சனி, 28 டிசம்பர், 2013

பெங்களூரு வந்த ரயிலில் தீ; 23 பேர் பலி !

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர்பலியாயினர். பலர் காயம் அடைந்தனர்.
மகராஷ்டிரா மாநிலம் நான்டட் பகுதியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த நான்டட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. நான்டட் எக்ஸ் பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள கொத்தசேவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிகாலை 3.45 மணியளவில் .விபத்து ஏற்பட்டது இவ்விபத்தி்ல் 23பேர் பலியாயினர். படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அனந்தபூர் மற்றும் தர்மாவரத்தி்ல உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏறபட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு்ள்ளதாக கூறப்படுகிறது. 5-க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தும் விதமாக ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.  
dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக