செவ்வாய், 31 டிசம்பர், 2013

திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்! லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம்


  லோக்சபா தேர்தல்- திமுக அணியில் இணைந்தது புதிய தமிழகம்! சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் 'தற்போதைய தோழமை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் திமுக போட்டியிடும்' என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் தலைவர் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, லோக்சபா தேர்தலில் திமுகவை ஆதரிப்போம் என்றார்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக