்கும்.நம் நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இவரது விண்டேஜ் கார் பாதுகாப்பு மையங்கள் இருக்கின்றன. துபாயில் 400 வாகனங்களுக்கு மேல் வைத்திருக்கும் ஷேக் பற்றி எழுதியிருந்தோம். ஆனால், விஜய் மல்லையாவின் உலகம் முழுவதும் உள்ள கார் பராமரிப்பு மையங்களை கணக்கில் கொண்டால் 260க்கும் மேற்பட்ட விண்டேஜ் ரேஸிங் கார்கள் மற்றும் பைக்குகள் இருக்கின்றன. விண்டேஜ் கார்கள் என்றாலே ஒவ்வொரு காருக்கும் சுவாரஸ்யமான வரலாறு இருக்கும். அதிலும், விண்டேஜ் ரேஸ் கார்கள் என்றால், ஆம், சுவாரஸ்யமான தகவல்களுடன் விஜய் மல்லையாவின் விண்டேஜ் ரேஸ் கார்களின் தொகுப்பை காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக