சனி, 9 பிப்ரவரி, 2013

சூர்யா கார்த்தி சிவகுமார் அமீர் லடாய் ஓவர்! இனி ஆதிபகவனை இழுத்து விழுத்த மாட்டாரா பரதேசி?


Viruvirupu
அமீரின் ஆதிபகவன் படத்துக்கு மத அமைப்புகள் ஏற்படுத்தும் சிக்கல்களை விட பெரிய சிக்கலாக இன்டஸ்ட்ரிக்கு உள்ளேயே ஒரு சிக்கல் இருந்தது. தமிழ் திரையுலகின் இரண்டு டாப் ஹீரோக்களை கையில் வைத்திருக்கும் சிவகுமார் குடும்பத்துக்கும் அமீருக்கும் இடையே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவில் இருந்தது உள்பகை.
ஆதிபகவன் ரிலீஸ் ஆகும்போது கௌன்டர் அட்டாக் கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆதிபகவன் எப்போதோ முடிந்த பின்னரும் இன்னமும் பெட்டிக்குள் தூங்குவது இந்த கௌன்டர் அட்டாக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதற்குதான். ஆதிபகவன் ரிலீஸின்போது அதே தேதியில் சகோதரர்கள் இருவரில் ஒருவரின் படத்தையும் ரிலீஸ் செய்வது என்பதே ஆரம்ப பிளான்.
ஆனால், சகோதரர்களின் சமீபத்தைய படங்கள் எல்லாம் தள்ளாட்டத்தில் உள்ளன. அதுவும் சமீபத்தில் பல கோடிகளில் வியாபாரமாகி வெளியான ஒரு சகோதரரின் படத்தை பவர் ஸ்டார் (கண்ணா லட்டு) அசால்ட்டாக முந்திச் சென்றதில், இன்ட்டஸ்ட்ரியே நமுட்டுச் சிரிப்பு சிரிக்க தொடங்கியிருக்கிறது.
அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. காபிபொடி, பற்பொடி என்று விளம்பரங்களில் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

இந்த நிலையில் அமீருக்கு கௌன்டர் அட்டாக் கொடுக்க நட்சத்திரக் குடும்பம் தேர்ந்தெடுத்த அஸ்திரம், பாலாவின் ‘பரதேசி’. அந்தக் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய நோட்டு கொடுத்து வாங்கி கையில் வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
பாலாவின் பரதேசியும், முடிந்த ரிலீஸூக்கு ரெடி. ஆனால், இன்னமும் தேதி அறிவித்தபாடில்லை. காரணம், ஆதி வரும்போது, பரதேசி வரவேண்டும் என்ற உள் போட்டி.
பரதேசி வரும்போது, ஆதி வரக்கூடாது என்பதால், அமீர் தரப்பும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. இரண்டும் பெட்டிக்குள் காத்திருக்கின்றன.
இந்த நிலையில்தான், விஸ்வரூபம் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
விஸ்வரூபம் பிரச்னைக்காக கமல் ஆபீஸில் எதிர்பாராமல் சிவகுமாரும் அமீரும் நேருக்கு நேர் சந்தித்துவிட (கீழே போட்டோ) , இரு தரப்பும் தனிமையில் மனம் விட்டுப் பேச, அமீர் நட்சத்திர குடும்பத்துக்காக ஒரு படத்தை டைரக்ட் பண்ணி கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறார். இதனால் இப்போது இரு தரப்பும் ரிலாக்ஸ்ட்.
இனி ரீலீஸ் தேதிகள் மாறும் என்றே சொல்கிறார்கள்.
சரி. அப்போ பூசாரிகள் சங்க எதிர்ப்பு? சூரியனைக் கண்ட பனித்துளிதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக