சனி, 28 டிசம்பர், 2013

சிற்றரசோ, பேரரசோ பதவிச் சண்டை எப்போதும் உண்டே! கம்போடிய கலைக்கோயில்கள்- (பாகம்-3):

கம்­போ­டிய  அர­சு­க­ளுக்கு  எப்­போதும்  சுமத்­தி­ராவில் ஆட்சி செய்த ஸ்ரீ விஜயா அர­சாலும், ஜாவாவில் ஆட்சி செய்த   சைலேந்­தி­ரர்­க­ளாலும் ஆபத்து இருந்து கொண்டே  இருந்­தது. சைலேந்­தி­ரர்கள்  இந்து  மன்­னர்­க­ளாக  இருந்த போதும் ஆட்­சியை  விஸ்­த­ரிக்கும்  நோக்கில்  கம்­போ­டி­யா­விற்குள்  புகுந்து மன்­னனைக் கொன்று ஆட்­சி­யைக்­கைப்­பற்றி  இரண்டாம்  ஜெய­வர்­மனைச் சிறை பிடித்து ஜாவா­விற்கு கொண்டு போனார்கள்.
ஆனால் அவன் எப்­ப­டியோ ஜாவா சிறையில் இருந்து தப்பி கடல் மார்க்­க­மாக  கம்­போ­டியா வந்தான். பிறகு சைலேந்­தி­ரர்­களைப் பழி­வாங்கும் எண்­ணத்­தோடு சித­றிக்­கி­டந்த வீரர்­களைத் திரட்டி கெமர்  ராச்­சி­யத்தைக்  கட்­டி­யெ­ழுப்பி 790 இல் ஆட்­சிக்கு வந்தான்.  ஜாவா சிறையில் இருந்து தப்பி வந்­த­தனால் இவன் செல்­வாக்கு மக்­க­ளி­டையே பர­வி­யது.
இந்­தோ­னே­ஷி­யாவின் சைலேந்­தி­ரர்­களின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பகு­தி­களை மீட்டு சுதந்­தி­ர­மான கெமர் பேர­ரசை வலு­வாக்­கினான். மன்­னர்­களே கடவுள் என்ற « இறை­ய­ரசன் » God king எனும் மதக்­கோட்­பா­டு­களை மக்­க­ளி­டையே பரப்பினான்.

தலை­ந­க­ரத்தை முதலில்  ‘இந்­தி­ரபுரா’ என்ற இடத்­திலும் பிறகு ‘ஹர்­த­ராலயா’ என்ற இடத்­திலும் கடை­சி­யாக மகேந்­தி­ர­பர்­வத மலையில் அமைந்த  ‘மகேந்­தி­ர­புர’  என்ற இடத்­திலும் அமைத்தான். ஆனால் காலப்­போக்கில் ஹர்த்ராலயா­விற்குத் தலை­ந­க­ரத்தை மீண்டும்  கொண்டு போய் 45 ஆண்­டுகள் ஆட்சி செய்தான்.
இந்த 45 ஆண்­டிற்குள் கெமர் ராச்­சி­யத்தை   வலு­வான பேர­ர­சாக்­கி­ய­தோடு   கெமர் பேர­ரசின் கட்­டடக்­க­லையைத்   தொடங்கி வைத்­தது போல்   குடீஸ்­வரா (Kutisvara) என்ற கோயிலைக் கட்­டினான். இக்­கோ­விலில் சிவா, விஷ்ணு, பிரமா ஆகிய உருவச் சிலைகள் இருந்­தன.
அது சிறிய கோயி­லாக இருந்த போதும் அதுதான் கெமர் பேர­ரசின் மாபெரும் கோயில்கள் கட்ட தொடக்­க­மாக அமைந்­தது. 45 ஆண்­டுகள் கெமர் பேர­ரசை வலு­வா­ன­தாக்கி கடை­சிக்­கா­லத்தில் பர­மேஸ்­வரா என்ற பெய­ரோடு மறைந்தான் இண்டாம் ஜெய­வர்மன்.
இரண்டாம் ஜெய­வர்­ம­னுக்கு பிறகு மூன்­றா­வது ஜெய­வர்மன் (835–-877 முத­லா­வது இந்­தி­ர­வர்மன் 877-–886) முத­லா­வது யசோ­வர்மன் (889–-915) முத­லா­வது ஹர்­ஸ­வர்மன் (915–-923) இரண்டாம் இஷா­ன­வர்மன் (923–-928) நாலாவது  ஜெய­வர்மன் (928-–941) இரண்­டா­வது  ஹர்­ஸ­வர்மன் (941-–944) ராஜேந்­திர வர்மன் (944–-968) ஐந்­தா­வது ஜெய­வர்மன் (968–-1000) முத­லா­வது உத­யா­தித்­தி­ய­வர்மன் (1001-–1002) ஜெய­வீ­ர­வர்மன் (1002–-1010) என்று அடுத்­த­டுத்து கெமர் பேர­ரசைத் தொடர்ந்து ஆண்டு வந்­தார்கள்.
இவர்­களில் முத­லா­வது  இந்­தி­ர­வர்மன், முத­லா­வது  யசோ­வர்மன், ராஜேந்­தி­ர­வர்மன்  ஆகிய மன்­னர்­களைத் தவிர மற்ற மன்­னர்கள் ஒன்­றி­ரண்டு கோயில்­களை மட்­டுமே கட்­டி­னார்கள். இவர்­களில் முத­லா­வது இந்­தி­ர­வர்மன் இந்திரட­டகா (Indra Taka) பகு­தியில்  ‘பகொங்’  என்ற பெயரில் முத­லா­வது மலைக் கோயிலைக் கட்டி அதில் கெமர் பேர­ரசின் மன்­னர்­களின் விப­ரத்­தையும் அவர்கள் கட்­டிய கோயில்­களின் விப­ரத்­தையும் ஆட்­சி­யையும் பதிவு செய்தான்.
இவ­னுக்குப் பின் வந்த மன்­னர்­களும் இவ­னைப்­பின்­பற்றி தங்கள் ஆட்சி குறித்து பதிவு செய்­தனர். அநே­க­மாக இந்தப் பதி­வுகள் சமஸ்கிரு­தத்­திலும் பாளி­யிலும், கெமர் மொழி­யிலும் இருந்­தன. முத­லா­வது  இந்­தி­ர­வர்­ம­னுக்குப் பிறகு முத­லா­வது  யசோ­வர்மன் எட்டு இந்து கோயில்­களைக் கட்­டினான்.
அவற்றில் முக்­கி­ய­மா­னது  ‘நொம் பெகங்’ (Khnom Bakeng) என்ற மலைக்­கோயில், மன்­னனின் ஆல­ய­மான இந்­தக்­கோ­யிலை  ‘அங்கோர் கோயில்’ கட்­டு­வ­தற்கு முன்னர் கட்­டி­யதால் முத­லா­வது  அங்கோர் என்று அழைத்­திருக்கிறார்கள்.
ஒளியின் கட­வு­ளான சூரி­ய­னுக்­காகக் கட்­டப்­பட்­டது என்­பதை உறுதி செய்­வது போல் இந்த மலைக் கோயிலில் சூரிய உத­யத்­தையும் மறை­வையும் கண்டு மகி­ழலாம் அங்­கி­ருந்து, சூரிய ஒளியில் இப்­போது அங்கோர் வாட்டைக் காணலாம். ஆனால் அது கட்­டி­ய­போது அங்கோர் வாட் கட்­டப்­ப­ட­வில்லை.
முத­லா­வது  இந்­தி­ர­வர்­ம­னுக்குப்  பிறகு வந்த முத­லா­வது யசோ­வர்மன் எட்டு    இந்து கோயில்­களைக் கட்டி வைத்தான். தந்தை   இந்­தி­ர­வர்மன் விட்­டுப்­போன கோயில்­க­ளையும் கட்டி முடித்தான். ஆனால் அவ­னு­டைய சகோ­த­ரனால் ஏற்­பட்ட   தக­ராறில் தனது  தலை­ந­கரை அங்கோர் என்ற இடத்­திற்குக் கொண்டு போனான். அங்கு (Baheng) பாக்ஹெங் என்ற மலையில்  ‘யசோத புர ’  புதிய தலை­ந­கரை உரு­வாக்­கினான்.
ஜெய­வீ­ர­வர்­ம­னுக்குப் பிறகு முத­லா­வது சூரி­ய­வர்மன் (1002–1049) ஆட்­சிக்கு வந்தான். ஆனால் 9 வரு­டங்கள் ஜெய­வீ­ர­வர்­ம­னுக்கும் முதலாம் சூரி­ய­வர்­ம­னுக்கும் ஆட்­சியைப் பிடிப்­பதில் சகோ­தர யுத்தம் நடந்­தது. அதில் வெற்றி பெற்­றது முதலாம் சூரி­ய­வர்மன். அவன் வெற்றி பெற்­றது சரி­யா­னது என அங்கோர் சரித்­திரம் சொல்­கி­றது. அவன் உள்­நாட்டுப் பாது­காப்பைப் பெருக்கி, மிகப்­பெ­ரிய வலு­வான படை­களை உரு­வாக்­கினான்.
பிறகு கெமர் பேர­ர­சிற்கு எப்­போதும் அச்­சு­றுத்­த­லாக இருக்கும். தாய் இருக்கும் தாய்­லாந்தின் வட­ப­கு­தி­யையும் லாவோ என்ற அர­சையும் லாவோஸ் நாட்டின் தென்­ப­கு­தி­யையும் கைப்­பற்றி சயாம் வளை­குடா (இன்று தாய்­லாந்து வளை­குடா) வில் தனது ஆதிக்­கத்தை நிறு­வினான்.
14 ஹெக்­டேயர் பரப்பில் அரச மாளி­கையை கட்­டு­வித்து பிராந்­தி­யத்தில் புத்த மதம் செல்­வாக்காய் இருந்­ததால், இந்து பிரா­ம­ணர்­களை தன் பக்கம் வைத்­தி­ருந்த போதும் புத்­தத்­து­ற­வி­க­ளோடு தொடர்பும் வைத்­திருந்தான். எட்டு கிலோ மீட்டர் சுற்­ற­ளவில் செயற்­கை­யாக குளத்தைக் கட்­டினான். இந்தக் குளத்தின் நடுவில் ஒரு விஷ்ணு கோயி­லைக்­கட்­டு­வ­தற்­காக ஒரு செயற்கை குளந்தை உரு­வாக்­கினான். இந்­தக்­குளம் குறித்து ஒரு கர்ண பரம்­பரைக் கதை உண்டு.
ஒரு நாள் இந்தக் குளத்தில் உள்ள முத­லை­யொன்று மன்­னரின் சிறிய மகளைப் பிடித்து விழுங்­கி­யது. ஆனால் அதைக் கண்ட அரசின் பாது­கா­வ­லர்கள் அந்த முத­லையைப் பிடித்­துக்­கொன்று அதன் வயிற்றில் இருந்து அந்த இள­வ­ர­சியை உயி­ரோடு மீட்­ட­னராம். அந்தக் குளம் இப்­போதும் மக்­களின் பயன்­பாட்டில் உள்­ளது. பெரி­ய­குளம் என்­பதால் நீரில் இறங்கி மிதக்கும் விமா­னங்கள் இப்­போதும் இறங்­கு­கின்­றன. இள­வ­ரசன் சிஹானுக் காலத்தில் அவ­ரு­டைய வெளி­நாட்டு பய­ணிகள் கடல் விமா­னத்தில் வந்து இறங்­கி­யி­ருக்­கின்­றனர்.
