ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மீனவர் பிரச்னைக்காக டில்லியில் கால்கடுக்க காத்திருந்த தி.மு.க.! நேரம் பார்த்து வெறுப்பேற்றியது காங்.

திமுக மீது வெறுப்பை கொட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்துக் கூட சில காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் கருத்து எழுதுகிறார்கள். ஆட்சியில் உடனிருக்கும் போதும், இப்போதும் மக்கள் பிரச்சினைக்காகத்தான் திமுக போராடுகிறது. அதற்காக காத்தும் கிடக்கிறது. அன்று உள்ளிருப்பு போராட்டம்...எளிதாக மறைக்கப்பட்டது. இன்று வெளியிலிருந்து போராட்டம் என்பதால் அவமானப்படுத்துவதாக செய்தி. கூட்டணிக்கட்சிக்குரிய மரியாதையை காங்கிரஸ் கொடுத்திருந்தால் அதை கூடா நட்பு என்று விமர்சித்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
மீனவர் பிரச்னைக்காக சந்தித்து முறையிடுவதற்கு கூட, பிரதமர் அலுவலகத்தில் நேரம் வாங்க முடியாமல், திணறும் நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது. ஒருநாள் காத்திருப்புக்கு பின், பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு, அளிக்கப்பட்டு உள்ளது
தீவிரம்:
இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற, தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், தி.மு.க., தரப்பு, தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, கட்சியின் மூத்த எம்.பி., - டி.ஆர்.பாலு மூலமாக, தி.மு.க., காய் நகர்த்தியது.மீனவ பிரதிநிதிகளை, பிரதமரிடம் அழைத்துச் சென்று, சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டார். இதற்காக, நேரம் ஒதுக்கும்படி, தி.மு.க., தரப்பில், பிரதமர் அலுவலகத்திற்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும், தங்களுக்கு அழைப்பு வரும் என, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அழைப்பு வரவில்லை. இதனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வீட்டிற்கு சென்று, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நேரம் ஒதுக்கவில்லை:



மீனவர்கள் பிரச்னைக்காக என்று கேட்டும், பிரதமர் அலுவலகம், வெள்ளிக்கிழமை அன்று, நேரம் ஒதுக்கவில்லை. இத்தனைக்கும், அன்று முழுவதும், டில்லியில், பிரதமருக்கு மிக முக்கிய அலுவல்கள் ஏதும் இருந்ததாக தகவல் இல்லை.இருப்பினும், மீனவர் பிரச்னையில், காங்கிரஸ் அலட்சியம் காட்டுவதாக ஆகிவிட கூடாது என்பதற்காக, ஒருநாள் முழுவதும், தி.மு.க.,வை தவிக்க வைத்த பின், நேற்று, பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க, அனுமதி அளிக்கப்பட்டது.'வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, தி.மு.க., தலைமை அறிவித்ததால் தான், காங்., தலைவர்கள், இந்த காத்திருப்பு அரசியலை அரங்கேற்றியதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


பேச்சுவார்த்தை:



பிரதமருடனான சந்திப்புக்கு பின், தி.மு.க., - எம்.பி.,.க்கள் கூறுகையில், 'தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலமாக, மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக, பிரதமர் வாக்குறுதி அளித்துள்ளார். மீனவ பிரச்னைக்கு, தீர்வு காணும் வகையில், வரும் ஜன., 20ம் தேதி, இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு, டில்லியிலோ அல்லது சென்னையிலோ, ஏற்பாடு செய்யப்படும்,' என்றனர்.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக