ஞாயிறு, 29 டிசம்பர், 2013

அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க 10 நாள் அவகாசம் தேவை: காதுல மிக பெரிய பூ சுத்துறாரா ?

டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலகத்துக்கு சென்றார். முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு, துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பதவியேற்று  ஒரு நாள் ஆன நிலையில், அவரது வீட்டு முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்து மனுக்களை அளித்து வருகின்றனர். இதையடுத்து பேட்டி அளித்த அரவிந்த கெஜ்ரிவால், ’’டெல்லி மக்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க 10 நாட்கள் அவகாசம் தேவை. நன் தவறான உறுதிமொழிகளை அளிக்க விரும்பவில்லை.  நாங்கள் இப்போதுதான் ஆட்சி அமைத்துள் ளோம். எங்களுக்கு சில காலங்கள் தேவைப்படும். உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  7 அல்லது 10 நாட் களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார் மக்களின் காதுல மிக பெரிய பூ சுத்திறாரா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக