செவ்வாய், 31 டிசம்பர், 2013

இலங்கையில் தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டியது இந்தியா


இலங்கையில் உள்நாட்டில் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்த மக்களுக்கு 2-வது கட்டமாக 43 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2013 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் வீடுகளைக் கட்டும் இலக்கு நிறைவேறும் தருவாயில் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு 16 ஆயிரம் வீடுகளும், 2015 ஆம் ஆண்டு 17 ஆயிரம் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும். கடந்த மே மாதம் கிழக்குப் பகுதியில் தொடங்கப்பட்ட வீடு கட்டும் திட்டத்தில் 66 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 400 வீடுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இலங்கையில் மொத்தம் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இதற்காக ரூ. 1,372 கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. இலங்கைக்கு ஒரு நாடு குறிப்பிட்ட திட்டத்துக்காக அளிக்கும் அதிகப்படியான நிதி இதுவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக