சனி, 28 டிசம்பர், 2013

M.R.Radha எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார் !


எம்.ஆர்.ராதா தன்னை சுட்டுவிட்டு சுட்டுக்கொண்ட நிகழ்ச்சி குறித்து எம்.ஜி.ஆர். எனக்குச் சொன்ன அந்த செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்:– கோயம்புத்தூரில், ராதாண்ணனுக்கு வேண்டிய யாரோ ஒரு செல்வந்தர் படம் எடுக்கப் பணம் கொடுக்கிறதா சொல்றதாகவும், அதனால் ஒரு மாசத்துல படத்தை எடுத்து ரிலீஸ் பண்றதுக்குத் தகுந்த மாதிரி நான் சேர்ந்தாற்போல ‘கால்ஷீட்’ தரணும்னு
முத்துக்குமரன் பிக்சர்ஸ் வாசு எங்கிட்டே கேட்டாரு.
போன தடவை மாதிரி இப்பவும் அவர் தவறான தகவல் கொடுத்து, மறுபடியும் என்னை மாட்ட வைக்கப்பாக்கிறதா என் மனசுல பட்டுச்சு. எப்படின்னா அவர் எப்பவுமே அழுத்தந்திருத்தமா பேசமாட்டாரு. நழுவி நழுவிப் பேசுவாரு. அதை வச்சு அவர் மேல எனக்கு சந்தேகம் வந்துச்சு. அவருக்கு நான் சொன்னேன்...
பணம் கொடுக்குறவுங்க யாரா இருந்தாலும் சரி, அவுங்களை எங்கிட்டே அழைச்சிட்டு வாங்க. அவுங்களோட நான் நேர்ல பேசி, நிலவரத்தைத் தெரிஞ்சிக்கிட்டு, அவர் உத்தரவாதம் கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தப்புறம்தான் என் கால்ஷீட்டைப் பற்றி நான் முடிவு செய்வேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.
இப்படி நான் சொல்லிக்கிட்டிருக்கும்போது – அதாவது வாசு உட்கார்ந்திருந்த பக்கம் அவர் முகத்தைப் பார்த்து நான் பேசிக்கிட்டிருக்கும்போது – ராதாண்ணன் என் ஓரமா நடந்துக்கிட்டிருந்தார். அப்போ என்னாச்சுன்னா... என்று எம்.ஜி.ஆர். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அதன் கீழ் முனையை எனது இடது காதுக்குள் நுழைத்தபின்பு...
‘இப்போ சட்டுன்னு என் பக்கம் திரும்புங்க’ என்றார். எப்படி சுட்டார் என்று எம்ஜியாரே எனக்கு விபரித்தார்

நான் அவ்வாறே திரும்பினேன். அந்த வேகத்தில் எம்.ஜி.ஆர். என் காதுக்குள் வைத்த பேனா வழுக்கிக் காதுக்குக்கீழே கழுத்துப்பகுதிக்கு வந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். தொடர்ந்தார்:–
இப்போ உங்களுக்கு புரியும்படியாக சொல்றேன். (பேனாவை எடுத்து உயர்த்திக்காட்டி) இந்தப்பேனா தான் ராதாண்ணனோட ரிவால்வர். அதன் முனையை அவர் என் காதுக்குள்ளே வச்சதும், ஏதோ ஒண்ணு காதுக்குள்ளே நுழையுதே என்னான்னு பார்க்க சட்டுன்னு திரும்பினேன் இல்லியா – அந்த வேகத்தில் காதுக்குள்ளே இருந்த ரிவால்வர் முனை வழுக்கிக் கழுத்துப்பக்கம் வரவும் ராதாண்ணன் அடுத்தடுத்து சுட்ட அந்த இரண்டு       குண்டுகளும் என் கழுத்துக்குள்ளே போயிடுச்சி.
நான் காதைக் கையால பொத்திக்கிட்டு, ‘அண்ணே! என்ன இப்படி செஞ்சிட்டிங்க’ன்னு கேட்டபடியே எங்கே மறுபடியும் சுட்டுடுவாரோன்னு நினைச்சு ஒரு நொடியில் பாய்ந்து, சோபாவுக்குப் பின்னால உட்கார்ந்து மறைஞ்சிக்கிட்டேன்.
நான் செத்து விழுந்திட்டேன்னு அவர் முடிவு பண்ணிட்டார். ‘அடப்பாவி! என்னடா இப்படி பண்ணிட்டே’ என்று சொல்லி வாசு தாவி ராதாண்ணன் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்க எத்தனிச்சாரு.
ஆனால் அதுக்குள்ளே அவர் ரிவால்வரை தன் உச்சந்தலையில் வச்சி இரண்டு தடவை தனக்குத்தானே சுட்டுக்கிட்டார். தலையிலிருந்து ரத்தம் கொட்டுச்சு. வாசு அவர் கையிலிருந்த ரிவால்வரைப் பிடுங்கி வீசி எறிஞ்சார்.
நான் வெளியே ஓடிவந்து காரில் ஏறிட்டேன்.
சத்தம் கேட்டு அந்தப்பக்கம் மெயின் வீட்டிலேருந்து அம்மாவும், நம்ம ரத்தினம் அண்ணனும், திருப்பதி சாமியும் ஓடிவந்தாங்க. என்னைப் பார்த்துவிட்டு அம்மா அலறினாங்க.
‘உள்ளே போய் ராதாண்ணனைப்பாருங்கன்னு’ அவுங்ககிட்டே சொல்லிட்டு நான் காரில் வேகமாக வெளியே போயிட்டேன். நேரா ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப்போய் அட்மிட் ஆயிட்டேன்.
கொஞ்ச நேரத்துல ராதாண்ணனும் போலீசால் அங்கு கொண்டு வரப்பட்டார்.
எங்க இரண்டு பேரையும் போலீஸ் பந்தோபஸ்தோட ஒரே வேன்ல ஏற்றி இங்கே ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டாந்தாங்க. (மிக்க உணர்ச்சிவசப்பட்டு)
உடனே என்னை ஆபரேஷன் தியேட்டருக்குக்  கொண்டுபோய் மயக்க மருந்து கொடுத்தாங்க. அதுவரைக்கும்தான் எனக்குத் தெரியும். அப்புறம் மயக்கமாயிட்டேன். அதுக்கப்பறம்... என்பதற்குள் ஜானகி அம்மா குறுக்கிட்டு – தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி...
அம்மா:– போதுங்க, போதும். இனிமே பேசாதீங்க. (தேவரண்ணனிடம்) அண்ணே! தயவு பண்ணி நீங்க புறப்படுங்க. அவர் ரொம்ப களைச்சிப்போயிட்டாரு. அவரைப்படுக்க வச்சு தூங்க வைக்கணும். புறப்படுங்க என்றார். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த நாள் காலை ஒன்பது மணி! தேவர் பிலிம்ஸ் அண்ணனின் அறையில் அமர்ந்து அவரும் நானும் முந்தின நாள் எம்.ஜி.ஆர். சொன்னதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம் dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக