செவ்வாய், 31 டிசம்பர், 2013

டெல்லியில் மின் கட்டணம் பாதியாக குறைப்பு ! கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி: டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள கெஜ்ரிவால், 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மானியம் தரப்படும் என்று அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் 28 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.


மின் விநியோக நிறுவனம் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மின் நிறுவனங்களை ஆய்வு செய்ய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நிறுவன ஆய்வு முடிந்ததும் மேலும்ங கட்டணம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மின் கட்டண குறைப்பால் டெல்லி அரசுக்கு கூடுதலாக ரூ.61 கோடி செலவாகும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். dinakaran .com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக