செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் திரைப்படங்கள்,

2013-ஆம் ஆண்டில் தனது 100-வது வருடத்தில் இந்திய சினிமா வெற்றிநடை போட்ட சமயத்தில் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்த திரைப்படங்கள் என பல வகையான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன. 

சூதுகவ்வும் - எப்போதும் எதாவதொரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு ஓய்வளிக்க  சீரியசான விஷயங்களை காமெடியாக எதிர்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தது சூதுகவ்வும். பிளாக் காமெடி வரிசை படங்களில் சூதுகவ்வும் திரைப்படம் ஒரு துவக்கம்.

மூடர்கூடம் - நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் சமுதாயத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று ரசிகர்களை ஆச்சர்யப்படவைத்தது முட்டாள்களின் உலகமான மூடர்க்கூடம் திரைப்படம்.

விஜயகாந்த் வீட்டில் ஜி.கே.வாசன் : தீவிர ஆலோசனை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். அங்கு, விஜயகாந்தும் வாசனும் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். 35 நிமிடங் களுக்கு மேல் இந்த ஆலோசனை நீடித்தது விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் என்ற படத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்குமாறு ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சித் தலைவருக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.இதில் பங்கேற்க முடியாததற்காக விஜயகாந்த்திடம் ஜி.கே.வாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற தேமுதிகவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டியது இந்தியா


இலங்கையில் உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2-வது கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும் இலக்கு நிறைவேறும் தருவாயில் உள்ளது.

டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ! கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி: டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மானியம் தரப்படும் என்று அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் 28 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்சுலின் இழப்பை ஈடுசெய்ய அக்குபஞ்சர் தீர்வு தருமா?

இன்றைய காலகட்டத்தில் மனிதனை பாடாய்ப் படுத்தி எடுக்கும் வியாதிகளில் மோசமானது சர்க்கரை வியாதி. அதாவது நீரிழிவு நோய். கலப்பட பெற்றோலை ஊற்றிவிட்டு வாகனத்தை ஓட்டினால் எப்படி அதன் இயந்திரம் பாதிக்கப்படுமோ, அதே போல் சர்க்கரை அதிகம் கலந்த இரத்தம் உட லில் பாய்வதால் கண், இதயம், சிறுநீரகம், மூட்டுகள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. கணையம் என்ற முக்கியமான உறுப்பு பாதிக்கப்படுவதால் தான் பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. கணையத்தில் சுரக்கப்படும் முக்கியமான திரவம் இன்சுலின். இந்த இன்சுலின் தான் ஒருவருடைய இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
ஒருவருக்குத் தேவையான அள விற்கு இன்சுலின் சுரக்கப்படவில்லை என்றால் அவர் சர்க்கரை நோய்க்கு ஆளாகிவிடுகிறார். கணையம் பாதிக்கப்படுவதற்கு பல கார ணங்கள் இருக் கிறது.

நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் Ex காதல்?

மும்பை ஆரே பகுதியை சேர்ந்தவர் பிரசான்த் பிராதாப் சிங்(வயது 36). தொழில் அதிபர். இவர் ஆரே போலீஸ் நிலையத்தில் இந்தி நடிகை வீனா மாலிக்குக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள வீனா மாலிக் வந்திருந்தார். அப்போது நான் அவரை சந்தித்தேன். அப்போது அவருக்கு பல்வேறு உதவிகளை செய்தேன். இதில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நாங்கள் ஆரே பகுதியில் ஆடம்பர குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தோம். மேலும் வீனாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்தேன். இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி வீனாவிற்கு துபாய் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி விசாரிக்க வீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர், இனிமேல் என் வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்றும், தொடர்ந்து ஏதேனும் தொந்தரவு செய்தால் மானபங்கம் அல்லது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடருவேன் என்று மிரட்டினார். மேலும் என் தாயாருக்கு போன் செய்து அவரையும் மிரட்டினார். இவ்வாறு தொழில் அதிபர் பிரசான்த் பிரதாப் சிங் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீனா மாலிக் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது cinema.maalaimalar.com

தேவயாணி வழக்கை கைவிடும் திட்டமில்லை : அமெரிக்கா முடிவு

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயாணி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமெரிக்கா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13-ந் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்! லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம்


  லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்! சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார்
tamil.oneindia.in

இயக்குனர் வசந்த பாலனுக்கு கைவிரித்த ஆக்ஷன் ஹீரோக்கள்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை:ஆக்ஷன் படங்களை இயக்க விரும்பிய வசந்த பாலனுக்கு பிரபல ஹீரோக்கள் கைவிரித்ததால் ஏமாற்றம் அடைந்தார்.
வெயில், அங்காடி தெரு, அரவான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன். கோலிவுட்டில் வித்தியாசமான கதைகளை இயக்கும் இயக்குனர்களைவிட ஆக்ஷன் கதைகளை இயக்குபவர்களுக்குதான் மவுசு. அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தார் வசந்தபாலன். கார்த்தி உள்ளிட்ட இரண்டு ஹீரோக்களை மனதில் வைத்து பக்கா ஆக்ஷன் கதையை உருவாக்கினார். அதுபற்றி நடிகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் கால்ஷீட் கிடைக்கவில்லை.

கேஜ்ரிவாலின் தந்தை கோயிலில் சிறப்பு யாகம் ! . இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?

செய்தி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடவுளின் அருளைப் பெறும் வகையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த் ராம், அங்குள்ள கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகத்தை நடத்தினார்.
நீதி: யாகமோ, யோகமோ இப்படி மூடநம்பிக்கையில் உருண்டு புரள்வதில் இனி அம்மா கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்ன வேறுபாடு?
________
செய்தி: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புதிய கட்சி தொடங்கவுள்ளார். அக்கட்சி மக்களைவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.
நீதி: கைப்புள்ள களத்தில் இறங்கியாச்சு, இனி காமடிக்கு குறைவில்லை!
________
செய்தி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என, கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க.) கட்சியின் தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தெரிவித்தார்.
நீதி: சாதியானாலும், மதமானாலும் வெறியர்கள் இனி ஓரணி!

பாகிஸ்தான் உதவியுடன் அணுகுண்டு வீசி சூரத் நகரை அழிக்க சதி தீவிரவாதி யாசின் பத்கல் பகீர் வாக்குமூலம் ! பாகிஸ்தானில் எது வேண்டுமானாலும் கிடைக்கும்!

டெல்லி:பாகிஸ்தான் உதவியுடன் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணுகுண்டு வீசி அழிக்க இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டிருந்ததாக அந்த அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுகள் வெடித்தன. இதில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நேபாள எல்லையில் பொக்ரா என்ற இடத்தில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் அகமது ஜரார் சித்திபப்பா என்கிற யாசின் பக்தலை தேசிய புலனாய்வு துறை  அதிகாரிகள் கைது செய்தனர்.
அதன்பின், யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ), ஐபி உள்பட பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் யாசினை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பக்தல் தெரிவித்து வருகிறார். அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணு குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகளிடம் பக்தல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆ.ராசா எனக்கு அக்கா மகன்! அநியாயமா பலி போட்டுட்டானுங்க”

ஆ. ராசா அப்படீன்னா தெரியுமா? அப்படி சொன்னா தெரியாது.!
ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னு சொன்னாதான் தெரியும்.
என் அக்கா மவன்தான். வேணும்னா யாரையா கேட்டு பாரு. நா சொல்றேன். என் மருமவன் அப்படிப்பட்ட ஆளு கிடையாது.
அவ்ளோ பணம் சம்பாதிக்கிற ‘தெரவசு’ இருந்தா, ராசாவோட சொந்த பந்தமெல்லாம் ஏன் இப்படி இருக்கப் போறோம்? அநியாயமா பலி போட்டுட்டானுங்க”
வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி பொழைக்கிறேன்” கணீரென கானாவோடு கடைக்குள் நுழைந்தார் அந்த விசிலவன்.
கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்தார்.
இடையில் மட்டும் ஜட்டியா அல்லது டவுசரா என்று இனங்கண்டு கொள்ள முடியாத உடை. குள்ளமென்று சொல்ல முடியாது. நடுத்தரமான உயரம். நல்ல கருப்பு. எண்ணெய் காணாத தலை !எங்களுக்கு அருகில் வந்து அமர்ந்தார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, ஓடு ராஜா” வாத்யார் பாட்டை அச்சு அசலான டி.எம்.எஸ். குரலில் பாட ஆரம்பித்தார். “அந்த காலத்துலேயே என்னாமா பாடியிருக்காரு பாரு. அசீத், விசய்க்கெல்லாம் இப்படி பாடுறதுக்கு வக்கிருக்கா?” என்று ஆரம்பித்தார்.

தில்லியில் மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர்: நாளை முதல் அமல்

தில்லியில் ஆங்கிலப் புத்தாண்டு 1-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மாதந்தோறும் வீட்டு உபயோகத்துக்காக 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வீடுதோறும் தினமும் 700 லிட்டர் குடிநீர்  இலவசமாக விநியோகிக்கப்படும் என்று "ஆம் ஆத்மி' கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.  அதைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்றதும் தில்லியில் குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
முதல்வருடன் ஆலோசனை: இந் நிலையில், கடந்த சனிக்கிழமை முதல்வர் பொறுப்பை ஏற்ற அரவிந்த் கேஜரிவால் அன்று மாலையே குடிநீர் விநியோகம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் போலி ரேஷன் கார்டுகளை கண்டுக்காதீங்க!


சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், போலி ரேஷன் கார்டுகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என்று, துறை மேலிட உத்தரவால், அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, அரிசி கார்டு, 1.84 கோடி, சர்க்கரை கார்டு, 10.49 லட்சம், போலீஸ் கார்டு, 62,354, எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு, 31,453 என, மொத்தம், 1.96 கோடி ரேஷன் கார்டுகள், புழக்கத்தில் உள்ளன. பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ரேஷன் கார்டு வழங்குவது வழக்கம். தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டு, 2005ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது.  ஆயா தான் எப்படி இருக்கிறாரோ அப்படியே மக்களும் இருக்கோனுமுன்னு ஆசை.......

திங்கள், 30 டிசம்பர், 2013

ப.சிதம்பரம்: பிரதமர் வேட்பாளரை காங். அறிவிக்க வேண்டும் !

காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்துவது அவசியம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இது குறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
30 ஆண்டு கால தமிழக அரசியலைக் குறிப்பிட்ட அவர், மாநிலத் தேர்தலோ அல்லது மக்களவைத் தேர்தலோ, மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கட்சியின் தலைவர் யார் என்பதை அறிவதில் ஆர்த்துடன் உள்ளதாக கூறினார்.
பாஜக தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸும் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்குதலில் இருக்கிறது.
நான்கு மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, உரிய நேரத்தில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். ஏனுங்க இரு ரொம்ப ஓவர்ன்னு நம்பளுக்கே புரியறது ஹாவர்ட் சிங்கத்துக்கு புரியல்லன்னு நம்ப முடியல்லையே !அவுக சாயத்தை அவுகளே கழட்டிக்க அருமையான ஐடியா ? 

கூட்டணித் தாயே! மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் ! கம்யுனிஸ்டுகள் ஒப்பாரி


g-ramakrishnan-jaya-tha-வே.மதிமாறன்

திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லிவந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுக வின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக இல்லாத அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (17.12.2013) செய்தியாளர்களிடம்,எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது. ’ என்று திட்டவட்டமாக தீர்த்திருக்கிறார். 

காரைக்காலில் இளம்பெண் Gang Rape அரசியல் கட்சிகளின் கள்ள மெளனம் ஏன்?' முதலியார் பெண்ணுக்கு பெருங்கொடுமை ! இஸ்லாமிய மற்றும் தலித் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள்?

காரைக்காலில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சிகள் மெளனம் காப்பது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம் தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர்.
அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத கொடூரமாகும்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்


இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ( வயது 75 ) காலமானார்.  பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில்  1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.  மரபணு மாற்ற விதை களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் நம்மாழ்வார்.  பேரிகை என்ற இயற்கை  வழி வேளாண்மை மாத இதழையும் நடத்தி வந்தார். 
மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிராக  தொடர்ந்து போராடி வந்தார். தற்போதும் அவர்,  மீத்தேன் வாயு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவே பட்டுக்கோட்டை சென்றிருந்தார்.  அங்கே, லெனின் என்பவர் வீட்டில் தங்கியிருந்த அவர்,  உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது nakkheeran.in

சிதம்பரம் தெற்கு வாயிலை திறக்கக் கோரி முற்றுகை: பெரியார் கழகத்தினர் 115 பேர் கைது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரியும், கோயிலை அறநிலையத்துறை முழுமையாக கைப்பற்ற வலி்யுறுத்தி சிதம்பரத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 115 பேரை நகர போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் காந்திசிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் நடராஜர் கோயில் தெற்குவாயிலை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் அவர்களை வழிமறித்து 3 பெண்கள் உள்ளிட்ட 115 பேரை கைது செய்தார்

ஆம் ஆத்மி கெஜ்ரிவால் அறிவித்த 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டம் தள்ளிவைப்பு ! அப்புறம் ?

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதும், டெல்லியில் 700 லிட்டர் இலவச குடிநீர் திட்டத்தை இன்று அறிவிப்பதாக இருந்தது.  இந்நிலையில், டெல்லி யில் இலவச குடிநீர் திட்டம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போகிறது. 
முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு உடல் நலம் குன்றியதால் இது தள்ளிப்போகிறது என்று காரணம் கூறப் படுகிறது.  102 டிகிரி அளவிற்கு காய்ச்சல் உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் அப்புறம் ?

சிம்பு-ஹன்சிகா பிரிவு: சிம்ரன் குஷி ! ஹன்சிகாவுக்கு சீனியர் நடிகைகள் சிலர் தீவிர அட்வைஸ்

சென்னை: சிம்பு-ஹன்சிகா பிரிந்ததால் சிம்ரன் குஷியாக இருப்பதாக கூறப்படுகிறது.நயன்தாராவை பிரிந்த பிறகு பல நடிகைகளுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டார் சிம்பு. இந்நிலையில் ஹன்சிகாவை காதலிப்பதாக அவரே கூறினார். ஹன்சிகாவும் இதை டுவிட்டரில் உறுதிபடுத்தினார். சரியாக 6 மாதமே நீடித்த இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். சிம்புவை ஹன்சிகா காதலிக்கும்போதே அவருக்கு சீனியர் நடிகைகள் சிலர் தீவிர அட்வைஸ் செய்தனர். அதில் ஒருவர்தான் சிம்ரன். இந்த வயதில் உனக்கு சினிமா கேரியர்தான் முக்கியம். காதலில் விழாதே. அதிலிருந்து வெளியே வா என ஹன்சிகாவுக்கு அறிவுறுத்தினார் சிம்ரன். ஹன்சிகா மீது சிம்ரனுக்கோ மற்ற நடிகைகளுக்கோ அக்கறை கிடையாது. ஆனால் சீனியர் நடிகைகள் அட்வைஸ¢ செய்வதால் இதில் வேறு ஏதோ காரணம¢ இருப்பதாக கோலிவுட்டார் நம்பினார்கள். இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா காதல் முறிந்துள்ளது.

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை வளர்ச்சிக்கே வழிகாட்டும் குஜராத்திலும் 256 மாவட்டங்களிலும்


 செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில்.கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

யால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் “மங்கள்யான்” விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில். இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

புத்ரன் படத்தை வெளியிட முடியாமல் ஜெயபாரதி தவிப்பு ! film will hit Cannes !



Writer-turned-director Jayabharathi is ready with his debut flick, Puthiran. The film, which stars Y Gee Mahendra and Sangitha, deals with child abuse.
"The film will hit the screens in February. And we're planning to send the film to festivals including the Cannes, the preparation for which is on in full swing," he says. Jayabharathi tells us he was inspired by an article on child abuse and kidnapping that took place in Dharavi. "சென்சார் ஆன "புத்ரன்' படத்தை வெளியிட முடியாததால், மாணவர்களிடம் நிதி திரட்டி வெளியிடப் போவதாக சினிமா இயக்குநர் ஜெயபாரதி (படம்) தெரிவித்தார்.

"குடிசை' படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஜெயபாரதி. பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து படம் எடுக்கும் முறையை 1979-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர். மாணவர்களிடம் 90 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்து இந்த படம் எடுக்கப்பட்டது.
ஜெயபாரதி இதுவரை ஊமை ஜனங்கள், கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் உள்பட 7 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கி, தயாரித்துள்ள படம் "புத்ரன்'. குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் எடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி: பிரஷாந்த் பூஷண் ! கூடங்குளம் உதயகுமாருக்கு அழைப்பு.


உதயகுமாருடன் பிரஷாந்த் பூஷண்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 2 ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்துவரும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார். அங்கு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், ஜேசுராஜன், முகிலன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

தேவயானி கைதுக்கு சமரச தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை !


வாஷிங்டன்,
பெண் துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து நடந்த தவறுகளை ஆராய்ந்து, சமரச தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
இந்தியா அதிரடி
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவயானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. ஒரு ஊழல் அதிகாரிக்காக அமெரிக்காவுடன் சண்டை போடும் இந்தியா 

சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் ? உள்குத்து ?

சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அங்கு, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவார்கள். கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும். ஆனால் இந்த வழக்கை பொறுத்தமட்டில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதையடுத்து சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக பத்திரிகை தகவல்கள்கூறுகின்றன.
உள்துறை மந்திரி முகமது பின் நயீப்புக்கு பட்டத்து இளவரசர் சல்மான் அனுப்பியுள்ள தகவல் அறிக்கையில், ‘‘ஷரியத் சட்டம் (இஸ்லாமிய சட்டம்) எந்தவித விதிவிலக்குமின்றி அனைவருக்கும் பொருந்தும். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை என்று வித்தியாசம் எல்லாம் கிடையாது. நீதித்துறை தீர்ப்பில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அதுதான் இந்த நாட்டின் பாரம்பரியம். ஷரியத் சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’’ என கூறி உள்ளார்.இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல தெரிகிறது ! அரச குடும்பங்கள் என்றாலே சதி வலைகள்தானே 

படேல் சிலைக்கு இரும்பு சேகரிக்க 1,000 லாரிகள்

ஆமதாபாத்:குஜராத்தில், பிரமாண்ட, சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு தேவையான, மண், இரும்பை சேகரிக்க, 1,000 லாரிகள், நேற்று முன்தினம், ஆமதாபாத்திலிருந்து, நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டன.

பா.ஜ., பிரதமர் வேட்பாளர்:அந்த லாரிகளை, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, கொடியசைத்து அனுப்பி வைத்தார்.  இருக்கும் சிலைகள் மீது எச்சம் போடும் காக்கைகள் இதிலும் உட்கார்ந்து .. எச்சாம்தான் போடும்

7 ? முடியாது !.. தே.மு.தி.க.19 தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்கிறது !

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, ஏழு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பேச்சுவார்த்தையை, திரைமறைவில் தி.மு.க., மேலிடம் துவக்கியதற்கு, தே.மு.தி.க., தரப்பு இன்னும் பிடி கொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தங்களுக்கு, 19 லோக்சபா தொகுதிகளை தர வேண்டும் என, தே.மு.தி.க., பேரம் பேசுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.கடந்த, 2011ல் நடந்த, சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளை பெற்று, விஜயகாந்த் தலைமையிலான, தே.மு.தி.க., தேர்தல் களத்தை சந்தித்தது. அந்த கணக்கின் அடிப்படையில், தே.மு.தி.க., தங்கள் கூட்டணிக்கு வந்தால், ஏழு லோக்சபா தொகுதிகளையும், புத்தாண்டில் வரக்கூடிய, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியையும், அதற்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., தயாராக உள்ளது. ஓவர் பந்தா ஒடம்புக்கு ஆவது...தே.மு.தி.க கடைசியில் அனைத்து வாய்ப்பையும் விட்டு விட்டு திரிசங்கு நிலையில் இல்லமால் இருந்தால் சரி..

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

ஆம் ஆத்மி ! ஒற்றைக் கட்சியாகத் தானே இருக்க முயன்றால் காங்கிரஸ், பி.ஜே.பி வழியில் தேய்வதற்கான சாத்தியங்களே அதிகம்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருப்பதை அடுத்து , இன்று இந்தியா முழுவதும் மாற்று அரசியலை விரும்புவோர் மனதில் இருக்கும் கேள்வி – நம் ஊரிலும் ஆம் ஆத்மி சாத்தியப்படாதா ?
அரவிந்த் கெஜ்ரிவாலின் பிம்பத்தை முன்னிறுத்தியே கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் கட்சியை வளர்க்க முற்பட்டால், சோனியா, ராகுல், அத்வானி, மோடி, மாயாவதி போன்ற பிம்பங்களை முன்னிறுத்தி மாநிலக் கிளைகளை அந்தக் கட்சிகள் எல்லாம் வளர்க்க முயற்சித்து தோல்வியடைந்து கொண்டிருக்கும் அதே விளைவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்த விருப்பம் நிறைவேறும் சாத்தியங்கள் என்ன என்று பார்ப்பதற்கு முதலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு வெளியே வளரக் கூடிய அனைத்திந்திய கட்சியாகப் பரிமாணம் எடுக்கக் கூடிய கட்சியா என்று பார்ப்போம். ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவிலிருக்கும் மனிஷ் சிசோடியா, கோபால் ராய், சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா, குமார் விஸ்வாஸ், நவீன் ஜெய் ஹிந்த், தினேஷ் வகேலா, அஜித் ஜா, ஆனந்த் குமார், இலியாஸ் அஸ்மி, ஷாசியா இல்மி, ஹபுங் பயங்க், யோகேஷ் டாஹியா,எம்.பி.என்.பணிக்கர், அசோக் அகர்வால், கிரிஷ்காந்த் சவேடா, மாயாங்க் காந்தி, கேஷ் சின்ஹா, கிறிஸ்டினா சாமி என்று நீளும் 21 பேர் பட்டியலில் மூவரைத் தவிர மீதி அனைவரும் வட இந்தியாவின் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

காரைக்காலில் இரு கும்பலால் இளம்பெண் பாலியல் வல்லுறவு: இதுவரை 13 பேர் கைது

 காரைக்கால் நகரில் இளம்பெண் இரண்டு கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆனது.
இந்த வழக்கில் ஜெயகாந்தன் என்பவரை சிபிசிஐசி போலீஸார் கைது செய்தனர். ஃபைசல் என்பவர் காரைக்காலில் நேற்று மாலை சரணடைந்தார்.
இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுபவரும், ஏற்கெனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி, 1994-ல் மூன்று ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்றவருமான நாசர் என்பவர் உள்பட மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இரண்டு கும்பல்களால் வல்லுறவு
பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.

மக்கள் பாதுகாப்புக் கழகம் உதயம் ! அவைத்தலைவர் டிராபிக் ராமசாமி தென் சென்னையில் போட்டி!


மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கர் வக்கீல்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெருமாள் பொறுப்பேற்கிறார். பிரபர சமூக சேவகர் டிராபிக் ராமசாமி அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கட்சியின் உதயம் குறித்த செய்தியை திருச்சியில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராமசாமி. அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கர் வக்கீல்கள் சங்க பொதுச்செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார். மேலும் இந்த கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் நான் போட்டியிட உள்ளேன். புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்பு கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தற்போதுள்ள அதிமுக, திமுக கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சிகளின் முக்கிய நோக்கமாகும். இது நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களிடம் இந்த 2 கட்சிகளின் மீதான நல்லெண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டேன். மேல சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றில் கழிவு நீர் சேர்வதை தடுக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் 15 நாளில் இதனை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார். தவறினால் சட்ட ரீதியாக நிர்பந்தித்து கோர்ட் உதவியுடன் அதனை நிறை வேற்றுவேன். சமயபுரம் 4 ரோட்டில் இருந்து கோவில் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை கோர்ட் மூலம் எடுக்கப்படும். ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை குறித்து பல்வேறு ஆவணங்களை சேகரித்துள்ளேன். அவற்றில் உள்ள விதிமுறைகளின் படி பயனாளிகளுக்கு நிச்சயம் கிடைக்க ஆவண செய்வேன் என்றார் அவர்
tamil.oneindia.in உதயம் அவைத்தலைவர் 

கெஜ்ரிவால் பதவியேற்ற 6 மணிநேரத்தில் 2 அமைச்சரவை கூட்டங்கள் 9 அதிகாரிகள் இடமாற்றம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
புதுடெல்லி: டெல்லியில் முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்ற 6 மணி நேரத்துக்குள், முதல்வன்Õ பட பாணியில் அதிரடியாக 2 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டன. 9 அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த ராம்லீலா மைதானத்தில், பகல் 12 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று அவரும், அவரது அமைச்சர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பேசிய கெஜ்ரிவால், ஊழல் இல்லாத ஆட்சி ஏற்பட ஆம் ஆத்மி பாடுபடும் என்று தெரிவித்தார். பின்னர் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய காரை தவிர்த்துவிட்டு, 1.30 மணிக்கு தனது காரில் டெல்லி தலைமை செயலகத்துக்கு வந்தார். இரவு 7.30 மணி வரை அலுவல்களை கவனித்து விட்டு அதன்பிறகு வீட்டுக்கு சென்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாள் அவகாசம் தேவை: காதுல மிக பெரிய பூ சுத்துறாரா ?

டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகத்துக்கு சென்றார். முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பதவியேற்று  ஒரு நாள் ஆன நிலையில், அவரது வீட்டு முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்து மனுக்களை அளித்து வருகின்றனர். இதையடுத்து பேட்டி அளித்த அரவிந்த கெஜ்ரிவால், ’’டெல்லி மக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க 10 நாட்கள் அவகாசம் தேவை. நன் தவறான உறுதிமொழிகளை அளிக்க விரும்பவில்லை.  நாங்கள் இப்போதுதான் ஆட்சி அமைத்துள் ளோம். எங்களுக்கு சில காலங்கள் தேவைப்படும். உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  7 அல்லது 10 நாட் களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார் மக்களின் காதுல மிக பெரிய பூ சுத்திறாரா ?

பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை ! மறைமொழி அறிவியல் ஆய்வகம் ! பி.வி.என் மூர்த்தி

வேதங்கள் எழுதப்பட்ட மொழி "தமிழி' : ஆராய்ச்சியாளர் dnமூர்த்தி 
சென்னை பழமையான 4 வேதங்களும் "தமிழி' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.
மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில் வேதஸ்ரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பேசியது:
பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை "தமிழி' என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.
வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

ஊழல் இல்லா ஆட்சி: தில்லி புதிய முதல்வர் கேஜரிவால் உறுதி !

தில்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் (இடமிருந்து 4-வது) தனது அமைச்சரவை சகாக்களுடன் பொதுமக்களை நோக்கி கையசைக்கிறார். உடன்: (இடமிருந்து) சௌரவ் பரத்வாஜ், ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சத்யேந்திர ஜெயின், கிரீஷ் சோனி, மணீஷ் சிசோடியா." தில்லி முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் (இடமிருந்து 4-வது) தனது அமைச்சரவை சகாக்களுடன் பொதுமக்களை நோக்கி கையசைக்கிறார். உடன்: (இடமிருந்து) சௌரவ் பரத்வாஜ், ராக்கி பிர்லா, சோம்நாத் பார்தி, சத்யேந்திர ஜெயின், கிரீஷ் சோனி, மணீஷ் சிசோடியா.
"தில்லியில் "ஆம் ஆத்மி' கட்சி உறுதி அளித்தது போல, ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும்; அதற்குப் பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்' என்று புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டார்.

ஆம் ஆத்மி ஆரம்பமா? மோடி ஆரம்பமா? ? எதைக்கண்டு பாஜக பயப்படுகிறது ?


ஆம் ஆத்மிக்கு பயப்படுவது பிஜேபியா, காங்கிரசா?


டெல்லியில் மூன்று சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து வென்று ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி கூடத் தன்னை வீழ்த்திய ஆம் அத்மி கட்சியைக் கண்டு பயப்ப்டுவதாகத் தெரியவில்லை. ஆனால் பி.ஜே. பி பேசுவதையும் செய்வதையும்பார்த்தால் அதுதான் ஆம் அத்மிக்கு அதிகம் நடுங்குவதாகத் தெரிகிறது.

தானாக முன்வந்து ஆதரவு அளிப்பதாகச் சொன்ன காங்கிரசின் ஆதரவை ஏற்றுக் கொண்டு ஆட்சி அமைக்க ஆம் அத்மி கடைசியில் ஒப்புக் கொண்டதை பிஜேபியின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆம் ஆத்மி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்கிறார்கள். முதலமைச்சர் கனவுடன் இருந்த பிஜேபி வேட்பாளர் ஹர்ஷ் வரதன். ஆட்சியை இழந்த ஷீலா தீட்சித்தை விடக் கோபமாக பேட்டிகள் அளிக்கிறார்.
அத்தனை பிஜேபியினரும் ஆம் ஆத்மி காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிட்டதே என்று புலம்பித் திட்டுகிறார்கள். இதைக் கூட்டணி என்று வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லி பொய்யை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். இது கூட்டணி அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் அறிவு நாண்யம் இல்லாமல் அதை சொல்லி வருகிறார்கள்.

மீனவர் பிரச்னைக்காக டில்லியில் கால்கடுக்க காத்திருந்த தி.மு.க.! நேரம் பார்த்து வெறுப்பேற்றியது காங்.

திமுக மீது வெறுப்பை கொட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்துக் கூட சில காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் கருத்து எழுதுகிறார்கள். ஆட்சியில் உடனிருக்கும் போதும், இப்போதும் மக்கள் பிரச்சினைக்காகத்தான் திமுக போராடுகிறது. அதற்காக காத்தும் கிடக்கிறது. அன்று உள்ளிருப்பு போராட்டம்...எளிதாக மறைக்கப்பட்டது. இன்று வெளியிலிருந்து போராட்டம் என்பதால் அவமானப்படுத்துவதாக செய்தி. கூட்டணிக்கட்சிக்குரிய மரியாதையை காங்கிரஸ் கொடுத்திருந்தால் அதை கூடா நட்பு என்று விமர்சித்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
மீனவர் பிரச்னைக்காக சந்தித்து முறையிடுவதற்கு கூட, பிரதமர் அலுவலகத்தில் நேரம் வாங்க முடியாமல், திணறும் நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. ஒருநாள் காத்திருப்புக்கு பின், பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு, அளிக்கப்பட்டு உள்ளது
தீவிரம்:
இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற, தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், தி.மு.க., தரப்பு, தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, கட்சியின் மூத்த எம்.பி., - டி.ஆர்.பாலு மூலமாக, தி.மு.க., காய் நகர்த்தியது.மீனவ பிரதிநிதிகளை, பிரதமரிடம் அழைத்துச் சென்று, சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டார். இதற்காக, நேரம் ஒதுக்கும்படி, தி.மு.க., தரப்பில், பிரதமர் அலுவலகத்திற்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும், தங்களுக்கு அழைப்பு வரும் என, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அழைப்பு வரவில்லை. இதனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு சென்று, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சனி, 28 டிசம்பர், 2013

ஜெ.சி.டேனியல் ! மலையாள சினிமாவின் தந்தை ஒரு தமிழர்


ஜெ.சி.டேனியல் - மறக்கப்பட்ட தமிழரின் மரியாதைக்குறிய பதிவு! ஆம் ஆண்டு மலையாளத்தின் முதல் அசையும் திரைப்படமான ‘விகட குமாரன்’ படத்தை எடுத்தவர் தமிழரான ஜெ.சி.டேனியல். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய
பணக்காரர் இவர்(கன்னியாக்குமரி மாவட்டம்
அப்போது கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  சினிமாவின் மீது உள்ள காதலால் பம்பாய்க்கும், மதராஸுக்கும் சென்று சினிமா கற்றுக்கொண்டு தன் சொத்துக்களை எல்லாம் விற்று சொந்தமாக ஒரு கேமரா வாங்கி தன் சொந்த ஸ்டூடியோவை கேரளாவில் துவங்கினார். இந்தியிலும், தமிழிலும் இதிகாசங்களும் புராணங்களும் திரைப்படங்களாக வந்த நேரத்தில் வாழ்வியலை சொல்லும் சமுகம் சார்ந்த கதையை திரைப்படமாக எடுத்தார் ஜெ.சி.டேனியல். இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரும் நடிக்கவராத காரணத்தால் கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுகிற சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் தெருக்கூத்துக் கலைஞரை நாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்தும் இருந்தார்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது

பெரம்பலூர்:முதன்முறையாக இலங்கை அகதிகளுக்கு இந்திய நாட்டின் குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இதற்காக பெரம்பலூர் நகராட்சியில் அகதிகளுக்கு புகைப் படம் எடுக்கும்பணி தொடங்கியது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1983க்கு பிறகு பல்வேறு கட்டங்களில் அங்கு சொத்து, சொந்தங்களை இழந்து உயிர் பிழைக்க அகதிகளாக தாய் தமிழகத்துக்கு வந்தனர். இவர்கள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
 பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே உள்ள முகாமில் 84குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பஅட்டையோ, இந்திய நாட்டின் வாக்காளர் அடையாள அட்டையோ இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கென சிறப்பு ஒதுக் கீட்டில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொதுவிநியோகத்திட்ட உணவுப் பொருட் கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த திட்டங்கள் மூலம் ஏழை மக்களை பாதுகாத்தவர் ஜெயலலிதா: பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சிறந்த திட்டங்கள் மூலம் ஏழை மக்களை பாதுகாத்தவர் ஜெயலலிதா: பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சென்னை, டிச.28–
வடசென்னை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகில் நடந்தது.
வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா எம்.பி. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் மதுசூதனன், சென்னை மேயர் சைதை துரைசாமி, பேச்சாளர்கள் நடிகர் ராமராஜன், நடிகை சி.ஆர்.சரஸ்வதி, நடிகர் குண்டு கல்யாணம், தியாகு மற்றும் சிந்தை ஆறுமுகம் ஆகியோர் பேசினார்கள்.
பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியால் கடுமையான பொருளாதார நெருக்கடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இதனால் விலைவாசி உயர்ந்தது. விலைவாசி உயர்ந்தாலும் ஏழை–எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் பாதுகாத்தார். பன்னீரு சொந்தமாக சிறிய டீக்கடை வைத்து தானே டீ ஆத்திகொண்டிருந்தார் . இந்த பன்னீரை சி எம் ஆக்கியது ஜெயலலிதாவே , அதனால் பன்னீரு உண்மையே சொல்லுதே 

நித்தியானந்தாவையும் ரஞ்சிதாவையும் மறைந்த மா ஆனந்தமாயியின் ஆத்மா மன்னிக்கட்டும்

தற்போது நடிகை ரஞ்சிதா மா ஆனந்தமையி என்ற புது பெயரை சூடிகொண்டுள்ளார் . மறைந்த மா ஆனந்தமாயியின் பெயரை நித்தியானந்தா உள்ளது கொடுமையாகும்


Sri Anandamayi Ma (Bengali: শ্রী আনন্দময়ী মা) (30 April 1896 - 27 August 1982) was an Indian saint from Bengal. Swami Sivananda (Divine Life Society) described her as "the most perfect flower the Indian soil has produced."[2] Precognition, healing and other miracles were attributed to her by her followers.[3] Paramhansa Yogananda translates Anandamayi as "joy-permeated". This name was given to her by her devotees in the 1920s to describe what they saw as her habitual state of divine joy and bliss.
en.wikipedia.org/wiki/Anandamayi_Ma

டெல்லியின் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு


டெல்லியின் 7-வது முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றார். 45 வயதில் முதல்வரானதன் மூலம் டெல்லியின் முதல் இளம் முதல்வர் என்ற பெருமையை கெஜ்ரிவால் பெற்றுள்ளார். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லியின் முதல் இளம் முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்: 6 அமைச்சர்களும் பதவியேற்பு அவரைத் தொடர்ந்து ராக்கி பிர்லா, மணீஷ் சிசோடியா, சோம்நாத் பாரதி, சவுரப் பரத்வாஜ், கிரீஷ் சோனி, சத்யேந்திர ஜெயின் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 26 வயதான ராக்கி பிர்லாதான் இளம் அமைச்சர். முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால், பதவியேற்பு விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு மெட்ரோ ரயிலில் வந்தார். அவரைப்போல அமைச்சர்களாக பதவியேற்பவர்களும் மெட்ரோ ரயிலில் தான் வந்தனர்.

10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு

சென்னை: 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும், 3டி அனிமேஷன் முறையிலும், கணினி மூலம் பயிற்சி பெறும் சிடிக்களும் உள்ளன. 12ம் வகுப்பு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், 3டி அனிமேஷன் முறையில் ஒலி, ஒளியுடன் விளக்க சிடிக்கள், சமச்சீர் பாடத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கு டிவிடிக்கள் உள்ளன. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சிசிஇ முறையில் முறையில்Work Sheet, NCRET  மற்றும் Conceptsஆகியவை உள்ளடங்கிய சிடிக்களும் உள்ளன. மேலும்Olympaid, IIT Preparation, Spoken English, Phonics, TNPSC, UPSC, Tally, Quiz, Yoga
உள்பட பல பொறியியல்   சிடிக்கள், திருக்குறள், பாரதியார்   பாடல், கதைகள்  , ராமாயணம், மகாபாரதம் உள்ளன. கல்வி டிவிடி கண்காட்சி டிசம்பர் 20ம் தேதி முதல்   மயிலாப்பூர் குளம் அருகில், தாம்பரத்தில் நகராட்சி அலுவலகம் அருகில், அருணா ஜானகி மஹால். அம்பத்தூரில் திருமால் மஹால் முருகன் கோயில் அருகில், கோயம்பேடு மற்றும் போரூர் ஏ.வி.  எஸ் புத்தக கண்காட்சி வளாகத்திலும் நடக்கிறது. நிரந்தர ஷோரூம் எண் 50, மார்சல்ஸ் ரோடு, லட்சுமி அபார்ட்மென்ட், ராஜரத்தினம் மைதானம் எதிரில், எழும்பூர் சென்னை,8. மேலும் விவரங்களுக்கு 98945 79294, 93802 84061 என்ற எண்களிலும் அருகில் உள்ள புத்தக கடைகளிலும் தொடர்பு கொள்ளவும் தினகரன்.com 

M.R.Radha எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார் !


எம்.ஆர்.ராதா தன்னை சுட்டுவிட்டு சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். எனக்குச் சொன்ன அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்:– கோயம்புத்தூரில், ராதாண்ணனுக்கு வேண்டிய யாரோ ஒரு செல்வந்தர் படம் எடுக்கப் பணம் கொடுக்கிறதா சொல்றதாகவும், அதனால் ஒரு மாசத்துல படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்குத் தகுந்த மாதிரி நான் சேர்ந்தாற்போல ‘கால்ஷீட்’ தரணும்னு
முத்துக்குமரன் பிக்சர்ஸ் வாசு எங்கிட்டே கேட்டாரு.
போன தடவை மாதிரி இப்பவும் அவர் தவறான தகவல் கொடுத்து, மறுபடியும் என்னை மாட்ட வைக்கப்பாக்கிறதா என் மனசுல பட்டுச்சு. எப்படின்னா அவர் எப்பவுமே அழுத்தந்திருத்தமா பேசமாட்டாரு. நழுவி நழுவிப் பேசுவாரு. அதை வச்சு அவர் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு நான் சொன்னேன்...
பணம் கொடுக்குறவுங்க யாரா இருந்தாலும் சரி, அவுங்களை எங்கிட்டே அழைச்சிட்டு வாங்க. அவுங்களோட நான் நேர்ல பேசி, நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப்புறம்தான் என் கால்ஷீட்டைப் பற்றி நான் முடிவு செய்வேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.
இப்படி நான் சொல்லிக்கிட்டிருக்கும்போது – அதாவது வாசு உட்கார்ந்திருந்த பக்கம் அவர் முகத்தைப் பார்த்து நான் பேசிக்கிட்டிருக்கும்போது – ராதாண்ணன் என் ஓரமா நடந்துக்கிட்டிருந்தார். அப்போ என்னாச்சுன்னா... என்று எம்.ஜி.ஆர். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் கீழ் முனையை எனது இடது காதுக்குள் நுழைத்தபின்பு...
‘இப்போ சட்டுன்னு என் பக்கம் திரும்புங்க’ என்றார். எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார்

எம்.ஆர்.ராதா : கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி. ! ரிவால்வரைக் கொண்டு போனது ! குடிச்சிட்டுப்போனது.!

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றது குறித்து எம்.ஆர்.ராதா என்னிடம் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:–
எம்.ஆர்.ராதா:– இதோபார், நீ என் புள்ளை மாதிரி. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஒரு உண்மையை உங்கிட்டேதான் சொல்றேன். நான் பெரியார் வழியைப் பின்பற்றுறவன். இந்த சத்தியம் அது இதுன்னு எல்லாம் சொல்லி எனக்குப் பழக்கம் இல்லே. உண்மைன்னா உண்மை. அவ்வளவுதான்.
நான் சுடணுங்குற எண்ணத்துல துப்பாக்கியோட தோட்டத்துக்குப்போகலே. சுடணும்னு முடிவு பண்ணியிருந்தா ஸ்டூடியோவுலேயே வச்சி சுட்டிருப்பேன் இல்லியா?
சுட்டுடுவேன்னு சொல்லி ரிவால்வரைக்காட்டி சும்மா மிரட்டுறதுக்காகத்தான் கொண்டு போனேன். அதுவும் ஏன்? இரண்டு மாசத்துக்குள்ளே முடிச்சு ரிலீஸ் பண்ணணும்னு திட்டம் போட்டு தொடங்கின ‘‘பெற்றால்தான் பிள்ளையா’’ படம் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாமல் லேட்டாகி வருஷக்கடைசிக்கு வந்திடுச்சி.
அதனால் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகலே. வட்டி இல்லாம வெறும் கைமாத்தா வாசுவுக்கு நான் கொடுத்த லட்ச ரூபாய் பணத்தை சொன்னபடி எனக்குத் திருப்பிக் கொடுக்க அவனால் முடியவில்லை.
எம்.ஜி.ஆரை வச்சு படம் தொடங்கினா போதும். எல்லா ஏரியாவும் வித்து பணம் கைக்கு வந்திடும். அதுல எனக்குக் கொடுக்கவேண்டிய லட்ச ரூபாயைக் கொடுத்திட்டு பாக்கிய வச்சுப் படத்தை முடிச்சிடலான்னு வாசு சொன்னதை நான் நம்பிட்டேன். அவன் தப்புக்கணக்கு போட்டான். அது நடக்கலே. கடைசியில எல்லா பாரமும் என் தலைக்கு வந்திடுச்சி.

ரியல் எஸ்டேட்: இனி ஏமாற்றுவது எளிதில்லை!

ஆகஸ்ட் 14... ‘ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா’ மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களை ஏமாற்றி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் பில்டர்களை யும் கிடுக்கிப்பிடி போடும் மசோதா! பல்வேறு கடுமையான விதிகளைக் கொண்ட இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அபார்ட்மென்ட் என்றால் என்ன, பொதுப் பகுதி, கார்பெட் பகுதி, விளம்பரம், ரியல் எஸ்டேட் புராஜெக்ட் உள்ளிட்ட அனைத்துக்கும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்ட, இந்த விதிமுறைகளின் கீழ்தான் ரியல் எஸ்டேட் துறை இயங்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. எல்லாத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகுதான், தங்களுடைய திட்டங்கள் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பில்டர்கள் விளம்பரம் செய்து, அதை விற்பனை செய்ய முடியும் என்பதும் இதன் விசேஷ அம்சம்!

மோடி விசாரணைக்கு பதிலடி? ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை ! பா.ஜ.க. அரசு அறிவிப்பு


ஜெய்ப்பூர்,
மோடி மீது இளம்பெண் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க முடிவெடுத்த மறுநாளே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது நில மோசடி தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா அரசு அறிவித்துள்ளது.
விசாரணை கமிஷன்
குஜராத் மாநிலத்தில் கட்டிடக்கலை வல்லுநரான ஒரு இளம்பெண்ணை உளவு பார்க்க உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய மந்திரி சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதனை மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே அறிவித்தார்.

குஜராத் கலவரம்: வேதனையை விவரிக்க வார்த்தை இல்லை- மோடி ! கொலையும் செய்துவிட்டு அதற்காக கண்ணீரும் விட்டு

குஜராத் கலவரத்தின்போது தனக்கு ஏற்பட்ட வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை குஜராத் கலவரம் தொடர்பான ஊடகங்களின் கேள்விகளை மோடி பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அந்த கலவரம் தொடர்பாக அவர் வருத்தமோ, மன்னிப்போ கோரவில்லை என்று கூறப்படும் நிலையில் முதல்முறையாக அவர் மனம் திறந்துள்ளார்.
வலைப்பதிவில்..
குஜராத்தில் 2002-ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தனது இணையதள வலைப்பதிவில் அவர் மிக உருக்கமாக எழுதியிருப்பதாவது:
நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு மன நிம்மதியை அளித்துள்ளது. இந்த நேரத்தில் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து பார்க்கிறேன். முதல்முறையாக எனது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். 

சிற்றரசோ, பேரரசோ பதவிச் சண்டை எப்போதும் உண்டே! கம்போடிய கலைக்கோயில்கள்- (பாகம்-3):

கம்­போ­டிய  அர­சு­க­ளுக்கு  எப்­போதும்  சுமத்­தி­ராவில் ஆட்சி செய்த ஸ்ரீ விஜயா அர­சாலும், ஜாவாவில் ஆட்சி செய்த   சைலேந்­தி­ரர்­க­ளாலும் ஆபத்து இருந்து கொண்டே  இருந்­தது. சைலேந்­தி­ரர்கள்  இந்து  மன்­னர்­க­ளாக  இருந்த போதும் ஆட்­சியை  விஸ்­த­ரிக்கும்  நோக்கில்  கம்­போ­டி­யா­விற்குள்  புகுந்து மன்­னனைக் கொன்று ஆட்­சி­யைக்­கைப்­பற்றி  இரண்டாம்  ஜெய­வர்­மனைச் சிறை பிடித்து ஜாவா­விற்கு கொண்டு போனார்கள்.
ஆனால் அவன் எப்­ப­டியோ ஜாவா சிறையில் இருந்து தப்பி கடல் மார்க்­க­மாக  கம்­போ­டியா வந்தான். பிறகு சைலேந்­தி­ரர்­களைப் பழி­வாங்கும் எண்­ணத்­தோடு சித­றிக்­கி­டந்த வீரர்­களைத் திரட்டி கெமர்  ராச்­சி­யத்தைக்  கட்­டி­யெ­ழுப்பி 790 இல் ஆட்­சிக்கு வந்தான்.  ஜாவா சிறையில் இருந்து தப்பி வந்­த­தனால் இவன் செல்­வாக்கு மக்­க­ளி­டையே பர­வி­யது.
இந்­தோ­னே­ஷி­யாவின் சைலேந்­தி­ரர்­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பகு­தி­களை மீட்டு சுதந்­தி­ர­மான கெமர் பேர­ரசை வலு­வாக்­கினான். மன்­னர்­களே கடவுள் என்ற « இறை­ய­ரசன் » God king எனும் மதக்­கோட்­பா­டு­களை மக்­க­ளி­டையே பரப்பினான்.

பெங்களூரு வந்த ரயிலில் தீ; 23 பேர் பலி !

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர்பலியாயினர். பலர் காயம் அடைந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் நான்டட் பகுதியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த நான்டட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நான்டட் எக்ஸ் பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 3.45 மணியளவில் .விபத்து ஏற்பட்டது இவ்விபத்தி்ல் 23பேர் பலியாயினர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தி்ல உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு்ள்ளதாக கூறப்படுகிறது. 5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.  
dinamalar.com