முத­லா­வது சூரி­ய­வர்­ம­னுக்குப் பிறகு இரண்­டா­வது உத­யா­தித்­த­வர்மன் (1050–-1066) ஆட்­சிக்கு வந்து பாபூன் (Bapuon) என்ற பெயரில் சிவ­னுக்கு ஒரு கோயி­லைக்­கட்­டினான். அதன் வடக்கு கோபுரம் தங்­கத்­தாலும் அதனை விட உயரமாக  இன்­னொரு கோபு­ரத்தை வெண்­க­லத்­திலும்  கட்­டி­ய­தாக சீனத்­தூ­துவர்   Zhoudagun என்­பவர் 13 ஆம் நூற்­றாண்டில் தெரி­வித்தார்.
இந்­துக்­கோயில்  ஐந்­த­டுக்கில் பிரமிட் பாணியில் உரு­வா­னது. மேற்கு கோபுரச் சுவர்­களில்   ராமா­யணம், மகா­பா­ர­தத்தின் முக்­கிய காட்­சிகள், சிவன் அர்­சு­ன­னுக்கு வில் அம்பு கொடுக்கும் காட்சி என்­பன தத்­ரூ­ப­மாக செதுக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு கோபுரச் சுவர்­களில் ராமன் அயோத்தி திரும்­புதல், பீஸ்­மரின் மரணம் என்­பன செதுக்­கப்­பட்­டுள்­ளன.
தென் பகுதி கோபுரச் சுவர்­களில் கிருஷ்­ணனின் வாழ்க்கை வர­லாறு, கம்ஷன் வதம் செய்தல் என்­பன மிக அழ­காகத் தத்­ரூ­ப­மாகச் செதுக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றை­யெல்லாம் செதுக்க நூற்­றுக்­க­ணக்­கான சிற்­பிகள் மாதக்­க­ணக்கில் வேலை செய்­தி­ருக்க வேண்டும். அவர்கள் அனை­வரும் தமிழ் நாட்­டி­லி­ருந்து போயி­ருக்­க­வேண்டும். ஆனால் இன்று அந்தக் கோயிலின் பல பாகங்கள் சிதைந்து கிடக்­கின்­றன. அவற்றைப் புன­ர­மைக்கும் பணிகள் நடந்து வரு­கின்­றன.
இரண்டாம் உத­யா­தித்தவர்­ம­னுக்கு பிறகு மூன்­றா­வது ஹர்­ச­வர்மன் (1066–1080) ஆறா­வது ஜெய­வர்மன் (1080–1107) தர­ணீந்­தி­ர­வர்மன் (1107-–1112) ஆகியோர் கோயில்கள் எதுவும் கட்­டாது இருக்­கிற கோயில்­களைப் பரா­ம­ரித்து ஆட்­சியை சிதை­யாது காத்து வந்­தனர்.
ஆனால் இவர்­க­ளுக்குப் பிறகு அவர்கள் வாரிசுகளுக்கு ஆட்சி போதாமல் வேறு ஒருவர் கைக்குச் சென்றது. அரசு என்றாலும், இன்றைய அரசாங்கம் என்றாலும், கட்சி என்றாலும், கழகம் என்றாலும் பதவியைப் பறிக்கும் சதி நடந்து கொண்டே இருக்கும் என்பதை எல்லாம் நாட்டு வரலாறுகளும் சொல்கின்றன. இதற்கு அங்கோர் பேரரசு மட்டும் விதி விலக்கா? என்ன?
ஆறா­வது ஜெய­வர்­மனும், தர­ணீந்­தி­ர­வர்­மனும் சகோ­த­ரர்­க­ளாக இருந்த போதும் அவர்கள் வாரி­சுக்கு ஆட்சி போக முடி­யாமல் திடீ­ரென்று சதி­யொன்றை செய்து மரு­மகன் முறை­யான இரண்டாம் சூரியவர்மன் ஆட்சிக்கு வந்தான். அவன் வந்த விதத்தில் குற்றம் இருந்த போதும் குற்றமெல்லாம் மறைந்து போகக்கூடிய மாபெரும் சாதனையை இன்றும் உலமே வியந்து பார்க்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டினான்.
(தொடரும்…)
மாத்தளை சோமு, அவுஸ்திரேலியா ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக